Showing posts with label Sachin Tendulkar. Show all posts
Showing posts with label Sachin Tendulkar. Show all posts

Wednesday, March 10, 2010

நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவேன்: தெண்டுல்கர் பேட்டி


மும்பை, மார்ச். 10-
 
விளையாட்டு தொடர்பான பத்திரிக்கை ஒன்று நாட்டில் விளையாட்டு துறையில் செல்வாக்கு பெற்ற 50 பேரை தேர்வு செய்து விருது வழங்கியது. இதில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்தார். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. விடுமுறை பெற்றுக் கொண்ட தெண்டுல்கர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-
 
நான் நீண்ட கனவுகளோடு கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இரண்டு, மூன்று தலைமுறை வீரர்களோடு விளையாடி விட்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முழு இதய உணர்வோடு நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். அணியில் சிறப்பு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது நடந்து கொண்டு இருக்கிறது.
 
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்காக எனக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. இன்னும் கூட வாழ்த்துக்கள் வந்து குவிந்தபடி இருக்கிறது. இது எனக்கு உணர்ச்சிபூர்வமான மகிழ்ச்சியை தருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Friday, March 5, 2010

பாரத ரத்னா விருது பற்றிய கருத்து: தெண்டுல்கருக்கு பால் தாக்கரே பாராட்டு

மும்பை, மார்ச். 5-
மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று தெண்டுல்கர் கருத்து கூறியதை அடுத்து அவரை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. கட்சி தலைவர் பால்தாக்கரே தெண்டுல்கரை விமர்சித்து கட்டுரை எழுதினார்.
தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்ததை அடுத்து நாடே அவரை பெரிதும் பாராட்டியது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிவசேனாவும் பழைய விஷயங்களை மறந்துவிட்டு தெண்டுல்கரை பாராட்டி உள்ளது.
இது தொடர்பாக பால்தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
தெண்டுல்கருக்கு ஏற்கனவே இந்தியாவில் 100 கோடி மக்களும் “பாரத ரத்னா” என்ற மகுடத்தை சூட்டிவிட்டார்கள்.
வீர சிவாஜி போர் களத்தில் முகலாயர்களை வீழ்த்தினார். அதேபோல் தெண்டுல்கர் கிரிக்கெட் களத்தில் மாவீரராக திகழ்கிறார். இது போன்ற மாவீரர்கள் மராட்டிய மண்ணில் மட்டும்தான் தோன்றுவார்கள்.
சிவாஜி வாள் ஏந்தி இருந்தார். தெண்டுல்கர் “பேட்” ஏந்தி இருக்கிறார். தெண்டுல்கர் ஏற்கனவே பாரத ரத்னா ஆகிவிட்டார். அவருக்கு இந்த விருதை கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வது தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, February 25, 2010

போபால் நகர சாலை மற்றும் மைதானத்திற்கு சச்சின் பெயர்

போபால் : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்க மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், குவாலியரில் உள்ள சாலை ஒன்றிற்கும், மைதான அரங்கிற்கும் சச்சினின் பெயரை சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனை அவை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.

சச்சின்னின் வாழ்க்கை வரலாறு ஒரே பார்வை