ஜப்பானில் யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணியளவில் (இந்திய நேரப் படி நேற்று இரவு 8.31 மணி) பூமி குலுங்கியது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் என்னதோ! ஏதோ! என அலறியபடி எழுந்தனர்.
பின்னர் தான் நில நடுக்கம் என உணர்ந்தனர். இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சீறி எழுந்தது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதை தொடர்ந்து வீடு களில் இருந்து அலறியடித்த படி மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு தேடி ரோடுகளுக்கு ஓடினர். இதனால் பதட்டமும், பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆகவே, பதட்டத்தில் இருந்த மக்கள் அமைதி அடைந்தனர்.
இதற்கிடையே, நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் மையம் அறிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால், யரோன் தீவில் கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டதாக இவான் பிராகின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இது போன்ற நில நடுக்கத்தை தான் உணர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். சமார் 6 வினாடிகள் பூமி குலுங்கியதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜப்பானில் கடந்த 1995-ம் ஆண்டு 7.2 ரிக்டர் அளவில் கோப் துறைமுகத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 6,400 பேர் பலியானார்கள். தற்போது 7.3 ரிக்டர் அளவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே சேத மதிப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment