Tuesday, March 23, 2010

நித்யானந்தா, பிரேமானந்தா பரபரப்பு சந்திப்பு இடம் : திருச்சி மத்திய சிறை

(பிரேமானந்தா கண்களை மூடி தியானத்தில் இருக்க நித்யா உள்ளே நுழைகிறார்)
நித்யா: ஓம் சங்கராச்சார்ய நமஹ! சுவாமி! சுவாமி!
பிரேமா: அட! நித்யா! வா குழந்தாய்! மங்களம் உண்டாகட்டும்
நித்யா: அடப்போங்க சாமி! அதுக்கெல்லாம் இனி வாய்ப்பேயில்ல!. அதுக்குள்ள தான் என் மேல கேஸ போட்டுட்டானுங்களே! இனி மங்களமும் உண்டாகாது, மகேஸ்வரியும் உண்டாகாது.
பிரேமா: அடச்சீ! என்னேரமும் அதே நெனப்பு தானா? நான் சொன்னது வேற அர்த்தத்தில தம்பி.
நித்யா: சாமி! நான் வரும்போது தாங்கள் நித்ய சிஸ்டையில் இருந்தது போலத் தெரிந்ததே?
பிரேமா: அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது மகனே! நைட்டெல்லாம் என் ரூம்மெட்கள் விடும் குறட்டையால் இரவில் தூக்கமே வருவது கிடையாது.பகலில் தூங்கினால் ஜெயிலர்கள் பட்டையைக் கிளப்பிவிடுவார்கள். அதனால் தான் தியானம் செய்கிற சாக்கிலே தினமும் சற்று அசந்து விடுவேன். அதெல்லாம் விடு தம்பி! தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? என்ன திடீரென்று திருச்சி விஜயம்? அதுவும் ஏன் இந்த‌ திடீர் சந்திப்பு?
நித்யா: ஊருக்கு ஊரு சந்தி சிரிச்சி போனதால தான் இந்த சந்திப்பு சுவாமி. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ள என்ன அரெஸ்ட் பண்ணப் போறதா என் சீடர்கள் செய்தி கொண்டு வந்துவிட்டார்கள்.சரி ஒரு முன்னோட்டமா ஜெயில் எப்படி இருக்கும்னு பாத்துட்டு போகலாமுன்னு ஒவ்வொரு ஊரா போயி விசாரிக்கிறேன். இங்க தான் சுவாமி இருக்கீங்கல்ல! அதான் ஜெயில் வாழ்க்கையைப் பற்றி கேட்டுத்தெரிஞ்சிக்கிட்டு போகலாமுன்னு வந்தேன்.
பிரேமா: ஓஹோ! மெயின் பிக்சர் வர்றதுக்கு முந்தி டிரைலர் மாதிரியா? அதெல்லாம் சரி தம்பி, கண்ண மூடிக்கிட்டு பாப்பேன்னு மேடைக்கு மேடை உதார் உடுற உன்னால, உன் ரூமுக்குள்ள‌இருந்த கேமிராவ‌ ஏன் பார்க்க முடியாம போச்சி????
நித்யா: அதில்ல சாமி! அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் என் ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா இருந்திச்சி. அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தேன். அந்த நேரம் பாத்து எவனோ ஆட்டயக் கலச்சிட்டான்.
பிரேமா: (மனசுக்குள்: அடப்பாவி எங்கிட்டயேவா?) என்னய்யா இது செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற! தம்பி நானும் உன்ன மாதிரி தொழில்காரன் தான். எங்கிட்டயே ஞானதிருஷ்டி பூன திருஷ்டின்னு பிலிம சுத்தாதே! அதவிடு உன் பிறந்த நாள்,வருசம் என்னன்னு சொல்லு. உன் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு கணிச்சிப் பார்ப்போம்.
நித்யா: அதுவந்து சாமி! நான் பொறந்த பத்தாவது நாளு,இமயமலையில உள்ள சித்தர், ரஜினிகாந்த்து குருநாதரு, பாபா வச்ச பேரு.....
பிரேமா: ஏய்!ஏய்! நிப்பாட்டுய்யா! நானும் உன்ன மாதிரி பெரிய ரவுடி தான். கேட்டதுக்கு பதில சொல்லுன்னா ஊருக்கு சொல்ற கதைய என்கிட்டயும் அளந்துவிடுற?
நித்யா: சாரி சாமி! பொதுக்கூட்டமுன்னு நெனச்சிட்டேன்.01/01/1978 ல பொறந்தேன். நான் பொறந்த பத்தாவது நாளு ஒரு பெரிய ஜோசியர்..
பிரேமா: இது என்னடா இம்சையா போச்சி! ஏய் நிப்பாட்டுய்யா.. நானும் உன்னமாதிரி தொழில்காரந்தான்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன்,மறுபடி மறுபடி அதே ரிக்கார்ட ஓட்டுற‌!என்னப் பத்தி ஒனக்குத் தெரியாது, கடுப்பானா கமெண்டலத்த தூக்கி அடிச்சிப்புடுவேன். ஒழுங்கா சொல்லு.
நித்யா: 1/1/1978 ல பொறந்தேன் சுவாமி. 1990 லிருந்து 1993 வரை ஒரு கல்லூரியிலே மெக்கானிக்கல் இன்சினியரிங் முடிச்சேன். அதுக்கப்பறம் 10 வருசம் என் ஞானத்தேடல் காரணமா 1/1/2000த்தில் இமயமலையில இருக்குற பாபாஜி மூலம் என் பெயரை நித்யானந்தா என மாத்திக்கிட்டேன்.
(இதைக் கேட்டவுடன் பிரேம்ஜி தரையில் படுத்து புரண்டு புரண்டு சிரிக்கிறார்)
நித்யா: என்ன சாமி! நான் என்ன ஜோக்கா சொல்லிக்கிட்டு இருக்கேன்! இப்படி சிரிக்கிறீங்களே!
பிரேமா: இல்ல தம்பி! 1978 ல பிறந்த ஒருவன் 1990ல ஏழாவது தான் படிக்க முடியும். எப்படி பாலிடெக்னிக் இன்சினியரிங் படிக்க முடியும்? 1993 லிருந்து 2000 வரைக்கும் இடைப்பட்ட காலம் 7வருசம் தான். ஆனா நீ 10 வருஷம்னு உன் வெப்சைட்ல போட்டு இருந்த. இப்படி ஆரம்பமே பெரிய புளுகு மூட்டையா இருக்கே! உன்னய போயி எப்படி சாமின்னு ஏத்துக்கிட்டாய்ங்கே!
நித்யா: சுவாமி! எனக்கு பில்டிங்க் ஸ்டிராங்கு, பேஸ்மட்டம் ஃபுல் வீக்குங்கிறத இப்ப நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இனிமே உசாராயிடுறேன்.நீங்க என் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு பாருங்க!
பிரேமா: குருமேடு..சுக்கிரமேடு..புதன்மேடு... உன் ஜாதகப்பிரகாரம் நீ எப்பவோ.....
நித்யா: ராஜகுருவா ஆயிருக்கனுமா?
பிரேமா: இல்ல மகனே! எப்பவோ உள்ள வந்திருக்கனும்! என்ன செய்றது பெரிய பெரிய தலைங்கலையெல்லாம் மடக்கிப் போட்டுட்ட. அதுவும் அந்த சரக்கு மாநிலத்து சி.எம் உன் ஆஸ்தான சீடராமே!
நித்யா: ஆமா சுவாமி! ஆனா இப்ப யாரு சிபாரிசும் கதைக்குஆவாது. என் மேல 6 கேஸ புக் பண்ணிடுச்சி காவல்துறை. எல்லாமே சினிமாவில வர்ற மாதிரி நடக்குது.
பிரேமா: சினிமான்னதும் ஞாபகம் வருது! நீ ஏதோ சினிமா படம் எடுக்கப்போறதா ஒரு நியூஸ் கசியுதே?
நித்யா: இந்தச் செய்தி உங்க வரைக்கும் வந்திடுச்சா! உண்மைதான் சாமி! "நான் அவன் இல்லை 3" அப்டின்னு ஒரு படம் எடுக்கலாம்னு நெனச்சி அறிவிப்பு உட்டேன். அடுத்த நிமிசம் பாருங்க, நம்ம ஷகிலா, ஷர்மிலி, ரேஷ்மா, மரியா,சிந்துக்கிட்டேயிருந்து வரிசையா போனு. சுவாமி நிச்சயமா அதுல எங்களுக்கு ஒரு சீன் வைக்கனும்னும், தேவைன்னா இப்பவே சாம்பிள் சீன் ரிகர்சல் பார்க்க நாங்க ரெடின்னும் போன் மேல போன் பண்றாங்க. சாம்பிள் பாத்து வாங்க நான் என்ன ஸ்வீட்டா ஆர்டர் பண்ணப் போறேன்!!!??. நான் எவ்வளவு தான் தாங்குவேன் சாமி?
பிரேமா: அடப்போய்யா! நம்மள மாதிரி சாமியாருங்க வாயிலேந்து லிங்கம் எடுத்து வச்சமா, 4 பெண்கள‌ வாந்தி எடுக்க வச்சமான்னு இல்லாம நீ என்னய்யா புதுசா சினிமா படம் எடுக்குறேங்கிற , நான் சென்ஸ்.!
நித்யா: அட நீங்க வேற சாமி! உங்க லிங்கம் எடுக்குற மேட்டற நீங்கதான் மெச்சிக்கனும்., அதான் கருப்புச் சட்டைக்காரன் ஊருக்கு ஊரு மேடையைப் போட்டு உங்கள விட பெரிய பெரிய லிங்கமா எடுத்துக்காட்டி நம்மள மாதிரி ஆளுகள கிழிகிழின்னு கிழிக்கிறானே!!
பிரேமா: அவனுக்கு லிங்கந்தான்யா எடுக்க முடியும்,வெள்ளக்காரிய வாந்தி எடுக்க வைக்க முடியுமா?
நித்யா: என்னமோ வாந்தி எடுக்க வக்கிற மேட்டர வாரனாசி யுனிவர்சிட்டியில‌ வாங்குன பட்டம் மாதிரி பேசுறீங்க. இதெல்லாம் கேட்டு சனங்க உசாரானா சங்கு தான். அதெல்லாம் பரவாயில்ல சாமி! என் மேட்டர வச்சி எல்லாரும் தன்னோட ரேட்டிங்க ஏத்திக்கிறாங்க. இவன பாருங்க, எதிரொலியில என்னயப் பத்தி இது 3வது பதிவு.
பிரேமா: ஏம்பா! பெரிய பெரிய மீடியாக்களெல்லாம் உன் வீடியோவ கண்டினிவா காட்டி ரேட்டிங்க் ஏத்தும் போது, ஆப்ட்ரால் இவன் பிளாக்குல‌ தானய்யா எழுதுறான். விடுய்யா போயிட்டு போறான்.
நித்யா: இதுகூட பெரிய விசயமில்லை சாமி! என் வீடியோவில எல்லாரும் அவங்க கம்பெனி லோகோவைப் போட்டு அதுக்கு காப்பிரைட்டும் போட்டு சம்பாதிக்கிறாங்க. திருட்டு விசிடிக்கு போராடுற திரையுலகம் இந்த மேட்டர்ல வாய்பொத்தி இருக்கு. இதுவும் ஒருவகையில திருட்டி விசிடி தானே சுவாமி.
பிரேமா: உன் ஆதங்கம் புரியுது நித்யா! அதுக்கெல்லாம் ஒரே வழி தான் இருக்கு. மொதல்ல நாம "தென்னிந்திய சாமியார்கள் சங்கம்" அப்டிங்கிற பேர்ல ஒரு சங்கத்த பதிவு செஞ்சி இனிமே இது மாதிரி திருட்டு விசிடி வெளியிட்டா அத எதிர்த்து போராடுனும். அதுமட்டுமல்லாம நமக்கு ஒரு வினியோகஸ்தர்கள் சங்கமும் ஆரம்பிச்சி நம்மகிட்ட இருக்கிற வீடியோவெல்லாம் அவங்க மூலமாத்தான் வெளியிடனும்னு ஒரு தீர்மானம் போட்டாத்தான் இவனுங்க திருந்துவானுங்க!.,
நித்யா: நல்ல யோசனை சுவாமி! முயற்சி பண்ணலாம்!
பிரேமா: அதுசரி நித்யா! நீ ஞானபீடம்கிற பேர்ல ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க இருந்ததா ஒரு தகவல் கசிந்ததே!
நித்யா: ஆமாம் சுவாமி! எல்லா வேலையும் முடிஞ்சி ரெண்டு மூனு என்.ஆர்.ஐய மடக்கி வச்சிருந்தேன். எங்க? அதுக்குள்ள தான் என்னய மடக்கிப் போட்டுட்டாங்களே!
பிரேமா: ச்சே! டிவி சேனல் மட்டும் ஆரம்பிச்சிருந்தா இந்த வீடியோவ நாம காட்டி வெளம்பரங்கள அள்ளியிருக்கலாம்.
நித்யா: அட ஏன் சாமி வெந்த புண்ணுல வெடிய வெக்கிறீங்க! நீங்களும் என்ன புரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தானா? நான் சட்டப்பூர்வமா எந்த தப்பும் செய்யல சாமி! நான் ஒரு பாலியல் ஆராச்சியாளன்.
பிரேமா: ஓஹோ! ஆராய்ச்சி தியேரி முடிஞ்சி பிராக்டிகல் பண்ணும் போது தான் படம் புடிச்சிட்டானுங்களா?
நித்யா: கரெக்ட் சுவாமி! ஒரு சுவாமி மனசு ஒரு சுவாமிக்குத் தான் தெரியும்.
பிரேமா: ஆமா நமக்கு மட்டும் தானே தெரியும் நம்ம சீக்ரெட் ஆப் எனெர்ஜி. என் காதுலயே இந்த மாதிரி பூவச்சுத்துற நீ மத்தவன் காதுலயெல்லாம் பெரிய மாலையை சுத்துவேன்னு எனக்கு இப்பதானே புரியுது! சும்மா மொக்கயப் போடாம அடுத்த கேள்விய கேளப்பா!
நித்யா: நம்மள மாதிரி இவ்வளவு ஆளுங்க வரிசையா மாட்டியும் இந்த சனங்க எதைப்பத்தியும் கண்டுக்காம மறுபடியும் நம்மகிட்டயே வர்றத நெனச்சா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அந்த தப்ப நான் தான் செஞ்சேன்னு நானேஒத்துக்கிட்டாலும் , இவங்க அத ஒத்துக்க மாட்டாங்க. அதுசரி சாமி! நாம மட்டும் தான் இப்படியா? அல்லது எல்லா சாமியார்களும் இப்படித்தானா?
பிரேமா: உண்மையான சாமியார்களுக்கு சொத்து சுகம் எதுக்கு?பிச்சையெடுத்துக்கிட்டு கோயிலே கதின்னு கெடக்குற அந்த சாமியார்கள ஒப்பிடும் போது நாம சுழியந்தான். இந்த மாதிரி சாதுக்களுக்கு நம்ம மக்கள் ஒருவேள சோறுகூடப் போடாம வெரட்டி அடிக்குவாங்க. ஆனா நம்மள மாதிரி தாழ்தள சொகுசு சாமியார்களுக்கு கோடிகோடியா கொண்டு வந்து கொட்டுவாங்க. தாழ்தள, சொகுசு, தங்கரத சாமியார்கள் எல்லாரும் நம்மள மாதிரி தான். என்ன‌, இன்னும் மாட்டாதவனெல்லாம் வெளிய இருக்கான். நாம மாட்டிக்கிட்டோம் உள்ள இருக்கோம்.
நித்யா: சுவாமி! நாமன்னு ஏன் என்னையும் சேத்து சொல்றீங்க,நான் இன்னும் வெளிய தானே இருக்கேன்.
பிரேமா: சீக்கிரமே குட் ஜெயிலி பிராப்பிரஸ்து...
நித்யா: ரொம்ப முக்கியம் இந்த ஆசிர்வாதம். அவனவனுக்கு இங்க புளிய கரைக்கிது. அதெல்லாம் விடுங்க சாமி ஜெயில் வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க.
பிரேமா: காத்தால 5 மணிக்கு எந்திரிச்சி கதவேயில்லாத கழிவறையில உக்காந்து , தண்ணியே இல்லாத கிணத்துல,அடிப்பாகமே இல்லாத வாளியாள தண்ணி எறச்சி, கையே படாம....
நித்யா: சுவாமி...!
பிரேமா: உண்மையதான்யா சொல்றேன். இங்க ஷவரெல்லாம் கிடையாது, வெஸ்டர்ன் டாய்லெட்டெல்லாம் கிடையாது. காலைல பல்லுவெளக்க சமயக்கட்டுப் பக்கம் போனா அங்க அடுப்புச்சாம்பல் கிடைக்கும், ஆனா அதுக்கு ரொம்ப ரிமாண்டு. அத எடுக்க நம்ம ரேசன் கட கியூ மாதிரி காத்தால 4 மணிக்கே கூட்டம் ஆரம்பிச்சிடும். அது கிடைக்காட்டி கக்கூசுக்கு பின் சுவத்துல காரை பேர்ந்த செங்கல், அதுவும் கிடைக்காட்டி கடைசியா வேப்பங்குச்சி தான். இந்த வேப்பங்குச்சியோட மருத்துவகுணம் இருக்கே!
நித்யா: போதும் நிப்பாட்டுங்க சாமி! முடியல! சிக்னல் பேஸ்ட்டால பல்லு வெளக்கிய எனக்கு வேப்பங்குச்சியும், செங்கற்பொடியுமா?எல்லாம் என் நேரம்!
பிரேமா: அதான் இப்ப உன் சிக்னல் வீக் ஆயி கெடக்குல! அப்பறம் என்ன பகுமானம்? அது மட்டுமில்ல தம்பி, ஆஸ்ரமம் மாதிரி இங்க உதவிக்கு ஆளெல்லாம் கிடையாது. எல்லாமே செல்ஃப் சர்வீஸ்தான்.
நித்யா: எல்லாமேன்னா?
பிரேமா: எல்லாமேன்னா நீ நெனக்கிற மாதிரி இல்ல. சாப்பாடு வரிசையில் நின்னு நாமே வாங்கனும்னு சொன்னேன்.
நித்யா: அப்பறம்?
பிரேமா: வேகாதா சோறு, பருப்பேயில்லாத சாம்பாரு,புளியேயில்லாத ரசம்
நித்யா: வாரா வாரம் சிக்கன் போடுறதா கேள்விப்பட்டேனே!
பிரேமா: சிக்கன் போடறதா வெளிய பேசிக்கிறாங்க. ஆனா எனக்கென்னமோ இங்க போடறது 5 ரூவா பிரியாணி அயிட்டம் மாதிரியே தோனுது.
நித்யா: ஓ மை காட்!!! காக்காவா??
பிரேமா: காவி துறந்து கம்பிக்குள்ளே வந்த பிறகு காக்காவைப் போட்டால் என்ன, கழுகைப் போட்டால் என்ன மகனே! ஒரு கை பார்த்து விட வேண்டியது தானே!
நித்யா: சுவாமி இப்படி பச்சையா அசைவத்துக்கு அப்பீட் ஆயிட்டீங்களே! என்ன கொடும சாமி இது?
பிரேமா: ஏன்கிட்டயேவா? இன்னும் கேளு, பாலே இல்லாத காபி,ரெக்கையே இல்லாத ஃபேனு, காத்தே வராத ஜன்னல்
நித்யா: போதும் சுவாமி போதும்! இப்பவே எனக்கு குமட்டிக்கொண்டு வருது. இங்க ஜெயிலர்கள் எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு சொல்லுங்க சாமி!
பிரேமா: அத ஏன் கேக்குற நித்தி! ஒரு தடவை எங்க‌ ஜெயிலர், சக கைதிய கூப்பிட்டு அவருக்கு கால் அமுக்கிவிடச் சொன்னாரு. அவன் சரியா அமுக்கலைன்னு அடுத்த நாளு அவன பொன்மலைப்பட்டி பக்கமா கூட்டிக்கிட்டு போயி என்கவுண்டர்ல போட்டுட்டாங்க.
நித்யா: சாமி! என்ன சொல்றீங்க! கால ஒழுங்கா அமுக்கலைன்னதுக்கா என்கவுண்டர். என்ன சாமி பீதிய கெளப்புறீங்க?
பிரேமா: உண்மைதான் நித்யா! அன்னிலேந்து அந்த ஆபிஸர் என்னய கால் அமுக்க கூப்பிட்டா 3 நாளா இருந்தாலும் கண் முழுச்சி அமுக்கிவிடுவேன்.
நித்யா: இதுவேறயா? அதுசரி..,போதும் சுவாமி போதும்! பொழுது போக்குகள் பற்றி சொல்லுங்க.
பிரேமா: பொழுது போக்கு ஸ்னோ பௌலிங்கும், கோல்ஃபும் தான்.
நித்யா: சுவாமி கிண்டல் பண்ணாதீங்க!
பிரேமா: வேற என்னய்ய கடுப்பக்கிளப்பிக்கிட்டு. இங்க கரிக்கட்டயும், கல்லும் தான் கெடக்கு. அதவச்சி வச்சி ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி, கில்லிதாண்டு, கிளித்தட்டு, கோகோ மாதிரி ஆட்டங்கள் எல்லாமே ஆடுவோம்.
நித்யா: என்ன சுவாமி எல்லாமே லேடீஸ் அயிட்டமா இருக்கே!
பிரேமா: ஹிஹி! கேமில் கூட எனக்கு லேடீஸ் கேம்தான் புடிக்கும். அதவிடு நித்யா ஆடுபுலி ஆட்டம் கேம்ல நான் தான் சாம்பியன். மாநில அளவில ஜெயில்கள்ல நடந்த போட்டிகல்ல முதல் பரிசு வாங்கியிருக்கேன். வேனுமுன்னா சர்டிபிகேட்ட காட்டாவா?
நித்யா: சுவாமி! என்னய கடுப்பேத்தாதீங்க‌, வேற மேட்டர் இருந்தா சொல்லுங்க.
பிரேமா: வாராவாரம் தூர்தர்ஷன்ல ஒரு படம். போன வாரம் கூட ஒரு படம் போட்டான் பாரு..,ஆஹா!
நித்யா: யோவ்! நீ சொன்னதிலயே பெரிய தண்டனை இதான்யா! நான் எங்க எப்படி இருந்த ஆளு தெரியுமா? வீடியோவ வாங்கி பாருய்யா! ஒரு கையில ரஞ்சிதா, இன்னொரு கையில டிவி ரிமோட் தான்யா இருக்கும். மொத்தம் 300 சேனல மாத்தி மாத்தி பாத்த எனக்கு வாரம் ஒரு படமா? அய்யோ..
பிரேமா: தம்பி! இங்க வந்திட்டா இப்படித்தான். போகப்போக உனக்கு நல்லா பழகிரும் பாரு. வேனுமினா இப்ப வாரியா, உனக்கு ஆடுபுலி ஆட்டம் ஆடுறதுக்கு டிரைனிங்க் தாரேன்!
நித்யா: யோவ்! நிப்பாட்டுய்யா! நான் வெறும் பொம்பள கேஸூல மட்டும் தான் உள்ள வரலாமுன்னு இருக்கேன், என்ன கொலை கேஸ் கைதியா மாத்திராத. என்ன தூக்குல போட்டாலும் பரவாயில்லய்யா! ஆனா நீ இருக்குற இந்த ஜெயிலுக்கு மட்டும் வரமாட்டேன்யா! நான் கெளம்பறேன்..
பிரேமா: தம்பி! ஒரு நிமிசம். உன் மொமைல அந்த வீடியோ இருந்தா புலுடூத் வழியா எனக்கு கொஞ்சம் ஏத்தி விடேன்?
நித்யா: ஹேய்ய்ய்ய்!!! உனக்கு புலுடூத் கேக்குதா? மொதல்ல உன் டூத்த இல்லாம ஆக்குறேன் பாரு
(கத்தியபடியே கீழே கிடந்த செங்கல்லை தூக்கிக் கொண்டு பிரேமாவை நோக்கி பாய டரியலான பிரேமா ஜெயிலரை நோக்கி கத்திக்கொண்டே ஓடுகிறார்)

No comments:

Post a Comment