Saturday, February 12, 2011

டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியம்: ஒரே கவரில் 9 "ஹால்டிக்கெட்'கள்

பழநி : டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், வி.ஏ.ஓ., தேர்விற்கு தயாராகும் பலர், ஏமாற்றத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.







வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பிப்., 20 ல் நடக்க உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பழநி அருகே பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு, நேற்று ஹால்டிக்கெட் கவர் வந்தது. இதைப் பிரித்தபோது, பொன்னுச்சாமி உட்பட ஒன்பது பேரின் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின், ஹால்டிக்கெட்கள் இடம்பெற்றிருந்தன.







பொன்னுச்சாமி கூறுகையில், ""தவறுதலாக ஒரே கவரில் வந்திருக்கலாம். பிறரது ஹால்டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்திற்கே திருப்பி அனுப்ப உள்ளேன்,'' என்றார். மேலும் போட்டோவுடன் விண்ணப்பித்த சிலருக்கு, போட்டோ, தவறுதலான முகவரி போன்றவற்றுடன் அனுப்பப்பட்டு உள்ளது. இத்தேர்வை நம்பி பலர் ஏற்கனவே பார்த்துவந்த பணியை விட்டுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, தேர்விற்கு தயாராகி வந்தனர். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், பலர் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.