Monday, June 14, 2010

இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் : செய்னா நேவல் சாம்பியன்

சென்னை: இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னையில், இந்திய கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் செய்னா நேவல், மலேசியாவின் சோ வோங் மியூவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான பைனலின் முதல் செட்டை சோ வோங் மியூ 22-20 என கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-14 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் தொடர்ந்து அசத்திய செய்னா, 21-12 என கைப்பற்றினார். இறுதியில் செய்னா 20-22, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.
குருசாய்தத் ஏமாற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் குருசாய்தத், இந்தோனேஷியாவின் அலாம்சியா யூனசிடம் 13-21, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
திஜூ ஜோடி அபாரம்:
கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி, சிங்கப்பூரின் லெய் யயோ, சாயுட் டிரையசார்ட் ஜோடியை 23-21, 20-22, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய ஜோடி அதிர்ச்சி:
ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சனவே தாமஸ், ருபேஷ் குமார் ஜோடி, மலேசியாவின் பெய்ருஜிஜுயன், ஜாக்ரி அப்துல் ஜோடியிடம் 12-21, 20-22 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சிங்கப்பூரின் லெய் யயோ, முலியா சாரி ஷிந்தா ஜோடியிடம் 21-11, 9-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றியது.

No comments:

Post a Comment