Showing posts with label World Ratings... Show all posts
Showing posts with label World Ratings... Show all posts

Thursday, February 18, 2010

கவர்ச்சியில் இந்தியர்களுக்கு எட்டாவது இடம்

லண்டன் :   உலகில் அதிக கவர்ச்சியானவர்கள் யார் என்று நடந்த சர்வேயில் இந்தியர்களுக்கு எட்டாம் இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனில் உலகில் யார் அதிக கவர்ச்சியானவர்கள் என்ற சர்வேயை http://www.onepoll.com என்ற இணையதளம் நடத்தியது. அதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
அந்த சர்வேயின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாக "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை கூறியிருப்பதாவது: அமெரிக்க ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்ளூனி மற்றும் நடிகை ஏஞ்சலினா ஜோலி இவர்கள் முதலிடத்திலிருக்கின்றனர். இரண்டாமிடம் பிரேசிலுக்கு. மூன்றாமிடத்தில் ஸ்பெயினும், நான்காமிடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. சுவீடன் ஆறாவதாகவும், பிரிட்டன் ஏழாவதாகவும் இருக்கின்றன. இந்தியாவின் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், காத்ரீனா கைப், சல்மான் கான் போன்றோர் எட்டாமிடத்தில் இருக்கின்றனர். பிரான்ஸ் ஒன்பதிலும், கனடா பத்தாம் இடத்திலும் உள்ளன. அடுத்த பத்து இடங்களில் போர்ச்சுகல், ஜப்பான், நெதர்லாந்து போன்றவை இருக்கின்றன. 20 வது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. இவ்வாறு அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Monday, February 15, 2010

உலகின் மோசமான நகரம்: டாக்காவுக்கு இரண்டாமிடம்

டாக்கா:உலகில் மோசமான நகரங்களில் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. பொருளாதார நுண்ணறிவு பிரிவு உலகில் உள்ள நகரங்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்தது. இதில் கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுசூழல், கல்வி, மற்றும் குற்ற நிகழ்வுகள் அடிப்படையில் 140 நாடுகளின் தலைநகரங்கள் உட்பட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 98 சதவீத மதிப்பெண் கனடாவின் வான்கூவர் நகருக்கு கிடைத்தது. இந்நகரம் தான், உலகிலேயே சிறந்த நகரம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.உலகின் மோசமான நகரங்களின் வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரே(37.5 மதிப்பெண்). இரண்டாமிடம் வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு(38.7 மதிப்பெண்) கிடைத்துள்ளது. மூன்றாவது இடம் அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸ்க்கு கிடைத்துள்ளது.

Friday, February 12, 2010

வாழ்வதற்க்கு சிறந்த நகரமாக வேன்கூவர் தேர்வு

சிட்னி : வாழ்வதற்கு சிறந்த நகரமாக கனடா நாட்டின் வேன்கூவர் நகரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் முதலிடத்தை வேன்கூவர் பெற்றுள்ளது. மருத்துவ வசதி , கலாச்சாரம் , சுற்றுச்சூழல், கல்வி , கட்டுமான என பல்வேறு வசதிகளை அடிப்படையாக கொண்டு வேன்கூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.