Showing posts with label True Incidents. Show all posts
Showing posts with label True Incidents. Show all posts

Monday, June 14, 2010

சுடுகாட்டு வெட்டியான் வேலை பார்க்கும் ஊராட்சி தலைவர்

தேனி :தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவர் சின்னவரதன் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார்.

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சின்னவரதன். சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்த இவர், தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் தலைவரானால் வெட்டியான் வேலைக்கு ஆள் இல்லாமல் போய் விடுமே என ஊர் மக்கள் கருதினர். எனவே சின்னவரதன், "நான் வெற்றி பெற்று தலைவராக வந்தாலும் வெட்டியான் வேலையை தொடர்ந்து செய்வேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய சின்னவரதன் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் தற்போது வரை வெட்டியான் வேலை பார்த்து வருகிறார்.

இது குறித்து சின்னவரதன் கூறுகையில், "இந்த ஊரில் யார் இறந்தாலும் முதலில் எனக்கு தகவல் சொல்வார்கள். நான் முதல் மாலை போட்டு விட்டு, அடுத்து ஆக வேண்டிய காரியங்களை பார்ப்பேன். தலைவரான பின்னரும் சுடுகாட்டில் நானே குழி வெட்டினேன். பெரியோர்கள் சிலர் என்னிடம் வந்து நீங்கள் இறங்கி குழி வெட்ட வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் ஆள் வைத்து குழி வெட்டுங்கள் எனக்கூறினர். எனவே அப்போது முதல் குழிவெட்டவும், தேர் இழுக்கவும் நான்கு பேரை வேலைக்கு வைத்து இந்த பணிகளை செய்து வருகிறேன்.இங்குள்ள தொண்டு நிறுவனத்தில் இறந்த இரண்டு அனாதை பிணங்களை நானே புதைத்தேன்.

இதே கர்ப்பிணி ஒருவர் குழந்தை பிறந்ததும் இறந்தார். அவர் உடலை நானே புதைத்தேன். இதனால் என் மீது மக்களுக்கு மரியாதை கூடி விட்டது.தற்போது வகிக்கும் பதவிக்காலம் முடியவும், நானே இறங்கி மீண்டும் குழி வெட்டுவேன். அதுவே என் தொழில். கடைசி வரை இத்தொழிலை கை விடப்போவதில்லை. நான் ஆரம்பம் முதலே துண்டு, செருப்பு அணிவதில்லை. தலைவரான பின்னரும் துண்டு, செருப்பு இல்லாமல் மக்களுக்கு பணியாற்றுகிறேன்.இதற்கு முன் தலைவராக இருந்தவர்கள் சுடுகாட்டு பிரச்னை பற்றி கண்டுகொள்ளவில்லை. நான் தலைவரானதும் ஊருக்குள் ஏராளமான பணிகளை செய்துள்ளேன். சுடுகாட்டில் சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி, பிணத்துடன் செல்பவர்கள் அமரும் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்' என்றார்

Wednesday, May 19, 2010

எஸ்.பி.,யாக வேண்டும்: போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைக்கும் சிறுவன் விருப்பம்


பெரம்பலூர் : போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைத்து வாழும் சிறுவன் ஒருவன் தான் போலீஸ் எஸ்.பி.,யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14).

ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர்(55) என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ராமர், சிறுவன் மணிகண்டனுக்கு கஞ்சி மட்டும் உணவாக தந்து, ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினார். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து தப்பி வந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தான். சிறுவன் மணிகண்டனின் சோகக்கதையை கேட்ட பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், அவன் படித்த பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டி.சி., வாங்கி வந்து, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை உதவியுடன், அவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி விட்டு, கோடை விடைமுறையை, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கழித்து வரும் சிறுவன் மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் தங்கள் வீட்டிலும், ஓட்டலிலும் உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

சிறுவன் மணிகண்டன் கூறியதாவது: என் அப்பா, அம்மா இருவரும் கேரளாவில் இருக்கின்றனர். என் அப்பா, என்னை 6,000ம் ரூபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார். என் முதலாளி அடித்து துன்புறுத்தினார். நான் அங்கிருந்து தப்பி வந்து பெரம்பலூர் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். என்னை இன்ஸ்பெக்டர் சார் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் உள்ள அறையில் தங்கி உள்ளேன். என்னை விற்பனை செய்த என் பெற்றோரை பார்க்க நான் விரும்பவில்லை. நன்றாக படித்து, போலீஸ் எஸ்.பி.,யாக வர வேண்டும் என்பதே என் ஆசை. என் பெற்றோர் வீடாக நினைத்து ஸ்டேஷனுக்கு வந்துள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினான்.

Thursday, April 29, 2010

இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம் !

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச டில்லி வருமாறு தந்திரமாக அழைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசிய இடத்தில் இவரிடம் நடந்த விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மாதுரிக்கு தற்போது வயது 53 . மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.
டாக்டர் தம்பதியினருடன் உறவு : இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி. இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ ரகசியங்களை காசாக்கினார்: குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். நம்பிக்கை, மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Wednesday, April 28, 2010

30 வருடமாக மருத்துவமனையில் அடைக்கலம்.. மூதாட்டியின் அவல நிலை



  

Saturday, April 24, 2010

தேவடியா பசங்க……

இந்த கொளுத்தும் வெயிலில், எல்லோரும் ஏ.சி காரில் செல்லதான் ஆசைப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால். எனக்கு என் பல்சர் பைக்தான் ஏ.சி கார். என்னுடைய உற்ற தோழன் என்று கூட சொல்லலாம். நான் நினைத்த மாத்திரத்துக்கு என்னை கொண்டு சேர்த்து விடும். அதுவும் பத்திரமாக..நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் பயணம் முழுவதும், என் மேல் ஒட்டிக்கொண்டு எப்போதும் நேசத்துடன்.
நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தின் செலவீனங்களைப் புரிந்து கொண்டு இதுவரை ஒருமுறை கூட எனக்கு செலவு வைத்ததில்லை. சைடு ஸ்டாண்ட் போட்டு அது நிற்கும் அழகைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு மாதிரி கர்வத்துடன் நிற்பது போல் இருக்கும். காலை ஆறு மணி போல பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லா இடங்களில், தென்றலை அனுபவித்துக் கொண்டு ஓட்டிப்பாருங்கள். அனைத்தையும் மறந்து விடுவீர்கள்…காலை பேப்பர், பால் பாக்கெட், மாத சம்பளம், அப்ரைசல், ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் தூசி போல இருக்கும்.
அப்படிப்பட்ட என் தோழனுக்கு நேற்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மக்கர் செய்தான். ஆபிஸிலிருந்து கிளம்ப முடியவில்லை. நான் என்றும் அவனை உதைத்து ஸ்டார்ட் பண்ணியதில்லை, அவனுக்கு வலிக்கும் என்பதால். எப்போதும் பட்டன் ஸ்டார்ட்தான். முதல் முறையாக அவனை உதைத்தேன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு. அப்படியும் அமைதியாக இருந்தான்.
எனக்கு எப்போதும் பிடிக்காத சென்னையின் நெரிசல் நிறைந்த பஸ் பயணத்திற்கு ரெடியானேன். வேளச்சேரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறினேன். எனக்கு எப்போதும் நெரிசல் நிறைந்த பஸ் பயணம் பிடிப்பதில்லை. ஆண்களையே கற்பழித்து சக்கையாக தூக்கி எறிந்து விடும் நீங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில். அதனால், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.
கையில் சற்று கிழிந்து போன மலிவு விலை ஹேண்ட்பேக் வைத்திருந்தாள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க ஹேண்ட்பேக்கை திறந்தாள். ஹேண்ட்பேக் சற்று சரியவே , அதில் உள்ள அனைத்து சில்லறைகளும் சிதறின. கதறி விட்டாள்..”அய்யோ..என் காசு..” பாவம், அந்தக் காசை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பாள். வேலையில் எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு…ஒரு கணம் பெண் என்பதை மறந்து, எல்லோரையும் கை வைத்து தள்ளினாள். குனிந்து எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தாள், ஆடை விலகுவதை கூட மறந்து. எல்லாக் கழுகு பார்வைகளும் அவள் மேலேயே இருந்தன சில பேர் உதவ முயற்சி செய்தார்கள். சில பேர்,மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு, சாக்காக அவளை தொட முயற்சித்தார்கள். அவளுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எப்படியாவது எல்லாக் காசுகளையும் எடுத்து விடவேண்டுமென்பதே அவள் நோக்கமாக இருந்தது. கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.
ஒரு வழியாக எல்லாக் காசுகளையும் எடுத்த பின்புதான் நிம்மதியானாள். எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. அவள் ஆடைகளை சரி செய்து கொண்டாள். “1 பாரிஸ் கார்னர்” என்று டிக்கெட் வாங்கும்போது அவள் குரலில் ஒரு உற்சாகம் தெரிந்தது. திடிரென்று அவள் முகம் ஒரு மாதிரியானது. சற்று நெளிந்தாள். முன்னே வர முயற்சித்தாள். ஆனால் கூட்டம் அவளை விடவில்லை. அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் நின்று கொண்டு ஒரு மனித மிருகம் அவளை உரசிக் கொண்டு இருந்தது. அந்த மிருகத்திற்கு ஒரு 40 வ்யது இருக்கும். அவனுக்கு அவள் வயதில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். முகத்தில் கேவலமான ஒரு புன்னகை. அவளை உரசுவதன் மூலம் அப்படி என்ன சாதித்தானோ என்று தெரியவில்லை., அவன் அம்மாவிற்கும் தங்கச்சிக்கும் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கும் என்பதை மறந்து.
அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாள். முடிந்த வரை தள்ளிப்போக முயற்சித்தாள். ஆனால் இருக்கும் கூட்டத்தில் முடியவில்லை. அவனும் இதையே சாக்காக எடுத்துக் கொண்டு மேலும் உரசினான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனாள். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தள்ளிப்போனான். ஆனால் திரும்பவும் அவளருகிலேயே வந்தான். எனக்கு அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் ஏதாவது சொன்னால் திரும்ப கிடைக்க போகும் பதில்,”அப்படி சொகுசா வரணும்னா ஏ.சி காரில் வரவேண்டியதுதான..பஸ்ஸுனா அப்படிதான்பா இருக்கும்..” அதற்குள் என் ஸ்டாப் வந்ததால் அவசரமாக இறங்கினேன், என் கையாலாகதனத்தை நொந்து கொண்டு..
இறங்கி திரும்பி பார்த்தால், அவளும் என் ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “பாரிஸ் கார்னர்” என்றல்லவா டிக்கெட் எடுத்திருந்தாள். யோசனையுடன் நான் கிளம்ப எத்தனித்த போது அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது….நான் நின்றேன்..
“அண்ணா..ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..”
அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. முகம் பஸ்ஸில் நடந்த அவமானத்தை காட்டியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூனி குறுகி போயிருந்தாள்..எனக்கு ஒரு தங்கை இல்லை. ஆனால் அவளை பார்க்கும்போது என் தங்கையாக நினைக்க தோன்றியது..
“சொல்லுமா…”
“நான் பாரிஸ் கார்னர் போகணும்..இந்த ஸ்டாப்புல பாரிஸ் கார்னர் பஸ் நிக்குமான்னு தெரியுமா..”
“நம்ம வந்த பஸ்ஸே பாரிஸ் கார்னர் போகுமே..தெரியாம இறங்கிட்டியா..”
“இல்லைண்ணே..பஸ்ஸில கூட்டம் அதிகம்...ரொம்ப இடிக்கிறாயிங்க..இடுப்பில கை…”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்ணில் அடங்கியிருந்த கண்ணிர் அவளை அறியாமல் வெளியே வந்தது..அவசரமாக துடைத்துக் கொண்டு அந்த வார்த்தையை சொன்னாள்…
“தேவடியா பசங்க…”

Friday, April 16, 2010

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோவால் பரபரப்பு

நாகர்கோவில், ஏப். 15-
 
திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.
 
செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.
 
முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.
 
குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.
 
கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.
 
முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.
 
இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.
 
சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.
 
எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tuesday, April 13, 2010

படுக்கையில் இருந்தபடியே பொது அறிவிப்பு: கிராமத்து முதியவர் சேவை

பிகானிர் :  விபத்து ஒன்றில் ஊனமாகி படுத்த படுக்கையாகி விட்ட முதியவர், ஊர், உலக விஷயங்களை மைக் மூலம் கிராம மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டம் சுய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிசுபால சிங்(58). கடந்த 89ம் ஆண்டு நடந்த விபத்தில் முதுகெலும்பு உடைந்து, 20 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கிறார். இவர் படுக்கையில் கிடப்பதை கேள்விப்பட்ட சமூக சேவகர் சஞ்சய் கோஷ் என்பவர், சிசுபால சிங்குக்கு மைக் மற்றும் ஸ்பீக்கர் உபகரணங்களை வாங்கி தந்தார்.தினமும் பத்திரிகைகளை படிக்கும் வழக்கம் கொண்ட சிசுபால், 'டிவி' மற்றும் ரேடியோ செய்திகளையும் சேகரித்து, அதை மைக் மூலம் தனது கிராம மக்களுக்கு அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரது அறிவிப்பு மூலம், படிப்பறிவு இல்லாத கிராம மக்கள் உலக விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர்.


வானிலை அறிக்கை, விவசாய பொருட்களின் விலை, மேலும் இக்கிராம மக்களுக்கு தேவையான செய்திகளையும் இவர் படுக்கையில் இருந்தபடியே மைக் மூலம் தெரிவித்து வருகிறார்.அதிகாலையில் விழித்து கொள்ளும் சிசுபால், ஆன்மிக சிந்தனை அறிவித்து, அனைவரையும் பணிக்கு செல்லும் படி கூறுவார். போதை, புகை பழக்கங்களை ஒழிக்கும் படியும், இந்த பழக்கத்தால் விளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவார்.ரேஷன் கடையில் தினசரி போடப்படும் பொருட்களின் விவரத்தையும், கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தகவல் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Friday, April 9, 2010

மீட்டர் வட்டிக்காரர்கள் பிடியில் தேனி மலைக்கிராமங்கள்

தேனி :  மீட்டர் வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ள வருஷநாடு- கடமலைக் குண்டு மலைக்கிராமத்தினர், பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.

கண்டமனூரில் துவங்கி, மயிலாடும் பாறை, கடமலைக்குண்டு, வருஷநாடு பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் கண் ணில் படும் இடங்களில் எல்லாம் கொட்டைமுந்திரி, இலவம் பஞ்சு மரக்காடுகள் தான். இவற்றின் விளைச்சலை நம்பி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராம குடும்பத்தினர் இருக்கின்றனர். இம்மரங்களுக்கு இடை யே ஊடுபயிராக சில காய்கறிகளை பயிரிட்டும், சிறிதளவு வருவாய் பார்க்கின்றனர். பெரும்பாலும் பஞ்சு விளைச்சலை வைத்து தான் குடும் பங்கள் பிழைப்பு நடத்துகின்றனர். ஓராண்டு முழுவதும் குடும்பமே இக்காடுகளில் உழைத் தால், மார்ச் முதல் ஜூன் வரை இம்மரங்களில் இருந்து பயன் கிடைக்கிறது. பஞ்சு அறுவடை செய்தாலும், விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

அடிமாட்டு விலைக்கு இவற்றை வாங்கி கொண்டு, கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இடத்தரகர்கள். பெரும்பாலான விவசாயிகள் இத்தரகர்களின் பிடியில் சிக்கி இருப்பதே இதற்கு காரணம். விவசாயத்திற்கு சில ஆயிரங்களை 'மீட்டர் வட்டிக்கு' வாங்கும் விவசாயிகள், உழைப்பில் கிடைக்கும் பஞ்சு, முந்திரியை குறைந்த தொகைக்கு விற்று விட்டு, வறட்சியில் வாடுவது வாடிக்கையாக இருக்கிறது.'மீட்டர் வட்டி' கொடுமையிலிருந்து மீள முடியாமல், அடிமைகளாக வாழும் விவசாயிகள் சிலர், பெயர்களை கூறவே அச்சப்படுகின்றனர்.

அவர்கள் கூறுகையில், பஞ்சு மரத்திற்கு உழவடை, பூச்சி மருந்து தெளித்தல் போன்றவற்றுக் காக சில ஆயிரம் கடன் வாங்குகிறோம். வட்டிக்கு கூட்டு வட்டி என்ற ரீதியில், பல மடங்கு வசூலித்து விடுகின்றனர். பஞ்சு விற்பனையின் போது, ஒரு மூடைக்கு சாமி பஞ்சு 2 கிலோ இலவசமாக எடுத்துக் கொள் கின்றனர். கிலோ பஞ்சு விலையை, மார்க்கெட் விலையை விட பாதிக்கு பாதியாக நிர்ணயம் செய்து கணக்கிடுகின்றனர். கை நீட்டி கடன் பெற்றுவிட்டதால், விவசாயிகளும், அவர்கள் கூறும் கணக்கை மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலை.

இந்தவகையில் ஆண்டு முழுவதும் உழைத்து கிடைக்கும்பஞ்சை ஒட்டுமொத்தமாக வட்டிக்காரர்களிடம் கொடுத்து விட்டு, பாதி நாட்கள் வறுமையில் வாடும் நிலை இருக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பிழைப்பு தேடி, திருப்பூர், கேரளா மாநிலம் பகுதிக்கு சென்று விட்டனர். பல ஆயிரம் குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு இப்பகுதிக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் முடியவில்லை. பரம்பரை பரம்பரையாக கூலி வேலை செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள் ளோம். மீட்டர் வட்டி கொடுமையிலிருந்து மீட் கப்படுவதுடன், இடைத்தரர்கள் தலையீட்டைஒழித்து, பஞ்சு விலையை அரசு நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுத் தால் மட்டுமே மலைக்கிராமத்தினர் அடிமைத் தனத்திலிருந்து மீள முடியும் என்றனர்.மலை கிராமங்களில் மீட்டர் வட்டிக் கொடுமையால் மக்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுவருகிறது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி, மீட்டர் வட்டிக் கொடுமையிலிருந்து மலைக்கிராமத்தினரை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tuesday, March 23, 2010

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

மதுரை : படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு நேற்று முன் தினம் மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம். இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர்.

30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், நேற்று முன் தினம் மாலை மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.

Monday, March 22, 2010

போவது எங்கே? ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் மாயம்

பொதுச் சுவர்களில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்ட்களுக்கு இடையில் Ôகாணவில்லைÕ என்ற விளம்பரப் போஸ்டரையும் காண முடியும். அஞ்சலி போஸ்டர் அளவுக்கு கூட அது நம்மை பாதிப்பதில்லை. படிப்பவர்கள் கூட பத்தாவது நிமிடத்தில் யாரோ எவரோ என்று மறந்து விடுகின்றனர். ஆனால் இது மறக்கவும், மறைக்கவும் வேண்டிய விஷயமா? 
தமிழகத்தில் மட்டும் கடந்த 2009ம் ஆண்டில் 4762 பேர் காணாமல் போயுள்ளனர். நீண்ட தேடலுக்கு பின்னர் அவர்களில் 3600 பேர் மீட்கப்பட்டபோதிலும், இன்னும் 1162 பேர் எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை; என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. ஏன்? இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் காணாமல் போனவர் பட்டியலில் 876 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 488 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மீதி 388 பேர் எங்கே?
இப்படி மாதத்திற்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு காணாமல் போகிறவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கு யார் காரணம்? 
ஒருவர் காணாமல் போவதால், அவரது குடும்பம், உறவினர்களின் பதைப்புக்கு அளவுகள் ஏதுமில்லை. அதேபோல் சில Ôகாணவில்லைÕ சம்பவங்களின் பின்னணிகள் பயங்கரமானவை. சமூக சீர்கேடுக்கு வழிவகுப்பவை. பொதுவாக காணவில்லை விவகாரம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று, அவர்களாகவே விரும்பி காணாமல் போவது. இன்னொன்று, அடுத்தவர்கள் விரும்பாததினால் காணாமல் போவது. முதல் வகையை விட இரண்டாவதின் எண்ணிக்கை அதிகம். அதன் பின்னணி மிகவும் பயங்கரம். 
அவர்களாகவே காணாமல் போகிறவர்களில் காதல், கள்ளக்காதல், ஆன்மிக நாட்டம், கடன், தகராறு, பெற்றோர் அல்லது பிள்ளைகள் புறக்கணிப்பு, தேர்வில் தோல்வி, சினிமா மோகம் என காரணங்களை அடுக்கலாம். 
இனி பிரச்னை இருக்காது என்ற எண்ணம் ஏற்படும்போது வீடு திரும்புகின்றனர். பயம் நீங்காதவர்கள் ஊர் திரும்புவதில்லை. ஓடிச் செல்பவர்கள் இளவயதினராக இருந்தால் காலப்போக்கில் குற்றவாளிகளாக உருவெடுக்கின்றனர். முதியவர்களாக இருந்தால் வேறு வழி, பிச்சைதான். பெண்களாக இருந்தால் நடைபெறும் கொடுமைகள் பட்டியலில் அடங்காது. காதலுக்காக ஓடும் பெண்களுக்கு காதலன் நல்லவனாக கிடைத்தால் பிரச்னை இல்லை. பொல்லாதவனாக இருந்தால் விற்பனை பொருளாகி வீணாகி விடுவதும் உண்டு. 
விரும்பி காணாமல் போகிறவர்களில் 23 முதல் 50 சதவீதத்தினர் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களால் கண்டறியப்படுகின்றனர். மற்றவர்களின் விருப்பத்திற்காக காணமல் போகிறவர்கள், அதாவது கடத்தப்படுகிறவர்கள் திரும்ப கிடைப்பது அரிது. பணம், சொத்து, கள்ளக்காதல், வருமானம், சாதி, அரசியல், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக கடத்தப்படுகிறவர்கள் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர்.

தமிழகத்தில்...

காணாமல் போனவர் பற்றிய விவரங்களை மாநில அளவில் சேகரித்து, அதுபற்றி அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் மூலம் வெளியிடும் நடைமுறை தற்போது உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற வழக்கு விவரங்களை மாநில கிரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவுக்கு தரப்பட வேண்டும். அவர்கள் அதை போலீஸ் துறையின் கிரிமினல் இன்டலிஜென்ஸ் கெஜட்டில் வெளியிடுவார்கள். அந்த கெஜட் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் மட்டுமல்ல. மற்ற மாநில சிஐடி பிரிவுக்கும் அனுப்பப்படுகிறது. போலீஸ் இணையதளத்திலும் இந்த விவரங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது. 
காணாமல் போனவர் வழக்குகளில் கண்டுபிடிப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, போலீஸ் புலன்விசாரணை தான் காரணம் என்பதில்லை. பல வழக்குகளில் கண்டுபிடிப்புக்கு கைகொடுப்பது விளம்பரமாகத்தான் இருக்கிறது. போதுமான விளம்பரம் இல்லாமை, பல பேரை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

Wednesday, March 17, 2010

ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்

திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலின் பாத்ரூமில் மறைவான இடத்தில் மொபைல் போன் கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்ட கல்லூரி மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரளா, கோழிக்கோட்டில் சாகர் என்ற ஓட்டல் உள்ளது. கோழிக்கோட்டில் நடக்கும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் ஐந்து கல்லூரி மாணவியர் வந்திருந்தனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலுக்கு அவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மாணவி மட்டும், அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில், மொபைல் போன் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை, அந்த மாணவி பார்த்தார். அந்த மொபைல் போனில் உள்ள கேமரா இயங்குவதை கண்ட மாணவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, தனது தோழிகளிடம் அதை தெரிவித்தார். விரைந்து சென்ற மற்ற மாணவியர், அந்த மொபைல் போனை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டனர். ஓட்டல் மேலாளரிடமும் முறையிட்டனர். விசாரணையில், ஓட்டலில் வேலை பார்க்கும் நிக்கி ஜோஸ் தான், அந்த கேமராவை அங்கு மறைத்து வைத்திருந்தார் என தெரியவந்தது.
இதற்கிடையே, மாணவியரில் ஒருவர், தனது உறவினரான ராகுலுக்கு இதுகுறித்த போனில் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ராகுல், நிக்கி ஜோசிடம் தகராறில் ஈடுபட்டார். இதற்குள் போலீசார் அங்கு வந்தனர். மொபைல் போனை தங்களிடம் தரும்படி கூறினர். ஆனால், 'போலீஸ் கமிஷனரிடம் தான் மொபைல் போனை தருவேன்'என, ராகுல் அடம்பிடித்தார். இதையடுத்து, ராகுலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அந்த கல்லூரி மாணவியர்,மொபைல் போனை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர். இதற்கு பின், நிக்கி ஜோஸ் கைது செய்யப்பட்டார். இவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ராகுல் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் அவரது காதில் பலமாக அடிபட்டது. இதனால், அவரது கேட்கும் திறன் குறைந்து விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், கோழிக்கோடு பொதுமக்களிடையே வேகமாக பரவியது. ஓட்டல் முன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கோழிக்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணமாலை தும்பிக்கையில் மீண்டும் மாயாவதி : இன்று ரூ.18 லட்சம் மதிப்பு மாலை போட்டனர்

லக்னோ :  பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், கட்சித் தலைவர் மாயாவதிக்கு இன்று மீண்டும் பணமாலை போடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18 லட்சமாம்!. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பண வசூல், உ.பி.,யில் ஆங்காங்கே, தனக்கும், கட்சிச் சின்னமான யானைக்கும் சிலை நிறுவுதல் உட்பட பல புகார்களில் சிக்கித் "திளைத்து' வருகிறார், உ.பி., முதல்வர் மாயாவதி.கடந்த திங்கள் அன்று, கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. காலை முதலே அவருக்கு, "பணமழை' பொழியத் துவங்கி விட்டது. மற்ற பரிசுப் பொருட்களை விட, பணம் மீது தான் மாயாவதிக்கு மோகம் அதிகம் என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டும் அளவுக்கு, பிரம்மாண்டமான பணமாலையை, அவரது ஆதரவாளர்கள், அன்று அவருக்கு அணிவித்தனர். ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன அந்த மாலையின் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, அருகில் இருந்து பார்த்தவர்கள் கூறினர். ஆனால், அதன் மதிப்பு வெறும், ரூ.21 லட்சம் தான் என, கட்சியினர் கூறுகின்றனர். இதனால், மாயாவதிக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், கட்சியின் அவசரக் கூட்டம் இன்று காலை நடந்தது. திங்கள் அன்று போடப்பட்ட பண மாலை குறித்த சர்ச்சையில், எதிர்க்கட்சியினரை எப்படி சமாளிப்பது, அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசியபோது, அவருடைய பேச்சு தடைபடும் வகையில், அவரைச் சுற்றி தேனீக்கள் கூட்டத்தை சுற்ற விட்டது யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்துவது, ஆகிய, "பிரச்னைகள்' குறித்து விசாரிக்கத் தான் இந்தக் கூட்டம் நடந்தது.கூட்டத்தின்போது, மாயாவதிக்கு மீண்டும் ஒரு "இன்ப அதிர்ச்சி' காத்திருந்தது. இன்றும், அவரது கழுத்தில், பணமாலை விழுந்தது. இந்த முறை வசூல், ரூ.18 லட்சம் என கட்சியினர் தெரிவித்தனர். "மாயாவதியை எதிர்க்க முற்படுபவர்கள் அழிந்து போவர்' என்ற கோஷத்துடன் இன்று காலை, கட்சி உறுப்பினர்கள், அவருக்கு மாலை அணிவித்தனர்.இவ்வளவு பணம் எங்கிருந்து கொடுக்கப்படுகிறது என்பது குறித்து வருமான வரித் துறை விசாரணையை முடிக்கி விட்டுள்ளது.மாயாவதி அரசில் அமைச்சராக உள்ள நசீமுதீன் சித்திக்கி என்பவர் கூறியதாவது: கட்சியின் லக்னோ பிரிவினர் கொடுத்த பணம் அது. திங்கள் அன்று அணியப்பட்ட மாலையின் மதிப்பு ரூ.21 லட்சம். மாலையில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து யாராவது எண்ணித் தகவல் கொடுங்களேன். எங்கள் கட்சி ஊர்வலத்தைப் பார்த்து எதிர்க்கட்சியினர் மிரண்டு விட்டனர். அதனால் தான், அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.இவ்வாறு, சித்திக்கி கூறினார். எந்த அச்சுறுத்தலுக்கும் மாயாவதி அடிபணிய மாட்டார் என்பதைக் காட்டவே, இன்று காலையும் அவருக்குப் பண மாலை அணிவித்ததாகக் கட்சியினர் கூறுகின்றனர்.மேலும், இனி எந்தப் பொதுக் கூட்டம் நடத்தினாலும், மாயாவதியை, பணமாலையுடன் மட்டுமே வரவேற்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "தலித் மக்களின் புதல்விக்கும், அவரது கட்சிக்கும், மதிப்பு மிக்க ஆதரவு கிடைப்பதும், அவர் அதிகாரத்தில் இருப்பது கண்டும், எதிர்க்கட்சியினருக்கு பொறுக்கவில்லை' என்று கூறுகின்றனர்.

Monday, March 15, 2010

துபாய் ஓட்டலில் முத்தமிட்ட ஜோடிக்கு 1 மாதம் ஜெயில்

துபாய், மார்ச்.15-
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காதல்ஜோடி அய்மன் நஜாபி (வயது 24), ஜார்லோட் (25). இவர்களில் அய்மன்நஜாபி துபாயில் வியாபார ஆலோசகராக வேலை பார்த்து வந்தார். ஜார்லோட் லண்டனில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
 
காதலரை பார்க்க ஜார்லோட் துபாய் வந்திருந்தார். இருவரும் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். இதை பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். போலீசிலும் புகார் கொடுத்தார்.
 
அந்த நாட்டு சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வது குற்றமாகும். எனவே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
இதுதொடர்பாக வழக்கு நடந்தது. இருவருக்கும் 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள். இதை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்துள்ளனர்.

Wednesday, March 10, 2010

சொல்கிறார்கள்


இழந்த வாழ்வை நிச்சயம் மீட்போம்! பிளாட்பாரக் கடையில் வியாபாரம் செய்து, கோவை சங்கரா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவி �ஷாபனா: அப்பா இறந்த பின், சொந்தமா ஒரு வீடு மட்டும் இருந்தது. அப்போ எனக்கு, இதயத்துல கோளாறு... உடனே, ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட் டாங்க... வீட்டை வித்து ஆபரேஷனை முடித் தோம். இப்போ வாடகை வீட்டில் இருக்கிறோம். என் மருத்துவச் செலவிற்கு மட்டும், மாதம் 3,000 ரூபாய் வேணும்.தம்பி கார்த்திக், வீடு வீடாகச் சென்று புடவை, ஜாக்கெட் விற்பான். நான், படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு கனவு கண்டு, எனக்காக உழைக்கிறான். இப்போ, பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பொம்மை கடை நடத்துறான்.அம்மா இப்போ பெட்ரோல் பங்க் வேலைக்குப் போறாங்க. வெட் கம் பார்க்காம உழைக்கிறோம், நல்லா படிக்கிறோம். எப்படியும் ஜெயிச் சுடுவோம்னு நம்பிக் கையில, ஒவ்வொரு பாடமா பரீட்சை எழுதி முடிச்சு, இப் போ தம்பி பத்தாம் வகுப்பு முடிச்சுட் டான்.நைட் ஷிப்ட் முடிச்சுட்டு அம்மா கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துப் பாங்க. நானும், தம்பியும், மாலை 6.30 மணியிலிருந்து கடையில வியாபாரம் பார்ப்போம். பிளாட்பாரக் கடையில தான் எங்க படிப்பு, வீட்டுப் பாடம் எல்லாம். குடும்பச் செலவு, வீட்டு வாடகை மற் றும் இதர தேவைகளுக்கு, இப்படி உழைச்சாதான் முடியும்.எங்க நிலைமை யை பார்த்த கல்லூரி நிர்வாகம், கட்டணம் செலுத்த வேண் டாம்னு சொல்லிட் டாங்க. எப்படியும் ஒரு நாள், நாங்கள் இழந்த வாழ்வை மீட்டுவிடுவோம்ங் கற நம்பிக்கை எங்ககிட்ட இருக்கு.

Monday, March 8, 2010

அரிவாள் வெட்டுக்கு 500 பேர் பலி ; உலகில் இது வரை நடக்காத கொடூர வெறி



நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஜோஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.






வீடுகளுக்கு தீ வைப்பு : இந்தப்பகுதி மலைப்பாங்கான பகுதி ஆகும். இதன் அருகில் உள்ள அதாவது நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பெரும் பகை இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக இந்த பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வன்முறைக்கும்பல் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டித்தள்ளியது. பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் .




இது குறித்து அதிபர் ஜேனாத்தான் கூறுகையில் இந்த சம்பவம் நடந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் போடப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் முழு விவரம் இன்னும் விவரம் வரவில்லை. 300 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார். உலக அளவில் இன, கோஷ்டி மோதலில் 500 பேர் வரை இறந்திருப்பது உலக அளவில் இது பெரும் கவலை தரும் செய்தி ஆகும்.ஏற்கனவே நைஜீரியாவில் பல மோதல்கள் நடந்துள்ளது. இது போன்ற கொடூர மோதல் என அங்குள்ள உள்ளூர் வாசி தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில் இரவில் வந்த கும்பல் கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் ஒவ்வொரு வீடாக நுழைந்து கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டினர். ரோடுகளில் பிணங்களாக கிடக்கிறது இவ்வாறு கூறினார்.

Friday, March 5, 2010

உத்தரப்பிரதேச ஆஸ்ரமத்தில் நெரிசலில் சிக்கி 65 பேர் பலி

பிரதாப்கர், மார்ச் 4:
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருபாலு மஹராஜ் ஆஸ்ரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். உணவு வழங்கும்போது கூட்டத்தினர் வேகமாக முன்னேறினர். இதில் ஆஸ்ரமத்தின் கதவு கூட்டத்தினர் மேலே விழுந்தது.


கிருபாலு மஹராஜின் மனைவி நினைவு நாளன்று இங்குள்ள பக்தர்களுக்கு உணவு மற்றும் பாத்திரங்கள் வழங்கப்படுவது வழக்கம். இதைப் பெறுவதற்காக பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். உணவு வழங்குவது ஆரம்பமானதும் கூட்டத்தினர் அலைமோதினர்.


இதனால் வாயில்கதவு கீழே விழுந்தது. அப்போது சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களின் மீது மற்றவர்கள் ஏறி ஓடினர். இதில் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பிரதாப்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் என்று இம்மாவட்ட கோட்ட துணை ஆட்சியர் சியாமா சரண் தெரிவித்தார்.


மக்களவையில்...:


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம்  குறித்து உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இதுகுறித்து மாநில அரசிடமிருந்து உரிய விளக்கத்தை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று பிரதாப்கர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரத்னா சிங் வலியுறுத்தினார்.


7ஆண்டுகளில் 800 பேர் நெரிசலில் பலி


கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கடந்த 7 ஆண்டுகளில் 800 பேர் பலியாயினர்.


2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சாமுண்டி தேவி ஆலயத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஏற்பட்ட புரளியால் இந்த நெரிசல் ஏற்பட்டது.


இமாசலப் பிரதேசத்தில் உள்ள நயன தேவி ஆலயத்தில் ஆகஸ்ட் 3, 2008-ல் நிகழ்ந்த நெரிசலில் 150 பேர் உயிரிழந்தனர். இதில் 230 பேர் காயமடைந்தனர்.

இவையிரண்டும் மிக அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்த சம்பவங்களாகும்.


விசாரணைக்கு உத்தரவு


இந்த சம்பவம் குறித்து அலாகாபாத் கோட்ட ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது. 


அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சரவைச் செயலர் சசாங் சேகர் சிங் கூறினார்.


இது தொடர்பாக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.





Saturday, February 27, 2010

ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்


டோக்கியோ, பிப். 27-
ஜப்பானில் யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணியளவில் (இந்திய நேரப் படி நேற்று இரவு 8.31 மணி) பூமி குலுங்கியது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் என்னதோ! ஏதோ! என அலறியபடி எழுந்தனர்.
பின்னர் தான் நில நடுக்கம் என உணர்ந்தனர். இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சீறி எழுந்தது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதை தொடர்ந்து வீடு களில் இருந்து அலறியடித்த படி மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு தேடி ரோடுகளுக்கு ஓடினர். இதனால் பதட்டமும், பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆகவே, பதட்டத்தில் இருந்த மக்கள் அமைதி அடைந்தனர்.
இதற்கிடையே, நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் மையம் அறிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால், யரோன் தீவில் கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டதாக இவான் பிராகின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இது போன்ற நில நடுக்கத்தை தான் உணர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். சமார் 6 வினாடிகள் பூமி குலுங்கியதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜப்பானில் கடந்த 1995-ம் ஆண்டு 7.2 ரிக்டர் அளவில் கோப் துறைமுகத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 6,400 பேர் பலியானார்கள். தற்போது 7.3 ரிக்டர் அளவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே சேத மதிப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Monday, February 22, 2010

'பாஸ்' இருந்தும் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்படும் பார்வையற்றோர்

சிவகங்கை : கண்பார்வையற்றவர்கள், அவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாசில், பயணம் செய்யும்போது, கோட்டம் மாறி பயணிப்பதாக கூறி, சில கண்டக்டர்கள் நடுவழியில் இறக்கிவிடுகின்றனர்.கண்பார்வையற்றோருக்கு, அரசு வேலை, கல்வி உதவியில் முன்னுரிமை தருகிறது. இவர்கள், பள்ளி, கல்லூரி படிப்பு, வேலைக்காக வெளியூர் செல்ல, பார்வை குறைபாடிற்கு ஏற்ப இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளது.

இதற்கான கட்டணத்தை அரசு, அந்தந்த கோட்டங்களுக்கு, வழங்கிவிடுகிறது. இவர்கள், அரசு குறிப்பிட்டுள்ள, கோட்ட பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், கண் பார்வையில்லாதவர்கள் இதை கவனிக்க முடியாது. தெரியாமல், பிற கோட்ட பஸ்களில் ஏறிவிட்டால்,கண்டக்டர்கள், அவர்களை டிக்கெட் எடுக்குமாறு தெரிவிக்கின்றனர். எடுக்க தவறினால், நடுவழியில் இறக்கி விடுகின்றனர். இதனால், அவர்கள் நடுவழியில் சிரமப்படுகின்றனர்.

காளயார்கோவில் கர்ணன் (கண்பார்வை அற்றவர்) கூறியதாவது:பஸ் ஸ்டாண்டில் ஏறும் போது, எக்கோட்டத்தை சேர்ந்தவண்டி என்று கேட்டு ஏறலாம். நடுவழியில் நிற்கும் போது எந்த கோட்ட வண்டி என்று எப்படி கேட்டு ஏறுவது. அனைத்து கோட்ட வண்டிகளிலும் செல்ல, அரசு அனுமதி அளிக்கவேண்டும்.

கண்டக்டர் காசிராஜன் (தேனிகோட்டம்) கூறியதாவது:அவர்களுக்கு வழங்கிய பாசில் குறிப்பிட்ட, கோட்ட வண்டிகளில் மட்டமே ஏறவேண்டும். அவர்களின், பயணசெலவை அரசு, குறிப்பிட்ட கோட்டத்திற்கு மட்டும் தான் தரும். மாற்று வண்டியில் ஏறுவதால் டிக்கெட் பரிசோதகர் வரும் போது, நாங்கள் பாதிக்கப்படுவோம்.

துணை பொதுமேலாளர் பாலகிருஷ்ணசாமி கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் அந்த மாவட் டத்திற்குள் எந்த கோட்ட வண்டியிலும் பயணம் செய்யலாம். இது போன்று நடுவழியில் இறக்கிவிடும் கண்டக்டர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Saturday, February 20, 2010

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் “திடீர்” மாயம்; சொத்துக்காக மனைவி கடத்தினாரா?


புதுடெல்லி, பிப். 20-
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த சில மாதங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறும்போது, அல்ஜிமர்ஸ் என்ற நோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நோய் காரணமாக அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜ் பெர்னாண்டசின் மனைவி லீலா. இவர்களது மகன் சீன் பெர்னாண்டஸ்.லீலா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.பெர்னாண்டஸ் உடல்நல கோளாறால் அவதிப்படுவதை அறிந்த லீலாவும், சீன் பெர்னாண்டசும் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் இருவரும் அவரை வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கடத்திச் சென்று சிகிச்சை அளித்து வருவதாக ஜார்ஜ் பெர்னாண்டசின் நண்பர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும் போது, ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு ரூ.25 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. அதை கைப்பற்றும் நோக்கத்தில்தான் லீலாவும், அவரது மகனும் பெர்னாண்டசை கடத்திச் சென்றுள்ளனர் என்றனர்.
 
தற்போது டெல்லியில் உள்ள ஜார்ஜ் பெர்னாண்டசின் வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனால் அவரது நண்பர்கள், உறவினர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜார்ஜ் பெர்னாண்டசின் நண்பரான முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடா சலய்யா தலைமையில், பெர்னாண்டசை கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சகோதரர், மைக்கேல் பெர்னாண்டஸ் கூறும்போது, நாங்கள் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்தோம். அதற்குள் அவரது மனைவி லீலா அவரை எங்கேயோ கடத்திச்சென்று விட்டார். இதனால் நாங்கள் கோர்ட்டு மூலம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தர விடும்படி வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

Thursday, February 11, 2010

அரசு ஆஸ்பத்திரியில் விலை பட்டியல் பாம்புக்கடி - நாய்க்கடிக்கு ரூ . 100 ஆண்குழந்தை பெற்றால் 500

ஆத்தூர்: அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் ஏழை நோயாளிகளிடம் எந்த, எந்த நோய்க்கு எவ்வளவு காசு என விலை நிர்ணயப்பட்டியல் போட்டு வசூலித்த விஷயம் அம்பலமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நம்பி கோடிக்கணக்கான ஏழை நோயாளிகள் உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரி பக்கமே போகாதவர்களும் உண்டு என்ற நிலை இன்று வரை தமிழகத்தில்  உள்ளது.

இப்படி நம்பி வரும் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வது, நோய்த்தாக்கத்தை விட கொடிய வேதனையை தந்தது. இந்த விஷயம் குறித்து வெளியே சொல்ல அஞ்சியபடி நோய் குணமானால் சரிப்பா என ஆஸ்பத்திரிக்கு புறப்படும்போது கையில் பணத்தை எடுத்து கொண்டு சென்றனர். இந்த விஷயம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எட்டியது. இதனையடுத்து சேலம் மதுரை உள்ளிட்ட மாவடங்களில் சில குறிப்பிட்ட அரசு ஆஸ்பத்தரிக்கு குறி வைக்கப்பட்டது. இதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் 17 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலையில் வந்த அதிகாரிகள் நோயாளி போல பாசாங்கு செய்தபடி வந்தனர். முதலில் அனுமதி சீட்டு வாங்க சென்றபோது ஒரு ரூபாய் கொடு என அதிகாரி தோரணையில் கம்பவுண்டர் கேட்க அதிகாரியும் நூறு ரூபாயாக இருக்கிறது என்றதும் இந்த 99 ரூபாய் பிடி என கொடுக்க அடுத்த நபரிடம் 1 ரூபாய்க்கு கை நீட்ட சிக்கினர் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கவேல், முருகன். அடுத்தபடியாக பிரசவ வார்டுக்கு சென்றனர். அங்கு அதிரடி ரெய்டில் வளர்மதி, சிவகாமி, சீதாலட்சுமி சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்தரியிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

அட்மிட் ஆனால் 100 ரூபாய் : ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எந்த நோய்க்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்ற விவரம் தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் படி அய்யா பாம்புக்கடிக்கு - 100 ரூபாய், நாய்க்கடித்தால் - 100 ரூபாய், வெட்டு காயங்களுடன் வந்தால் - 300 ரூபாய், பிரசவ வார்டில் கொடுமையோ, கொடுமை. லஞ்சம் உச்சக்கட்டத்தில் எகிறி குதித்திருக்கிறது. இங்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் இங்கு இருக்கும் நர்சுகளுக்கு 500 ரூபாய் கட்டியாக வேண்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு நூறை குறைத்து 400 ரூபாய். எந்த நோயாளியாக இருந்தாலும் அட்மிட் ஆகும் போது 100 ரூபாய் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறு பணம் கொடுத்தால்தான் முறையான கனிவான சிகிச்சை நடக்கும். இல்லாத பட்சத்தில் நாய்க்கடி வேதனையோடு துடிக்க வேண்டியது தான். ஆஸ்பத்தரியில் சோதனை நடத்தப்பட்டதும், சில நோயாளிகள் தாங்களாகவே முன்வந்து புகாரை பதிவு செய்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கட்டண சிகிச்சை அக்கம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.