Showing posts with label Tamilnadu. Show all posts
Showing posts with label Tamilnadu. Show all posts

Saturday, February 12, 2011

டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியம்: ஒரே கவரில் 9 "ஹால்டிக்கெட்'கள்

பழநி : டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், வி.ஏ.ஓ., தேர்விற்கு தயாராகும் பலர், ஏமாற்றத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.







வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பிப்., 20 ல் நடக்க உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பழநி அருகே பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு, நேற்று ஹால்டிக்கெட் கவர் வந்தது. இதைப் பிரித்தபோது, பொன்னுச்சாமி உட்பட ஒன்பது பேரின் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின், ஹால்டிக்கெட்கள் இடம்பெற்றிருந்தன.







பொன்னுச்சாமி கூறுகையில், ""தவறுதலாக ஒரே கவரில் வந்திருக்கலாம். பிறரது ஹால்டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்திற்கே திருப்பி அனுப்ப உள்ளேன்,'' என்றார். மேலும் போட்டோவுடன் விண்ணப்பித்த சிலருக்கு, போட்டோ, தவறுதலான முகவரி போன்றவற்றுடன் அனுப்பப்பட்டு உள்ளது. இத்தேர்வை நம்பி பலர் ஏற்கனவே பார்த்துவந்த பணியை விட்டுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, தேர்விற்கு தயாராகி வந்தனர். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், பலர் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.








Friday, December 31, 2010

இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில்மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Wednesday, April 28, 2010

ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்

சென்னை :  சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றும்போது, சபைக் காவலர்கள் தங்களை தாக்கியதாக ஆண் எல்.எல்.ஏ.,க்களும், பெண் எம்.எல்.ஏ., ஒருவரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளிக்கத் துவங்கினார். அப்போது, அ.தி.மு.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று தங்களை பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து குரல் எழுப்பினர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன்பாக ஒன்று திரண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் முன்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோஷங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்த வண்ணம் இருந்தார்.

'நீங்களாக சபையில் இருந்து வெளியேறினால் மீண்டும் உள்ளே வரலாம். நானாக, வெளியேற்றினால் திரும்ப உள்ளே வர முடியாது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் எச்சரித்தார்.இதன் பிறகும் கோஷங்களை எழுப்புவதை அ.தி.மு.க.,வினர் தொடர்ந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் கோஷங்களை படிக்க, அதை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் திரும்ப கூறினர். ' கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருகிறேன். சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, சபாநாயகர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, நிதியமைச்சர் அன்பழகன் பேசும்போது, ' கேள்வி நேரம் முடிந்ததும், எந்தவொரு எம்.எல்.ஏ.,வோ, கட்சித் தலைவரோ தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், அரசை கண்டித்துப் பேசவும் உரிமை உண்டு. கேள்வி நேரம் என்பது அவையில் உரிமை. அதை மாற்ற முடியாது. இப்போது எழுந்து நின்று குரல் எழுப்புவது அவை நடவடிக்கைகளை தடுப்பதாக பொருள்படும்' என்றார்.

'சபை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் இவர்களை வெளியேற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும் பணியில் சபைக்காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனின் கையைப் பிடித்து இழுத்து வெளியேற்ற, காவலர் ஒருவர் முயற்சித்தார். இதை தடுத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவரையும் சபைக்காவலர்கள், 'நகர்த்தி' வெளியேற்றினர். அதே போல், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சி.வி. சண்முகத்தை வெளியேற்றும்போது, தள்ளுமுள்ளு நடந்தது. அவரது ஒரு செருப்பு சபைக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், ஒற்றை செருப்புடன் சபையில் இருந்து வெளியேறினார். பின், அதையும் சபைக்கு வெளியே விட்டு விட்டு வெளிநடப்பில் பங்கேற்றார்.

சபைக்கு வெளியே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா செங்கோட்டையன் ஆகியோர் கூறும்போது, 'முக்கியப் பிரச்னைகளின் போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து பேச சபையில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், அது பற்றி சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.தொடர்ந்து பேச முற்பட்டபோது, எங்களை வெளியேற்றியுள்ளனர். நாங்களாக வெளியேறும்முன், சபைக் காவலர்களை வைத்து எங்களை தர, தர என இழுத்து வெளியேற்றினர். இது போன்ற சம்பவத்தை சபாநாயகரும் வேடிக்கை பார்க்கிறார்' என்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை சபைக் காவலர்கள் வயிற்றில் குத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

பெண் எம்.எல்.ஏ.,க்கள் புகார்: அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., பதர் சயீது கூறும்போது, ''நாங்கள் வெளியேற வந்தபோது, வலுக்கட்டாயமாக இழுத்ததோடு, சபைக் காவலர்கள் என் வயிற்றில் குத்தினர். நான் வெளியில் போகவில்லை என்றால், தூக்கித்தான் செல்ல வேண்டும். அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது' என்றார். இளமதி சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பெண் காவலர்கள் சேலையை பிடித்து இழுத்தனர். இதனால், எனது ஜாக்கெட் கிழிந்து விட்டது' என்றார்.

Tuesday, April 13, 2010

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 3வது இடம்

சென்னை :  இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது; முதலிடத்தில் டில்லி உள்ளது.இந்தியாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், பார்லிமென்ட், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை டில்லி பிடித்துள்ளது.இங்கு ஆண்டுக்கு 23.4 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல, பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமையுடன் மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.தமிழகத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளால், இங்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகள், அழகிய மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், கோவில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற நகரங்கள், இவற்றுக்காக, ஆண்டுக்கு  20 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் இங்கு வந்து செல்வதாக, சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

மது அருந்தினால் ரூ.1000 அபராதம்: தகவல் கொடுத்தால் ரூ. 500 பரிசு

பாலமேடு : கிராமத்திற்குள் யாரும் மது அருந்தக்கூடாது என்றும், ஏழை, பணக்காரர் யார் இறந்தாலும் கிராமத்தின் மூலம் அடக்கம் செய்யலாம் என்றும், மதுரை அருகே ஒரு ஊராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி, பாறைப்பட்டி இணைந்து சரந்தாங்கி ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக முத்தையா என்பவர் தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்து வருகிறார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது பெரும் வகையில் யூனியன், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நிர்மல் புரஷ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். முதல் ஆண்டில், ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் யாரும் திருடக் கூடாது, மீறுபவர்களுக்கு, கிராமம் சார்பில் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அது கிராம கட்டுப் பாட்டிற்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதும், ஊருக்குள் போலீஸ் நுழையக்கூடாது, எவ்வித பிரச்னையும் கிராம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கிராம ஒற்றுமை கிடைக்கும் என அறிவித்தார். இதுவும் நல்ல பலனை தந்தது. மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டதும், முத்தாலம்மன் கோயில் பூசாரி ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் முத்தையா தலைமையில் மீண்டும் கூட்டம் கூடியது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கிராமத்தில் யாரும் மது அருந்தக்கூடாது, மீறிகுடித்தால், கோயிலில் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மது அருந்தியவர் குறித்து யாரேனும் தகவல் கொடுத்தால், அவருக்கு கிராமத்தின் சார்பில் ரூ. ஐநூறு பரிசு வழங்கப்படும். கிராமத்தை சுற்றிலும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் அள்ளுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், மணல் அள்ளுவது குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு. ஊராட்சி பகுதிக்குள் யார் இறந்தாலும் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கிராமத்தின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்படும் என தீர்மானம் கொண்டு வந்தனர். நான்கு தினங்களுக்கு முன் முருகேசன் என்பவர் டிராக்டரில் மணல் அள்ளினார். அதை மாயன் என்பவர் தகவல் தெரிவித்தார். மணல் அள்ளியவருக்கு ஆறாயிரம் அபராதமும், தகவல் தந்தவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு அளித்தனர். ஊராட்சி முடிவுக்கு பின், கிராமத்திற்குள் மது அருந்துவதை பலரும் நிறுத்தி விட்டனர். வெளியூரில் மது அருந்தினால், உறவினர் வீட்டில் தங்கியிருந்து மறு தினம் ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது குறித்து தலைவர் முத்தையா கூறியதாவது, மது அருந்தி விட்டு ஊருக்குள் அசிங்கமான பேச்சுக்கள், இறப்பு வீட்டில் ஆடம்பரம், கோயில் திருவிழா சமயத்தில் வரி கொடுக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் இதையெல்லாம் மனதில் வைத்து கிராம கட்டுப்பாட்டு நிபந்தனைகள் கொண்டுவந்தோம். ஊராட்சியின் முடிவுக்கு அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர், என்றார்.

Monday, March 15, 2010

பிளஸ் 2 கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு கிடைக்குமா? கேள்வித்தாள் மிகவும் கடினம் என மாணவர்கள் புகார்

சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. பத்து மதிப்பெண் கேள்விகள், வழக்கத்திற்கு மாறாக கேட்கப்பட்டதுடன், 10 மதிப்பெண் கேள்விகள் பல, ஆறு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ளன. இந்த குளறுபடிகள் காரணமாக, கணிதப் பாடத்தில், "சென்டம்' வாங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நடந்தன. விலங்கியல் தேர்வில் பல கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், கணிதத் தேர்வு, எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் கூறும் போது, "பொதுவாக, முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் பல, மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பெரும்பாலான கேள்விகள், இதுவரை கேட்கப்படாத புதிய கேள்விகளாக இருந்தன. வழக்கமாக கேட்கப்படும் முக்கிய கேள்விகள், இந்த ஆண்டு இடம் பெறவில்லை. இது போன்ற கேள்விகளை எதிர்பார்க்காததால், ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க அதிக நேரம் செலவிட நேர்ந்தது. குறிப்பாக, 10 மதிப்பெண் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. இந்த முறை 200க்கு 200 கிடைப்பது மிகவும் சிரமம்' என்றனர். சென்னை மட்டுமில்லாமல், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதனால், கணிதப் பாடத்தில் மதிப்பெண்கள் சரியும் என கூறப்படுகிறது.


சென்னையில் அனுபவம் வாய்ந்த கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கணிதத்தில், 11 பாடங்கள் உள்ளன. தேர்வில், 10 மதிப்பெண் கேள்விகள் மிகவும் முக்கியம். இந்த கேள்விகளைப் பொறுத்தவரை, வழக்கமாக முதல் ஐந்து பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும், அடுத்த ஆறு பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். இதற்கு தகுந்தாற்போல், மாணவர்கள் முதல் பாதி பகுதியையோ, அல்லது அடுத்த பகுதியையோ படிப்பர். இந்த முறை, முதல் பகுதியில் இருந்து 10 மதிப்பெண் கேள்வி கேட்கவில்லை. இரண்டு கேள்விகள், பிற்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள், "அப்செட்டானது' உண்மை. "இயற்கணிதம்' என்ற பாடத்தில் இருந்து, அதிக மதிப்பெண் கேள்வி ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கேட்கவில்லை. அதேபோல், 10 மதிப்பெண் கேள்விகள் சில, ஆறு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு நான்கு மதிப்பெண்கள் குறைவதுடன், ஆறு மதிப்பெண்களுக்கு ஏற்ற வகையில் விடை எழுத தெரியாமல், 10 மதிப்பெண்களுக்குரிய பதிலை விரிவாக எழுதியதால் நேரமும் வீணானது. "வகைக்கெழு சமன்பாடுகள்' என்ற பாடத்தில் இருந்து, 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். இந்த முறை, ஆறு மதிப்பெண் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


மொத்தத்தில், மாணவர்கள் எதிர்பார்த்தபடி கேள்விகள் அமையவில்லை. இதனால், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இந்தப் பாடத்தில், "சென்டம்' கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியே கிடைத்தாலும், "சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கணிதப் பாடத்தில் 33 பேரும், விலங்கியலில் ஏழு மாணவர்களும் முறைகேடுகள் காரணமாக, பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர். அதிகபட்சமாக, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 22 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.


சரியும் "சென்டம்': பிளஸ் 2 கணிதப் பாடத்தில், "சென்டம்' வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. கடந்த 2008 தேர்வு முடிவில், 11 ஆயிரத்து 605 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த எண்ணிக்கை, 2009ல் 5,112 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு கடினம் என்று மாணவர்கள் கூறியிருப்பதால், "சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட மேலும் குறையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

500 சதுர அடி குறைவான இடத்தில் சிறு தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டணம் மாற்றம்: அனைத்து கட்டிடங்களுக்கும் சொத்து வரி மதிப்பீடு

சென்னை, மார்ச். 15-
 
மாநாகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-
 
சொத்து வரி வசூலை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளை விட நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வசூல் ரூ. 375 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
2010-2011-ம் நிதியாண்டில் ரூ. 380 கோடியாக சொத்து வரி வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்டிடங்களையும் சொத்து வரி மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 500 சதுர அடிக்கு குறைவான இடங்களில் சிறுதொழில் செய்வோருக்கு லைசென்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். கூடுதலாக 10 இடங்களில் சொத்து வரி செலுத்தும் மையங்கள் அமைக்கப்படும்.
 
சொத்து வரியினை முறையாக செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், வரி செலுத்த தவறுவோருக்கு அபராதம் விதிக்கவும் சட்ட திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முழு அளவில் சொத்து வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு ரூ. 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

Friday, March 5, 2010

துர்நாற்றம் வீசும் வெளிநாட்டு கழிவுகள் : குப்பைத்தொட்டியாகும் தூத்துக்குடி



தூத்துக்குடி : கிரீஸ், பிரான்ஸ் நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 20 கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட , துர்நாற்றம் வீசக்கூடிய 470 மெட்ரிக் டன் நகராட்சி, மருத்துவ, பிளாஸ்டிக், பேப்பர் கழிவுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


சிவகாசி, ஸ்ரீபதி பேப்பர் போர்டு(பி)லிமிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு கிரீஸ் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 11 கன்டெய்னர்களில் 253.16 மெட்ரிக் டன் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் "பேப்பர் கழிவுகள்' இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அடிப்படையில் அந்த கன்டெய்னர்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அவற்றில் துர்நாற்றம் வீசும் பேப்பர், நகராட்சி, மருத்துவ கழிவுகள் இருந்தன. அதுகுறித்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பொருட்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். அதில், உடைந்த பொம்மைகள், கண்ணாடி பாட்டில்கள், பஞ்சு துணி கழிவுகள், காலியான வாசனை திரவிய பாட்டில்கள், பயன்படுத்திய மின்சாதன பாட்டரிகள், உள்ளாடைகள், அலுமினிய தாள்கள், கிழிந்த செருப்பு பாகங்கள், உடைந்த "சிடி'தகடுகள், கையுறைகள் போன்ற மருத்துவ கழிவுகள் இருந்தது தெரியவந்தது.


உடல் நலம், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அப்பொருட்களை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் நிறுவனம், அதில் பேப்பர் கழிவுகள் இருப்பதாக உண்மைக்கு புறம்பான சான்று அளித்த டில்லி தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பிரான்ஸ் குடியரசிலுள்ள ரியூனியன் நாட்டிலிருந்து சிவகாசி ஸ்ரீபதி பேப்பர் நிறுவனத்திற்கு மேலும் ஒன்பது கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட 217 மெட்ரிக் டன் மேற்கண்ட கழிவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


அதுகுறித்து, சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறும்போது,""சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 470 மெட்ரிக் டன் வெளிநாட்டு கழிவுகள், 20 கன்டெய்னர்களில் உள்ளன. அவை 15 நாட்களில் திருப்பியனுப்பப்படும். எனினும் அவற்றை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். பேப்பர் கழிவுகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை தீவிரமாக சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.


போலி பாட்டரிகள் பறிமுதல்: சென்னை, புரசைவாக்கம் வி.வி.ஆர்., இம்பெக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சீனாவிலிருந்து, மொபைல்போன் உதிரி பாகங்கள் ஒரு கண்டெய்னரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. ஒருமாத்திற்கு மேலாகியும் அதற்கு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், சுங்கத்துறையினர் அந்த கண்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அதில் "நோக்கியா' , "மோட்டரோலா', "சோனி எரிக்சன்' எல்.ஜி., போன்ற பிரபல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மொபைல்போன் பாட்டரிகள், "சோனி' பெயரில் காதொலி கருவி, மொவாடோ, குஜ்ஜி, டி அன்ட் ஜி பெயரில் போலி கைக்கடிகாரங்கள் இறந்தன. அப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். அதன்மதிப்பு 2 கோடி ரூபாய். அதுதொடர்பாக சென்னை நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொருட்கள் விரைவில் அழிக்கப்படவுள்ளதாக சுங்கத்துறை ஆணையர் ராஜன் தெரிவித்தார். சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சந்திரமோகன், உதவி ஆணையர் ராஜா உடனிருந்தனர். பிரபல நிறுவனங்களின் போலி பொருட்களுடன் கூடிய மற்றொரு கன்டெய்னரை, சீனாவிலிருந்து சென்னை நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


குப்பைத்தொட்டியாகும் தூத்துக்குடி: கடந்த சில மாதங்களுக்கு முன், தூத்துக்குடி துறைமுகத்தில், வெளிநாட்டிலிருந்து அபாயகரமான மருத்துவக்கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவை திருப்பியனுப்பப் பட்டன. தற்போது கிரீஸ், பிரான்சிலிருந்து கழிவுப்பொருட்கள் இறக்குதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தூத்துக்குடி வெளிநாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவருவதாக இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 300 பேர் தேர்வாகி சாதனை

சென்னை :  
மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.


மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்திய 2009ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், 13 ஆயிரத்து 837 பேர் தேர்வெழுதினர்; இதில், தமிழகத்திலிருந்து 637 பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப் பட்டன. நாடு முழுவதிலுமிருந்து, 2,281 பேரும், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோரும், நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெற் றுள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளில், பணிபுரிய தகுதியுடையவர்கள்.


சிவில் சர்வீஸ் துறையில் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 500 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது வெற்றிபெற்றவர் களுக்கான இறுதிகட்ட நேர்முகத் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்வு, வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையும், இரண்டாம் கட்டத் நேர்முகத் தேர்வு, ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. நேர்முகத் தேர்வுகள் அனைத் தும், டில்லியில் உள்ள மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், நேர்முகத் தேர்விற்கான நாள் மற்றும் நேரம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த விவரங்கள் அனைத்தும், தேர்வாணையத்தின் www.upsc.gov.in  என்ற இணையதளத் தில், மார்ச் 16ம் தேதி வெளியிடப் படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தேர் வாணையத்தின் இணையதளத்திலிருந்து அதற்கான படிவத்தை, "டவுண்லோடு' செய்யலாம். பூர்த்தி செய்த படிவத்தை விரைவுத் தபால் மூலம், "உதவிச் செயலர், எண் 432, அயோக் சச்சிவாலையா பில்டிங், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ஷாஜகான் சாலை, நியூ டில்லி' என்ற முகவரிக்கு, தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்விற்கான தகவல் கிடைக்கப் பெறாதவர்கள், தேர்வாணைய அலுவலகத்தை கடிதம் அல்லது 011- 2338 5271, 2338 1125 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஆர்வம், இளைஞர்கள் மத்தியில் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு, இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பேரும், 2009ல், இரண்டு லட் சத்து 75 ஆயிரம் பேரும் தேர்வெழுத

கடல் அட்டைகள் கடத்த முயற்சி

தூத்துக்குடி:தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.இதில் பதப்படுத்தப்பட்ட ஆயிரத்து 50 கடல் அட்டைகளையும், 100 கிலோ பவள பாறைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.இதில் தொடர்புடைய திரேஸ்புரத்தை சேர்ந்த அப்துல்காதர், பீர் ஆகியோரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை, பவளப்பாறைகளின் மதிப்பு ரூ.5 லட்சம்.

Monday, March 1, 2010

பெரியாறு அணையில் பராமரிப்பு: மேலும் ஒரு உரிமை பறிபோனது



கூடலூர் : பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறையினர் சார்பாக நடந்து வந்த பராமரிப்பு பணிகளை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். பெரியாறு அணையில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள ஆண்டுதோறும் குத்தகைத் தொகையாக, இரண்டு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை கேரள அரசுக்கு தமிழக அரசு செலுத்தி வருகிறது. இதனால், பெரியாறு அணை பராமரிப்பு தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 தினங்களாக பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஷட்டர் பகுதி, காலரி பகுதிகள் பெயின்ட் அடிக்கும் பணி முடிவடைந்து, பெரியாறு அணையில் வர்ணம் பூசும் பணி நடந்தது. அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார் திடீரென வந்து, தமிழகப்பொதுப்பணித்துறையினர் நடத்தி வர்ணம் பூசும் பணியைத் தடுத்து நிறுத்தினர். "இது வழக்கமான பணிதான்', என தமிழக பொதுப்பணித்துறையினர் கூறியும், "இது கேரள அரசின் உத்தரவு, வேலை எதுவும் செய்யக்கூடாது, கேரள அரசிடம் அனுமதி கடிதம் பெற்று வந்து பணிகளை செய்யுங்கள்', எனக்கூறி பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்து விட்டனர். இதனால், கேரள போலீசுக்கும், தமிழக பொதுப்பணித்துறையிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெரியாறு அணைப்பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தாலும், கேரள அரசின் கெடுபிடிகள் அரங்கேறிக் கொண்டு உள்ளது.


பெரியாறு அணைக்கு எவ்வித கட்டுபாடும் இன்றி, சென்றுவந்த தமிழகப் பொதுப்பணித்துறையினர், கடந்த சில ஆண்டுகளாக கேரள வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட்டு விட்டு செல்கின்றனர். இவ்வாறு உரிமைகளை இழந்து வரும் நிலையில், வழக்கமாக செய்து வரும் பராமரிப்பு பணிகளையும் செய்ய, கேரள போலீசார் தடுத்து வருவது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் கே.எம்.அப்பாஸ் கூறுகையில், ""இப்பிரச்னை குறித்து விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின், போராட்டத்தில் இறங்க உள்ளோம்,' என்றார்.

Sunday, February 21, 2010

ஊழலுக்கு வரம்பு...?

தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டிப்பதும், தொலைக்காட்சிப் பக்கமே திரும்பக்கூடாது என்று கண்டிப்பதுமே பெற்றோரின் வழக்கம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால்,தேர்வுக்காக மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள, தொலைக்காட்சிச் சானல்களும் உதவுகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆரவாரங்களுடன் ஆபாசத்தை அள்ளித் தெளித்து இளம் உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தும் சானல்களுக்கு மத்தியில், பொதிகை போன்ற சமுதாயப் பொறுப்பு மிக்க சானல்கள் சத்தமில்லாமல் செய்து வரும் இந்த மகத்தான பணி குறித்து அனைவரும் அறியவேண்டியது அவசியமல்லவா?காலை 5 மணிக்கு பொதிகையில் ஒளிபரப்பாகும் மாதிரி வினாத்தாள் நிகழ்ச்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு பாடப் பிரிவிலும், பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாளை விளக்குகின்றனர் ஆசிரியர்கள். வினாத்தாளின் வடிவம், மாதிரி வினாக்கள், விடையளிக்கும் முறை என அவர்கள் விளக்கும் விதத்தைப் பார்க்கும்போது நமக்கே மீண்டும் தேர்வு எழுதும் ஆசை எழுகிறது. அந்த அளவிற்கு எளிதாகவும், அனைவருக்கும் புரியும் விதத்திலும் விளக்குகின்றனர் (ஆசிரியர்கள் அல்லவா...) பொதிகையில் மட்டுமல்ல, திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களில் உள்ள உள்ளூர் சானல்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன என்பதை அறியும்போது மனதின்  ஓரத்தில், ஊடகங்களைப் பற்றி லேசாக ஒரு நம்பிக்கைக் கீற்றும் தோன்றுகிறது. லைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. எதிர்கால இயக்குனர்களாக விரும்புபவர்கள் எடுத்த குறும்படங்களைத் திரையிட்டு (சின்னத்திரையில்தான்), ஆரோக்கியமான விதத்தில் அவற்றை விமர்சிப்பது பாராட்டுக்குரியது. திறமைகள் இருந்தும், திரையுலகில் படவேண்டியவர்களின் பார்வைகளில் படாததால், வெளிச்சத்துக்கு வராமலே போகும் எத்தனையோ திறமைசாலிகளுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம். கலைஞர் தொலைக்காட்சி, "மானாட, மயிலாட' போன்ற அபத்தங்களுக்கு இடையே  "நாளைய இயக்குனர்' போன்ற நல்ல நிகழ்ச்சிகளையும் அளிப்பது சற்றே ஆறுதல் தருகின்றது.வெள்ளிக்கிழமை காலை மக்கள் தொலைக்காட்சியின் "தமிழ்ப்பண்ணை' நிகழ்ச்சியைப் பார்த்தபோது நமக்குச் சில சந்தேகங்கள் எழுந்தன. ஓர் உதாரணத்தைக் கையாண்டபோது தர்ணா என்ற, "பிற'சொல்லைப் புகுத்தியிருப்பதாகச் சொன்னார் பேராசிரியர் நன்னன். பிற சொல் என்பதை விட, அயற்சொல் என்பது பொருத்தமாக இருந்திருக்காதா? அதேபோல், அவர் தனது பேச்சினூடே, "ஒரு அமைச்சர்' என்று குறிப்பிட்டதும் சற்றே நெருடியது.  "ஆட்டோவில் அடிபட்டவன் சாவு' என்பது தவறு என்றும் "ஆட்டோவால் அடிபட்டவன் சாவு' என்பதே சரியென்றும் மற்றொரு கருத்தை முன்வைத்தார் நன்னனார். அதுவும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்கின்றதே, ஐயா! ஆட்டோவால் அடிபட்டவனா? அல்லது அடிக்கப்பட்டவனா?  "ஆட்டோவின் அடி(யில்) பட்டவன்' என்ற பொருளில் வரும்போது, "இல்' அல்லது "ஆல்' எங்கிருந்து வரமுடியும்? இது போன்ற எண்ணற்ற ஐயங்கள் எழுகின்றனவே! இவற்றுக்கான விளக்கத்தைக் கோபம் கொள்ளாது அளித்தால் நன்னனாருக்கு நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளோம்.தே நாளில், மக்கள் தொலைக்காட்சியின் மற்றொரு நிகழ்ச்சியான "கேள்விக்கு என்ன பதில்?' நிகழ்ச்சியில், "தேசிய உயர்கல்வி ஆணையம் மாநில உரிமைகளுக்கு எதிரானதா?' என்பது பற்றிய விவாதம் இடம்பெற்றது. தேர்தல் ஆணையத்தைப் போலவே இந்த ஆணையமும்  குடியரசுத் தலைவருக்கு மட்டுமே கட்டுப்படும் வகையில் தனி அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்பதால் மாநில உரிமைகள் பறிபோய்விடும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அப்படியானால் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தும் அரசியல்வாதிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கிறார்களா? நினைத்தாலே நடுங்குகிறதே?  (தொகுப்பாளரே! கல்வியைக்  கள்வி என்றீர்களானால் அதனைக் கேட்கும் தமிழ் ஆர்வலர்களின் செவிகள் சிவக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியாதா?) ல்வி வியாபாரமாகிவிட்டது என்றும், அரசியல்வாதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டு ஏதோ கூற வந்தார் பங்கேற்பாளர்களில் ஒருவர். உடனடியாக அவரது பேச்சில் குறுக்கிட்டு விவாதத்தை மிகவும் சாமர்த்தியமாக வேறு திசைக்குக் கொண்டு சென்றார் தொகுப்பாளர். அரசியல்வாதிகளின் கல்வி நிறுவனங்களைப் பற்றிப் பேச அவ்வளவு அச்சமா? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் (ஊழல்) நடப்பதாக ஒரு கருத்தை அனைவரும் பதிவு செய்தனர். பின்னர் தொலைபேசியில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் தனது கருத்தை அவ்வாறே பதிவு செய்தார். தில் வேடிக்கை என்னவென்றால், தற்போது வரம்பு மீறாமல் இருக்கும் ஊழல், மத்திய அரசிடம் அதிகாரம் சென்றால் கட்டுமீறிவிடுமாம். ஊழல் செய்வது குற்றம் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஆனால் ஊழலுக்கு வரம்பு இருக்கிறதென்பதோ, வரம்பு மீறா ஊழல் ஏற்புடையது என்பதோ இன்றுவரை நமக்குத் தெரியாமல் போய்விட்டது. ஊழலின் வரம்பு என்ன என்பதையும், அதற்கு எப்போது, யார் வரம்பு விதித்தார்கள் என்பதையும் யாராவது எடுத்துச் சொன்னால், அது நமது நடைமுறை அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவியாக இருக்கும். ஊழல் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும் அதை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்வதற்காகப் போராடுவதும்.... வாழ்க ஜனநாயகம்...!

Sunday, February 14, 2010

ஒரு 'பிரான்ஸ்' கிராமம்


Human Intrest detail news


கொசுக்களே இல்லாத நாடு எது என்றால் "பிரான்ஸ்' என்று சொல்லி விடலாம். ஊர் எது என்று கேட்டால் பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். ஆனால், எங்க ஊரில் கொசுவே இல்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் தளிஞ்சி கிராம மக்கள்.உடுமலை அருகேயிருக்கிறது தளிஞ்சி; முழுக்க முழுக்க மலை வாழ் மக்கள் வாழும் கிராமம். மொத்த மக்கள் தொகையே 400 மட்டும்தான்.

இங்கேதான் கொசுக்களுக்கு "நோ என்ட்ரி' போட்டிருக்கிறார்கள். கொசுக்கள் ஊருக்குள் ளே எட்டிப் பார்க்காததற்கு ஒரு சரித்திரக்கதையும் சொல்கிறார்கள்.ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியே நாகரீக வளர்ச்சியும், மக்கள் வசிப்பிடங்களும் இருந்தன. அப் போது இந்த கிராமத்தில் ஆங்கி லேயர்களுக்கென தனி அரண்மனை இருந்ததாம். விலங்குகளை வேட்டை யாடும் துரைகள், இங்கே ஓய்வு எடுப் பார்கள்.அந்த காலகட்டத்தில் மந்திர வித்தைகள் தெரிந்த மக்கள் பலரும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் கை தேர்ந்தவன் முத்து வீரன். அப்போது ஆங்கிலேயரின் அரண்மனையில் எக்கச்சக்க கொசுக்கள் இருந்ததாம்.

முத்து வீரனை அழைத்த ஆங்கிலேயர்கள், "நீ மந்திரத்தில் கெட்டிக்காரன் என்றால், ஏதாவது மந்திரம் செய்து கொசுக்களை ஒழி' என்று சவால் விட்டார்களாம்.முத்துவீரனும், "கவலைப்படாமல் தூங்குங்கள், இன்று இரவு கொசு இருக்காது' என கூறியுள்ளான். அதே போல், அன்று இரவு முழுவதும் ஒரு கொசு கூட அரண்மனைக்கும் வரவே இல் லை. காலையில் முத்து வீரனை அழைத்த ஆங்கிலேயர்கள் "சபாஷ், நீ கெட்டிக் காரன்தான்' என்று கூறி துப்பாக் கியால் சுட்டு கொன்று விட்டார்கள்.மீண்டும் மந்திரம் சொன்னால்தான் கொசுக்கள் வரும்; முத்துவீரனைக் கொன்று விட்டால் கொசுக்களே வராது என்று முடிவெடுத்தே கொன்றதாய் ஆங்கிலேயர் சொன்னதாய், செவி வழியில் கேட்ட கதையைச் சொல்கிறார் முதியவர் மாரி.

அடர்த்தியான காடுகளுக்கு நடுவே இருக்கிறது இந்த கிராமம். நிறைய மக்கள், ஆடு, மாடு, கோழிகள் இருந்தாலும் கொசுக்கள் இன்று வரை இல்லாததற்கு எது காரணமென்றே தெரியவில்லை.சுத்தமான காற்று, தூய்மையான குடிநீர், பசுமையான சூழல் என்று ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறார்கள் தளிஞ்சி மக்கள். கொசுக்களுக்குப் பிடிக்காத வாசமுள்ள மூலிகை இருப்பதாகவும், லார்வாக்களைச் சாப்பிடும் வனப் பூச்சிகளும், மீன்களும் இருப்பதாகவும் இயற்கைக் காரணமும் சொல்கிறார்கள்.சமவெளிக்கு சற்று தொலைவில் இருப்பதால், நகரத்தின் வாசனையும் இன்னும் அந்த கிராமத்தைத் தீண்டவில்லை. காரணம் எதுவாய் வேண்டுமானால் இருக்கட்டும், புகை போடாமல், ரசாயன கொசு ஒழிப்பான், மின் மட்டை எதுவுமே இல்லாமல், கொசுக்கடியும் இல்லாமல் நிம்மதியாய் நீங்கள் ஒரு தூக்கம் போட வேண்டுமென்றால் தளிஞ்சி கிராமத்துக்குப் போவதைத் தவிர வேறு வழியே இல்லீங்கோ.