மும்பை: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், சென்ற 2009ம் ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களால், நம் நாட்டுக்கு அனுப்ப பட்ட தொகை சுமார் 100 கோடி டாலர் அதிகரித்து 2,751 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டின் இதே காலத்தில் 2,637 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்த படும் தொகைக்கு அதிக வட்டி வழங்க பட்டது. இதே காலத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்திருந்தது. இதுபோன்ற காரணங்களால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தொகை வந்துள்ளதாக கூறப்படுகிறது
Showing posts with label India Rocks. Show all posts
Showing posts with label India Rocks. Show all posts
Sunday, April 18, 2010
உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ்
நியூயார்க்: உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் இந்தியாவின் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. புதுமைகளை புகுந்துவதில் உலகின் சிறந்த 50 நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப் பட்டது. இதில், முதலிடத்தை அமெரிக்காவின் ஆப்பிள் வேர்ல்டு பிடித்துள்ளது. இந்தியாவின் டாடா குழுமம் 17 இடத்தையும் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 33வது இடத்தையும் பெற்றுள்ளன. இப்பட்டியலில் முதலில் உள்ள பத்து நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு: ஆப்பிள் வேர்ல்டு, கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம். டொயோட்டா, அமேஸான் டாட் காம், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், பிஒய்டி, ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் சோனி. 50 நிறுவனங்களில் 24 நிறுவனங்களை வட அமெரிக்காவும் 11 நிறுவனங்களை ஐரோப்பாவும் 15 நிறுவனங்களை ஆசியாவும் பெற்றுள்ளன.
Thursday, March 11, 2010
உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர்
நியூயார்க்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் டாப் -10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ரிலையன்ஸ் பங்குதாரர் அனில் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். பல இந்தியர்கள் கடந்த கால பொருளாதார வீழ்ச்சியினால் பிசினஸ்சில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலக கோடீஸ்வரர்களில் பட்டியலில் இந்தியர்கள் பலர் தங்களது நிலையை இழந்து, ஆசியாவிலேயே இந்தியா நீண்ட காலம் டாப்பில் இருந்து வந்தது மாறி சீனா முன்னுக்கு சென்றுள்ளது என்றும் நியூயார்க் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பணக்காரர்கள் சிலர் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை நிறுவனம் 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு நஷ்டம்: இதில் ஆயில் நிறுவனங்கள் நடத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வரும் முகேஷ் அம்பானி ( 29 பில்லியன் டாலர் ) சொத்து மதிப்பு கொண்ட இவர் 4 வது இடத்தை பிடித்துள்ளார். எஃகு உலகில் கொடிக்கட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் ( 28. 7 பில்லியன் டாலர் ) சொத்து கொண்ட இவர் 5 வது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் கம்னியூகேஷன், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் நடத்திவரும் அனில் அம்பானி கடும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது சொத்தில் 76 சத வீதம் நஷ்டத்தை கண்டுள்ளார். எனவே இவர் இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பபட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கு முதலிடம் : மெக்சிகன் டெலிகாம் கார்லஸ் சிலிம் ஹெலு 53.5 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்சை பின்னுக்கு தள்ளி பலமிக்க மனிதராக உருவெடுத்துள்ளார். பில்கேட்ஸ் தற்போது 2 வது இடத்தையும், வார்ரன் பப்பட் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக கோடீஸ்வரர் பட்டியில் தற்போது பாகிஸ்தானும், பின்லாந்தும் நுழைந்துள்ளது என்பது புதிய தகவல். கடந்த ஆண்டில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட 44 சத வீழ்ச்சியே இந்தியர்களின் நிதி நிலையை ஒரு பதம் பார்த்து விட்டது என்றும் இந்த ஆய்வு விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 9, 2010
வேகமாக முன்னேறுகிறது இந்தியா : மத்திய புள்ளியியல் துறை தகவல்
சென்னை :"பொருளாதார மந்த நிலையிலிருந்து வேகமாக மீண்டுவரும் நாடுகளில் சீனாவை தொடர்ந்து இந்தியா, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 6.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது 7.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல்பாதியில் மந்தமாக காணப்படும் ஜி.டி.பி., வளர்ச்சி, வருடத்தின் பிற்பகுதியில் வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது' என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு விவசாயத் துறையில் வளர்ச்சி 1.6 சதவீத இழப்பும், நடப்பு வருடத்தில் இழப்பு 0.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் கடந்த ஆண்டு 3.2 சதவீத வளர்ச்சியும், நடப்பு வருடம் 8.9 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று தெரிகிறது.ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் 6.5 சதவீத வளர்ச்சியும், நிதியுதவி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரத் துறையில் 10.1 சதவீத வளர்ச்சியும் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், சமூகம் மற்றும் தனிப்பட்ட மனிதர்களுக்கான செலவுகள் கடந்தாண்டு 13.9 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு 9.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு உணவுப்பொருள் விலை ஏற்றத்திற்கு காரணம், பருவம் தவறி பெய்த மழையால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிப்படைந்ததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய புள்ளியியல் துறையை தவிர்த்து, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆய்வின்படி நடப்பு ஆண்டு ஜி.டிபி., வளர்ச்சி 7.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியின் ஆய்வுப்படி 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)