சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தானும், ரஞ்சிதாவும் சேர்ந்து சாமியாரிடம் பணம் கறப்பதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக லெனின் கருப்பனே கூறியதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரத்தில் சாமியார் நித்தியானந்தர் தான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். வீடியோ விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் உண்மையை உலகுக்கு சொல்வேன் என்றும் சாமியார் தனது விளக்கத்தில் கூறி விட்டார்.
ஆனால் ரஞ்சிதா எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்தபோதே... அவர் சாமியாருடன் சென்று விட்டார், சாமியாரின் ஆசிரத்தில் தலைமறைவாக உள்ளார்.... ரஞ்சிதா வாய் திறக்க மறுக்கிறார்... என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் வாரஇதழ் ஒன்றிற்கு நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சுவாமி நித்தியானந்தருடன் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். என்னை பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்து பெண். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும், கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறுவயது முதல் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த வீஸிங் பிரச்சனையை ஒரே நாளில் அவர் சரி செய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன். காலை பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்...
இவ்வாறு ரஞ்சிதா கூறியதாக அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

No comments:
Post a Comment