Showing posts with label CRICKET. Show all posts
Showing posts with label CRICKET. Show all posts

Thursday, April 15, 2010

விஸ்டன் விருது வென்றார் சேவக்

புதுடில்லி:  ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் "விஸ்டன்' விருதை, தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் சேவக் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் "விஸ்டன்' இதழ் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவ்விருதை, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஷேன் வார்ன், இங்கிலாந்து "ஆல் ரவுண்டர்' பிளின்டாப் ஆகியோர் பெற்றுள்ளனர். கடந்தமுறை இது, இந்திய வீரர் சேவக்கிற்கு கிடைத்தது.
இதனிடையே இந்த ஆண்டு சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கான இறுதிப்பட்டியலில் சேவக்குடன், இங்கிலாந்தின் ஸ்டிராஸ் மற்றும் இலங்கையின் தில்ஷன் ஆகியோர் இருந்தனர். இதில் டெஸ்டில் சராசரி 70, ஸ்ட்ரைக் ரேட் 108.9 மற்றும் ஒருநாள் போட்டியில் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 136.5 என வைத்துள்ள சேவக், சிறந்த வீரருக்கான விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தட்டிச் சென்றார்.
சேவக் தவிர, இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாட் பிரையர், சுழற் பந்து வீச்சாளர் சுவான், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோரும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு, விஸ்டன் இதழ் தேர்வு செய்துள்ளது.

Thursday, March 11, 2010

IPL இல் "விளையாடு ஆனால் விளையாடாதே" ஆஸி' போர்டு " உள்குத்து வேலை ":



   ஆஸ்திரேலியா  கிரிக்கெட்  போர்டு  IPL விளையாட்டு . ஆஸியை  சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்   IPL பங்கேற்க விருப்பம் தெரிவித்து இந்த ஆண்டு  ஏலத்தில்  தயாராக இருகின்றனர் . ஆனால் ஆஸி' போர்டு உள்குத்து  வேலை  செய்கிறது . ஆஸியை  சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்   IPL பங்கேற்க  காரணம் பணம் !!!!!!!!பணம்!!!!!!!!!பணம்!!!!!!!!.

ஆனால் ஆஸி தரும் சம்பளம் மிக மிக குறைவு.   ஆஸி அணியில்  10 வருடம் விளையாடி கிடைக்கும் சம்பளத்தை விட  IPL இல்   4 வாரம் விளையாடி கிடைக்கும் சம்பளம்" 10மடங்கு அதிகம்"!!!!!!!!.

இந்த ஒரு காரணம்  மற்றும்  உலக அளவில் கிடைக்கும் புகழ்  இந்த இரண்டு மட்டுமே  ஆஸி  வீரர்கள்   IPL பங்கேற்க  ஆர்வமாக உள்ளனர்.  அனால்  "ஆஸி போர்டு இவர்களை அனுமதி இல்லை என்று சொல்லாமலும்  , ஆஸி அணியில் இடம் இல்லை என்று  சொல்லாமலும்  உள்குத்து வேலை  செய்கிறது" ..............

"காரணம்":
                ஆஸி வீரர்கள் வெளிநாட்டு  அமைப்பில் விளையாடக்கூடாது .
                எங்கே இவர்கள் ஆஸி தேசிய  அணியில்  இருந்து  கழண்டு விடுவார்களோ ?
               வீரர்கள் காயம்  அடைந்து விடுவார்களோ ? என்ற ஒரு பயம்
                இந்தியா-வின்  வளர்ச்சி கண்டு பொறாமை  (உள்மனதில் )
             ஆஸி தேசிய  அணியில் மட்டுமே  அவர்கள் விளையாட  வேண்டும் .
IPL -ஆல் ஆஸி'க்கு  பெரிய லாபம் /பயன் :
                        IPL தொடங்குவதற்கு  முன்  பெரும்பாலான வீரர்கள்  ஆஸி கிரிக்கெட் போர்டிற்கு  அடையாளமே  தெரியாமல் இருந்துவந்தது .
                      AFTER IPL INTRODUCE
                             IPL  விளையாடிய பின்னரே பல ஆஸி வீரர்கள் உலகிற்கு  அடையாளம்  தெரிந்தனர். இந்த புகழ் அனைத்தும்  IPL யே  சேரும். பின்னேர் இந்த வீரர்கள் ( IPL பங்கேற்ற பின்னர் )  ஆஸி தேசிய  அணியில் தேர்வு செய்யப்பட்டனர்  மற்றும்  ஒரு சில   வீரர்கள்  நிரந்தர இடம்பிடித்தனர் .
   அப்படி தேர்வு ஆன வீரர்கள் பட்டியல்  :
              shane watson, simon katich, james hopes, shan marsh, luke pomerspach, andrew mcdonald, marcus north, dirk nannes, david warner, mosie henriques,  david hussey, cameron white
                        
  IPL 2009   இல் விளையாடிவர்கள் :

Ryan Haris, Jeorge Bailey

AIRTEL CHAMPIONS LEAGUE2009   இல்  விளையாடிவர்கள் :
Andrew Mcdonald, Dougie Bollinger, ClintMickay, Stevan Smith, Peter siddle, Chris Roher, Philip Hughes,Cameron White,  David Warner, John Holland

IPL 2010  தேர்வு ஆனவர்கள் :
Stevan Smith, Adam Voges


14 பேர் கொண்ட ஆஸி., அணி: நேற்று அறிவிப்பு


பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க் (துணை கேப்டன்), போலிங்கர், ஹாடின், ஹாரிட்ஜ், ரேயான் ஹாரிஸ், ஹியுஸ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், சைமன் காடிச், கிளின்ட் மெக்கே, மார்கஸ் நார்த், ஸ்டீவன் ஸ்மித், ஷேன் வாட்சன்.

இதில் கிளின்ட் மெக்கே,ரேயான் ஹாரிஸ்,ஸ்டீவன் ஸ்மித்  இவர்கள் புதிதாக அணியில்  சேர்ந்துள்ளனர் . இதற்கு முன் நடந்த  தொடர்களிலே  சேர்க்கபடவில்லை என்பது  குறிப்பிட தக்கது . ஏன் என்றால் IPL  நாளை தொடங்க  உள்ளது . அனால் இந்த வீரர்களுக்கு
11 பேர்  கொண்ட அணியில் இடம் கிடைக்காது . வெறும்  தண்ணீர் எடுத்து செல்லும்  எடுபிடி யாக  மட்டுமே இருக்க முடியும் .  இதுதான் அந்த """" விளையாடு ஆனால் விளையாடாதே""""" என்கிறது ஆஸி .............. ஆஸி யின்  பயம்தான்  இதற்கு  காரணம் ...............

கிளின்ட் மெக்கே,மெக்டோனால்ட் ,ஸ்டீவன் ஸ்மித்,ஷானே வாட்சன்,ஷான் மார்ஷ், லுக்கே  போமேர்ச்பச்,டிர்ர்க்  நன்னேஷ், போளிங்கேர் ,     ஜான் ஹோலாந்து :

                                                இவர்கள் IPL யில்  தேர்வு செய்யபட்ட  பின்னரே  ஆஸி போர்டு இவர்களை  தேர்வு   செய்தது அணிக்கு ............
                   ஏன் அதற்கு முன் இந்த வீரர்கள்  ஆஸி கண்ணில் படவில்லையோ
???????????????? IPL லும் விளையாட  விடாமல்  ஆஸி  "11"லும் விளையாடாமல் இருப்பது  இவர்களுக்கு வருத்தத்தை  ஏற்பட  வைக்கிறது ........

                            இதற்க்கு  பாண்டிங்  சர்வாதிகாரம்  முக்கிய  காரணம் ,  ஆஸி அணியில்  இடம் கிடைக்க  நீண்ட காலம்  காத்திருக்க  வேண்டும்  என்பதையும்  வீரர்கள்  உணர்ந்து இருப்பது ஒரு காரணம்............     இதை வைத்தும் வீரர்களை மிரட்டுகின்றனர்.  

              !!!!!நீர்குமிழியை  யாராலும்  மறைக்க முடியாது  என்பது  ஆஸி-க்கு  தெரியவில்லை!!!!!!!.. 

                                                 இவர்கள்  திறமையான  ,   அபாயகரமான  வீரர்கள் , இவர்களை  உலகிற்கு  வெளிக்காட்டியது   இந்தியா !!!!!!!!!!!! இந்தியா!!!!!!!!!!!!! என்றால் அது மிகையாகது 
..........        இனியாவது    விளையாட்டை விளையாட்டு உணர்வுடன்  பார்க்குமா ஆஸி ........... திருந்துமா ஆஸி ............

 
                          
            
             


 

Wednesday, March 10, 2010

பாக்., கிரிக்கெட்டுக்கு அவமானம்! *7 வீரர்களுக்கு தண்டனை

காரச்சி:  
பாகிஸ்தான் அணியில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சோயப் மாலிக், ராணாவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தடையாக இருந்த "சீனியர்கள்' முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பில் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.பி.,) பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அரசியல் தலையீடு மற்றும் "மேட்ச் பிக்சிங்' என தொடர்ந்து இடையூறுகள் ஏற்படும். இதனால் அணியின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படும். சமீப காலமாக வீரர்களுக்குள் கோஷ்டி பூசல், போர்டுடன் மோதல் தவிர, "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகமானது.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் தெரிந்தது. மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் என பாகிஸ்தான் அணி, தான் பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோல்வியடைந்து, வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
விசாரணை கமிட்டி:இதனால் அதிர்ச்சி அடைந்த பி.சி.பி., தோல்வி குறித்து விசாரிக்க, வாசிம் பாரி தலைமையில் ஆறு பேர்கள் கொண்ட கமிட்டியை அமைத்தது. அணியின் கேப்டன் முகமது யூசுப், பயிற்சியாளர் இன்தி காப் ஆலம், துணை பயிற்சியாளர், மானேஜர் மற்றும் 13 வீரர்கள் விசாரணைக்கு <உள்ளானார்கள். முடிவில் இந்த கமிட்டி, தனது அறிக்கையை பி.சி.பி.,யிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மேல் நடவடிக்கை எடுக்கும் முன், இந்த அறிக்கை நேற்று மீடியாவில் வெளியானது.
இந்த அறிக்கை குறித்து பி.சி.பி., செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் கூறியது:
முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் அணியில் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும்பாதிக்கப்பட்டது. இவர்களை தேசிய அணியின் எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க விடக்கூடாது. தவிர, "டுவென்டி-20' ஆட்டத்தின் போது அப்ரிதி பந்தை கடித்தது மிகவும் அவமானச் செயல். இதனால் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. இவருக்கு அபராதம் விதிப்பதுடன், 6 மாத காலத்துக்கு அப்ரிதியின் நடத்தையை கண்காணிக்க வேண்டும். இவர்கள் தவிர, சோயப் மாலிக், ராணா நவீது <உல் ஹசன், கம்ரான் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விபரம்:இதன்படி சோயப் மாலிக், ராணா இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு என எங்கும் கிரிக்கெட் விளையாட தடை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம், தவிர, அக்மல் சகோதரர்கள் மற்றும் அப்ரிதி ஆகிய மூவருக்கும் தலா 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் தேசிய அணியில் விளையாட முடியாது. ஆனால் உள்ளூர் மற்றும் இங்கிலாந்து கவுன்டி, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கான கால வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் அணிக்கு திரும்பலாம்.



எதிர்ப்பும், ஆதரவும்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிரடி தடை மற்றும் அபராதத்திற்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே இரு மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில:
இன்சமாம் உல் ஹக் (பாக்., முன்னாள் கேப்டன்)பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் வீரர்களான முகமது யூசுப், யூனிஸ் கான் இருவருக்கும் அளித்துள்ள தண்டணை ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் தவறு செய்திருந்தால், எச்சரிக்கை விடுத்திருக்கலாம். இதை தவிர்த்து விட்டு, ஆயுட் கால தடையை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தவறு செய்த கம்ரான், உமர் அக்மல் மற்றும் அப்ரிதி ஆகியோருக்கு தற்போது தண்டணை வழங்கியிருப்பது தாமதமான செயல். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
ஜாகிர் அப்பாஸ் (முன்னாள் பாக்., வீரர்)முகமது யூசுப், யூனிஸ் கான் இருவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, வருத்தம் அளிக்கும் விஷயம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.
அப்துல் காதிர் (பாக்., முன்னாள் கேப்டன்)பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்துள்ளது துணிச்சலான முடிவு. இந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உகந்தது. சீனியர் வீரர்களுக்கு இந்தத் தண்டணை தேவையானது தான். அப்போது தான் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வர்.
மோசின் கான் (பாக்., தேர்வுக் குழு தலைவர்)தடை செய்யப்பட்டுள்ளவர்கள் அணியின் முன்னணி வீரர்கள். அவர்களுக்கு மாற்றாக தகுதியான வீரர்களை இடம் பெறச் செய்வது மிகவும் கடினம். இருப்பினும் கிரிக்கெட் போர்டின் முடிவை ஆதரிக்கிறேன்.


பாக்ஸ் செய்திகள்:
வரலாற்றில் முதல் முறை

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 7 வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது இது தான் முதல் முறை. கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சை தொடர்பாக சலீம் மாலிக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த தோல்விக்காக கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பி.சி.பி., மறுப்பு
யூசுப் மற்றும் யூனிஸ் கானுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது. இதன் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஸ்வி கூறுகையில்,""யூசுப் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளூர் மற்றும் அன்னிய மண்ணில் நடக்கும் கவுன்டி போன்ற போட்டிகளில் விளையாடலாம். பாகிஸ்தான் அணி சார்பில் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனால் இது ஆயுட் தடை அல்ல,'' என்றார்.
பாக்., அணியின் எதிர்காலம்?தற்போது அணியில் விளையாடி வரும் 7 வீரர்கள் மீது, ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி <உள்ளது. அடுத்த மாதம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், வீரர்கள் மீதான தடைகள் அணியின், நலனை பாதிப்பது <உறுதி.
வீரர்களின் தடை விபரம்:
முகமது யூசுப் (35
)

பாகிஸ்தான் அணிக்காக 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், 88 டெஸ்ட் (7431 ரன்), 282 ஒருநாள் போட்டிகள் (9624 ரன்) மற்றும் ஒரு "டுவென்டி-20' (20 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ் கான் (32) 

பாகிஸ்தான் அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், சிறந்த "மிடில் ஆர்டர்' வீரர். இதுவரை 63 டெஸ்ட் (5260 ரன்), 202 ஒருநாள் போட்டிகள் (5765 ரன்) மற்றும் 20 "டுவென்டி-20' (430 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 2009 "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தவர். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்ரிதி (30)

அணியின் சிறந்த "ஆல் ரவுண்டரான' இவர் சமீபத்தில் "டுவென்டி-20' அணியின் கேப்டனானார். இவர், 26 டெஸ்ட் (1683 ரன்), 293 ஒருநாள் போட்டிகள் (5957 ரன்) மற்றும் 27 "டுவென்டி-20' (495 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கடித்து சேதப்படுத்தியதால், அப்ரிதிக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, இவரது நடவடிக்கை 6 மாத காலத்துக்கு கண்காணிக்கப்பட உள்ளது.
சோயப் மாலிக் (28)

சிறந்த பேட்ஸ்மேனான இவர், அவ்வப்போது பவுலிங்கிலும் அசத்துவார். 29 டெஸ்ட் (1517 ரன்), 190 ஒருநாள் போட்டிகள் (5141 ரன்) மற்றும் 30 "டுவென்டி-20' (603 ரன்) ஆட்டத்தில் விளையாடியுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணா நவீது (32)
 
மிதவேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 9 டெஸ்ட் (18 விக்கெட்), 74 ஒருநாள் போட்டிகள் (110 விக்.,) மற்றும் 4 "டுவென்டி-20' (5 விக்.,) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கம்ரான் அக்மல் (28)

கடந்த 2002ல் அறிமுகமான இவர், 2004 முதல் ஐந்து ஆண்டுகளாக அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். இதுவரை 48 டெஸ்ட் (2550 ரன்), 115 ஒருநாள் போட்டிகள் (2288 ரன்) மற்றும் 28 "டுவென்டி-20' (451 ரன்) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
<உமர் அக்மல் (19)

சமீபத்தில் அணியில் இடம் பெற்று அசத்தி வந்த இவர், இதுவரை 6 டெஸ்ட் (578 ரன்), 15 ஒருநாள் போட்டிகள் (498 ரன்) மற்றும் 6 "டுவென்டி-20' (159 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டம்: யூனுஸ்கான், முகமது யூசுப்புக்கு ஆயுட்கால தடை; அப்ரிடி, சோயிப் மாலிக், கமரன் அக்மலுக்கும் தண்டனை


லாகூர், மார்ச். 10-


இஸ்லாமாபாத்: ஆஸி., தொடரில் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை அறிவித்துள்ளது. குறிப்பாக முன்னாள் கேப்டன் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகிய இருவரும் ஆயுள் காலம் ழுவதும் விளையாட முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கடும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பாக்., ஆட்டக்காரர்கள் போக்கே காரணம் என்றும் முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.

அபராதமும் உண்டு : இதனையடுத்து இது குறித்து விசாரணைக்கமிட்டி அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்டனை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பாக்., கிரிக்கெட் வாரியம் தண்டனையை அறிவித்துள்ளது.

இதன்படி முன்னாள் கேப்டன்கள் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் ஆடத்தடை விதிக்கப்பட்டது.  ( இந்த இருவரும் மோசமாக ஆடியதாகவும் , இளம் வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாகவும் குற்றச்சாட்டு ) . சோயப் மாலிக் ( ஒத்துழையாம‌ை ) . ராணா  ( ஒத்துழையாம‌ை ) ஆகியோர் ஒரு ஆண்டு ஆடத்தடையும், 20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஷாகீத் அப்ரிதிக்கு ( பந்தை சேதப்படுத்துதல் ) 30 லட்சம் அபராதமும் , அக்மல் சகோதரர்களுக்கு தலா ரூ 5லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தோல்வி எவ்வளவு ? : பொதுவாக தண்டனை அறிவிப்பில் ஒராண்டு, அல்லது 3 ஆண்டு தடை இருந்திருக்கிறது. ஆயுள் கால தடை என்பது இது வரை கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இந்த அதிரடி உத்தரவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த இந்த ஆஸி ., பயணத்தில் 5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் தொடர் , ஒரு டுவென்டி 20 போட்டிகள் நடந்தது. இத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த விவகாரத்திற்குத்தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை. பாக்., கிரிக்கெட் எதிர்காலம் என்னவாகும் ? 

Tuesday, March 9, 2010

ஆஸ்திரேலிய வீரர்கள் முட்டாள்கள்; நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஜான்ரீட் கருத்து

வெலிங்டன், மார்ச். 9- 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  5 ஒரு நாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது.
 
நேப்பியரில் நடந்த முதல் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கும், நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
ஜான்சன் நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக அவர் தடையில் இருந்து தப்பினார்.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை முட்டாள்கள் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஜான்ரீட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
பொதுவாக ஆஸ்திரேலிய அணியை பார்க்கும் போது நல்லவர்களாக தெரியும். ஆனால் அந்த அணியில் உள்ள வீரர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் முட்டாள்தனமாக இருக்கும். அவர்களுக்கு கடிவாளம் தேவை. அவர்கள் தங்கள் பேட்டால், பந்து வீச்சாலும் தான் பதில் அளிக்க வேண்டும். வாயால் இல்லை.
 
வீரர்களை உசுப்பேற்றி மோசமாக கிண்டல் (சிலெட்ஜிங்) செய்வது ஆஸ்திரேலிய அணிக்கு வாடிக்கையானது. நான் ஆடிய காலத்தில் மெக்ராத் அப்படி நடந்து கொண்டார். இவ்வாறு ஜான்ரீட் கூறியுள்ளார்.

Friday, March 5, 2010

கடைசி ஓவரில் வீழ்ந்தது வெ.இண்டீஸ் *ஜிம்பாப்வே "திரில்' வெற்றி

கயானா: 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கயானாவில் நடந்தது.
சிபண்டா அபாரம்:"டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (41) நல்ல துவக்கம் கொடுத்தார். அபாரமாக ஆடிய சிபண்டா (95), சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தைபு (56) அரைசதமடித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.
"டாப்-ஆர்டர்' பலம்:எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கெய்ல் (57), பாரத் (50), சந்தர்பால் (70) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சூப்பர் துவக்கம் அளித்தனர். "மிடில்-ஆர்டரில்' வந்த வீரர்கள் ஏமாற்ற, கடைசி ஓவரில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது.
"திரில்' வெற்றி:மசகட்சா வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் மில்லர் 11 ரன்கள் (ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி, ஒரு ரன்) சேர்த்தார். அடுத்து இரண்டு பந்தில் ஸ்மித், பென் அவுட்டானார்கள். கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், ரோச் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 2 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
துல்லியமாக பந்துவீசிய மசகட்சா 3 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் அசத்திய சிபண்டா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி கரீபிய மண்ணில், ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக நடந்த "டுவென்டி-20' போட்டியிலும் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

Tuesday, March 2, 2010

கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும்போது அரசியலில் நுழைவதா?



கொழும்பு, மார்ச்.2-
 
இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜெயசூர்யா. 40 வயதான இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ஆடி வருகிறார். 2011-ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
 
இலங்கையில் ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். அதிபர் ராஜபக்சேயின் சுதந்திர கூட்டணி சார்பில் அவர் களத்தில் நிற்கிறார். தனது சொந்த ஊரான மதரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
அரசியலில் நுழைந்த ஜெயசூர்யாவுக்கு முன்னாள் கேப்டன் ரணதுங்கா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஜெயசூர்யா தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்த நேரத்தில் அவர் எப்படி அரசியலில் நுழையலாம். ஓய்வு பெற்ற பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஆளும்கட்சிக்காரர் என்பதற்காக வீரர்களை அணிக்கு தேர்வு செய்யக்கூடாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ரணதுங்கா தலைமையில் 1996-ம் ஆண்டு உலக கோப்பையை இலங்கை கைப்பற்றியது. இதன் பிறகு அவர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு அரசியலில் நுழைந்து உள்ளார். தற்போது எதிர்க்கட்சியில் உள்ளார்.
 
ஜெயசூர்யா இதுகுறித்து கூறும்போது, விளையாட்டு வீரர் அரசியலில் நுழையக்கூடாது என்ற விதி எதுவும் இல்லை என்றார். இவர் 1993-2003ம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக 2006-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார்.
 
ராஜபக்சேயின் வற்புறுத்தலினால் தனது முடிவை மாற்றிக் கொண்டார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜெயசூர்யா ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

கிரிக்கெட் வாழ்க்கை தூய்மையானது சூதாட்டத்தில் ஈடுபடவில்லை;




கராச்சி, மார்ச். 2-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக தோற்றது. இந்த தோல்விக்கு சூதாட்டம் தான் காரணம் என்று கூறப்பட்டது.  
 
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கமரன் அக்மல், வேகப்பந்து வீரர் ரானா ஆகியோருக்கு மேட்ச் பிக்சிங்கில் (சூதாட்டம்) தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.
 
இதன் காரணமாத்தான் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
 
இதற்கிடையே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கமரன் அக்மல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டு எல்லாமே ஆதார மற்றது. முழுக்க தவறானது. புகழை கெடுக்கும் வகையில் எனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
 
எனது கிரிக்கெட் வாழ்க்கை தூய்மையானது. எப்போதுமே நான் நேர்மையாகத்தான் விளையாடி வருகிறேன்.
 
இவ்வாறு அக்மல் கூறியுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 32 ரன்னில் தோற்றது. இந்த ஆட்டத்தில் அக்மல் 3 கேட்ச்களையும் ஒரு ஸ்டம்பிங்கையும் தவற விட்டார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியா தொடரில் மோசமாக ஆடியது மற்றும் நடந்து கொண்ட விதத்திற்காக அக்மல், அப்ரிடி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 பேர் கொண்ட குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரை செய்து உள்ளது.

Sunday, February 28, 2010

பாகிஸ்தான் வீரர்கள் அக்மல், ரானாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு?



கராச்சி, பிப்.28-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மிகவும் மோசமாக விளையாடி தோற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு சூதாட்டம்தான் காரணம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் கமரன்அக்மல், ரானாநவித் ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
 
இருவரும் மேட்ச் பிக்சிங் கில் ஈடுபட்டுள்ள தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து உள்ளது. இதனால் இருவர் மீதும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
 
சூதாட்டம் தொடர்பு காரணமாக துபாயில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 20 ஓவர் போட்டியில் இருந்து இரு வரும் நீக்கப்பட்டனர்.
இருவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட தேர்வு அணியில் இடம் பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட அணியில் அவர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதில் கமரன்அக்மல் விக்கெட் கீப்பர் ஆவார். ரானா நவித் வேகப்பந்து வீரர் ஆவார்.

Saturday, February 27, 2010

கிரிக்கெட் அணியில் இடம் பெறதேர்வுக்குழு தலைவர் ஆலோசனை


திண்டுக்கல்:""கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்கும் போது, திறமையை நிரூபிப்பவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும்,'' என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் பேசினார்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில், இன்ஜி., கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், பரிசுகளை வழங்கி பேசியதாவது:""மாவட்ட கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இதுபோன்ற விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொள்வது அவசியம். கிரிக்கெட் தேர்வுக்குழுவில் பரிந்துரைகளை விட, திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும். உரிய வாய்ப்புகளில் திறனை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதனையை இவரால் மட்டுமே முடிக்க இயலும் என இறைவன் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதன்படி தனது சாதனைகள் மூலம் கிரிக்கெட்டின் கடவுளாக உயர்ந்து நிற்கிறார். மூளையை கேட்டு செயல்படுவதால், ஒரே நிலையில் செயல்படுவதில் குழப்பம் தடைகல்லாக இருக்கும். இதயத்தோடு இணைந்த செயல்களில் மட்டுமே முழுமையான இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும், தன்னம்பிக்கை, ஆர்வம், துணிவுடன் துரிதமாக செயல்படுதல், எண்ணியதை முழுமையாக செயல்படுத்துதல், உறுதியான மனநிலையுடன் இருத்தல் போன்றவற்றின் மூலம் வெற்றிக்கான இலக்கை எளிதில் அடையலாம்,''இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, February 26, 2010

Sachin’s Birthday as ‘World Cricket Day’


World cricket day - A new announcement...!

An announcement have been done by ICC that the cricket legend SACHIN TENDULKAR's birthday is the WORLD's CRICKET DAY...!
i.e, 24th April ...!

Its really nice to hear the announcement as a cricket lover and SACHIN fan...!

And I am more proud to say that I am an indian an the world's cricket day is celebrated by the reason of an indian...!

SACHIN rockz...! Lets pray to god to bless him to play more and more...!

Happy lotting...!

Be proud to be an Indian...

Sachin’s Birthday as ‘World Cricket Day’



World cricket day - A new announcement...!

An announcement have been done by ICC that the cricket legend SACHIN TENDULKAR's birthday is the WORLD's CRICKET DAY...!
i.e, 24th April ...!

Its really nice to hear the announcement as a cricket lover and SACHIN fan...!

And I am more proud to say that I am an indian an the world's cricket day is celebrated by the reason of an indian...!

SACHIN rockz...! Lets pray to god to bless him to play more and more...!

Happy lotting...!

Be proud to be an Indian...

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் பாக்., வீரர்

 


கராச்சி: பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி டெஸ்ட் (0-3), ஒருநாள் (0-5) மற்றும் "டுவென்டி-20' (0-1) என தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதுகுறித்து தற்போது விசாரணை நடக்கிறது. இதனிடையே இந்த தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கம்ரான் அக்மல் (28) மீது, சூதாட்ட புகார் கிளம்பியுள்ளது. இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி, வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் இவர் நழுவவிட்ட மூன்று "கேட்ச்' வாய்ப்புகளால் தப்பிய ஹசி (134*), சதமடித்தார். தவிர, வாட்சன், சிடில் ரன்அவுட் வாய்ப்புகளை வீணடித்தார். பின் இவர் பேட்டிங்கிலும் ஏமாற்ற, எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை, பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' தொடரில் இருந்து நீக்கப்பட்டார். சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடக்கும் நிலையில், "டுவென்டி-20' உலக கோப்பை உத்தேச அணியில் கம்ரான் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.
இஜாஸ் மறுப்பு:
சூதாட்டம் தொடர்பான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஜாஸ் பட் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" நாங்கள் தற்போதுள்ள வீரர்கள் குறித்து பேசவில்லை. "மீடியா' தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடைந்த தோல்வி குறித்து விசாரணை நடக்கிறது. அதன் முடிவு வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 
 

சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது!: கபில் தேவ் வலியுறுத்தல்


புதுடில்லி: சாதனை நாயகன் சச்சினுக்கு, நாட்டின் மிக உயர்ந்த "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென, முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 31,041 ரன்கள் மற்றும் 93 சதங்கள் அடித்து, சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின். சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோஹினூர் வைரம்:
சச்சினின் 200 ரன் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியது:
சச்சின், கிரிக்கெட்டின் கோகினூர் வைரம். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என அனைத்திலும் வெற்றிகரமாக சாதித்தவர். இவரைப் போன்று, வேறொரு வீரர் இனி வருவது கடினம். இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் கூறியது போல, பிராட்மேனுடன் மட்டுமல்ல, உலகின் எந்த பேட்ஸ்மேனையும் சச்சினுடன் ஒப்பிட முடியாது.
பேட்டிங்கில் சாதித்து வரும் இவர், பீல்டிங்கில் இப்போது வரையிலும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவுள்ள 2011 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், அதன் பின்பும் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னாவை' இவருக்கு வழங்குவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.
கபில் தேவ் சம்மதம்:
முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 21 ஆண்டுகளாக, பல சாதனைகளை படைத்து வருபவர் சச்சின். இவர் "பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர். சச்சினுக்கு இந்த விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஒருவேளை அடுத்த போட்டியில் இவர் "டக் அவுட்டானால்' கூட, விருது வழங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஒரு போட்டியை மட்டும் வைத்து அவரை எடைபோட முடியாது. ஒட்டுமொத்தமாக அவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என்றார்.
சச்சினுக்கு முதலிடம்:
 முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" விளையாட்டு வீரர் ஒருவருக்கு "பாரத் ரத்னா' விருது வழங்கப்படும் என்றால் அதனைப் பெற சச்சினைத் தவிர, யாரும் இல்லை. இவருக்கு கட்டாயம் இந்த விருது கொடுக்கவேண்டும்,'' என்றார்.