Showing posts with label kadhai's. Show all posts
Showing posts with label kadhai's. Show all posts

Thursday, April 8, 2010

வரும்.. ஆனா வராது - ஒரு ஸ்கேன்னிங் ரிப்போர்ட்!



                                                    வர்ரும் ஆனா வர்ராது
  

மின்சாரம்
 (ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பீட்டாங்க..., கரண்ட புடுங்கறதுக்கு)


காவிரியில் தண்ணீர்
 (பாவம்யா  இந்த விவசாயிகள், ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..)


கருணாநிதி -  அரசியலில் இருந்து ஓய்வு
 (ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர்னு  சொல்லி, உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்களே...)

ஸ்டாலின் - முதல்வர் பதவி
 (எல்லாரும் பார்த்துக்கங்க...துணை முதல்வர் ஆயாச்சு, நானும் ரௌடிதான்.. ரௌடிதான்.. ரௌடிதான்)


அழகிரி - தி.மு.க தலைவர் பதவி
(மிசாவில எஸ்கேப் ஆகாம ஸ்டாலின் மாதிரி உள்ளே போயிருக்கணூமோ,Why blood....mm,, same blood..)

கலாநிதி - கலைஞர் டி.வி நெட்வொர்க்
 (இதுவும் நம்ம கைக்கு வந்திருந்தா, இந்தியாவிலே பெரிய கோடிஸ்வரன் ஆகியிருக்கலாமோ .. அடடா வட போச்சே..)

தயாநிதி - தொலை தொடர்புத்துறை இலாக்கா
(தாத்தா காலத்துக்கு அப்புறம் ஆ.ராசாவை, போ...ராசாவாக்கனும்.... பீ கேர்ஃபுல்..  நான் என்னைச் சொன்னேன்... )

கனிமொழி - அமைச்சர் பதவி
 (கவிஞர்ன்னு சொன்னதால  கலைஞர்ன்னு நெனச்சு பயந்து போய் சோனியா நம்மை கழட்டி விட்டுடாங்களோ.. உட்காந்து யோசிப்பாங்களோ )


ஜெயலலிதா - அடுத்த முதல்வர்
 (இப்படியே கொடநாட்டுல மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்கிறதில என்னா சொகம்டி சசி..   சசி இன்னும் என்ன முழிச்சுகிட்டு.. தூங்கு...)


விஜயகாந்த் - டெபாசிட்
 (தேர்தல்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை டெபாசிட்.. ஆங்.. ஆணியே புடுங்க வேண்டாம்....
மாப்பு.. மா..ப்பு சதிஷு,   பெண்ணாகரத்துல வச்சுட்டாங்கடா ஆப்பூ..)


ராமதாஸ் - புதுவையில்  / வட தமிழ்நாட்டில் ஆட்சி
 (நானும் தமிழ் நாட்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது...ஆமாம் சொல்லிட்டேன்... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.)

வைகோ - தமிழக அரசியலில் அங்கீகாரம்
 (ஸ்.ஸ் ய்ப்பா.. முடியலடா சாமி.. இப்பவே கண்ண கட்டுதே)

ராகுல் காந்தி - தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி
 (என்னாதிது.. சின்னப்புள்ளத்தனமாவுள்ள இருக்கு..)


திருமா - ஈழப்பிரச்னையில் நல்ல பெயர்
(எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும், நாங்கள்ளாம் உசிருக்கு ஒண்ணுன்னா கடல் மேலயே ஓடுவோமில்ல..)






தமிழக காங்கிரஸ் - ஆட்சியில் பங்கு
 (எப்படி கேட்டாலும் குடுக்க மாட்டிங்கிறாங்களே, எப்பா.. என்னா வில்லத்தனம்..)

ப.சிதம்பரம் - பிரதமர் பதவி
(ஒரு சிங்குமா.. நிருபர் கூட்டத்தில வச்சு... இவன் எதால அடிச்சாலும் தாங்கறான்டா.. ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டா..ங்கம்மா..)


சரத்குமார் -   ஒரே ஒரு தேர்தலில் டெபாசிட்

(டேய் சங்கத்தை கலைங்கடா..ஓடுங்கடா...ஓடுங்கடா)

கார்த்திக் - ????
(ஹே.. ஹே.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணல்லயே)


விஜய் - நடிப்பு
 (நாமும் எவ்வளவு நாள்தான் நடிக்கிற மாதிரியே நடிக்கிறது.... இன்னுமாடா இந்த ஒலகம் நம்மள  நம்பிக்கிட்டிருக்கு..)


அஜீத் - நடனம்
(தல தலன்னு சொல்லி சொல்லியே டான்ஸ்ல வெறும் தலய ஆட்ட வச்சுட்டான்களே  டொட்டடய்ங்....டேய் எட்றா வண்டிய , ஓட்றா  ரேஸுக்கு...முடியல…அவ்வ்வ்வ்வ்)

சாரு - ஆன்மிகம்

(நீங்களும் எவ்வளவுதான் திட்டுவீங்கன்னு பாக்குறேன்... சாமியார் விஷயத்துல ரொம்ப ஓவராத்தான் போய்ட்டமோ..அவ்வ்வ்வ்... .எவ்வளவு நாள்தான் வலிக்காதமாறியே நடிக்கிறது.... )

நித்யானந்தா - அரெஸ்ட் வாரண்ட்
(நல்லாத்தானே போய்கிட்டிருந்தது..  இவங்களே இப்படித்தான் ஆனந்தாஸ்.. இதெல்லாம் பார்த்தா நாம தொழில் பண்ண முடியுமா..)

தர்மானந்தா - பிளாக் மெயில் பணம்
 (யோக்யனுக்கு இருட்ல ரஞ்சிதா கூட என்ன வேல ...டேய் நான் பாக்குறதுக்குதான் சாமியார் மாதிரி இருப்பேன், ஆனா உள்ளுக்குள்ள டெர்ரரு...ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு  ரஸ்க் சாப்பிட்ற மாதிரி...)

பதிவர்கள் - பின்னூட்டம்
(ஏன்.. ஏன்.. இந்தக் கொலவெறி)

Thursday, March 25, 2010

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை

கதை சொல்லியின் கதையை இன்னும் ஆயிரம் முறை சொன்னாலும் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான நினைவுப் படிமங்கள் மேலெழுந்து வருகிறது.

மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்.அப்போதிலிருந்தே நாங்கள் தயாராகிவிடுவோம் கதைகேட்க.ஆமாம் எங்களுக்கான கதை

பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும்   பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக்   கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து  கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்.இருந்தாலும் வார்த்தைகளே சித்திரமாய்,காட்சியாய் விவரிக்கிற லாவகம் வழி வழியாய் ஒரே மாதிரி இருக்கும்.அதன்பிறகு இன்றுவரை சுண்டி இழுக்கும் கதை சொல்லிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது.நடு இரவில் கயா நகரத்து புகை வண்டி நிலையத்தில் இறங்கும்போது படுத்துக்கிடந்த நெல்லறுக்கும் ஆயிரக்கணக்கான கூலிக்கார பீகாரிகளைப் பார்த்தோம். அந்தக்குளிரிரவை கண்ணீர் உஷ்ணமாக்கியதை என் தோழன் மாதுவிடம் கூட மறைத்து விட்டேன்.காட்சியாகப் பதிவு செய்யமுடியாத அந்த அமானுஷ்ய இரவுச் சித்திரம் நினைவுகளின் மூலைக்குள் கிடந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறது. நடு இரவு வரை நீளும் கதைகளுக்கு காதைக் கொடுத்தபடி எங்களோடு வானத்திலிருக்கும் நட்சத்திரங்களும் முழித்துக்கிடக்கும். ஊங்கொட்டுகிற கடைசி ஆளாய் பலசமயம் நானிருப்பேன்.அந்தக் கதைகளை எல்லாம்  எப்படியும் ஊருக்குச்

சொல்லாமல் போவதில்லை.அதற்கான முயற்சியோடு அவற்றை பாதாளக்கரண்டி போட்டுத் துழாவிக்கொண்டே இருக்கிறேன்.தட்டுப்படுகிறவை தேடுதல் வேட்டையில் குறிவைக்காத வேறு வேறு கதைகளாகி எனது எழுத்தாகிறது.இன்னும் முழுக்கதையும் கிடைக்கவில்லை செல்லரித்த பழய்ய கருப்புவெள்ளை நிழற்படம்போல திட்டுத் திட்டாய் மட்டுமே கைக்குக் கிடைக்கிறது.

அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள் என்று தங்களை உடனுக்குடன் உருவம் மாற்றிக்கொள்ளும் கதைமாந்தர்களாய் பாட்டிமார்களின் வார்த்தையிலிருந்து கிளம்புவார்கள். நல்லதங்காள் கதை சொல்லும்போது எல்லாக் கதை சொல்லிகளும் நிச்சயமாய் அழுதுவிடுவார்கள். அதற்கான காரணம் கவசகுண்டலமாக அவர்களோடு ஒட்டிப்பிறந்த வறுமையும்,சகோதர பாசமும் என்பதை ஒரு கால் நூற்றாண்டு கழித்துத் தான் தெரிய நேர்ந்தது.கதை சொல்லிகள் அழுத பின்னாள் கதைகேட்பவர்கள் கதி என்னாகும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாக விட்டுவிடு நான் மட்டும் பிழைத்துக்கொள்கிறேன் அம்மா என்று மனசு கிடந்து கதறும்.


வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்

திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்.

காத்திருந்த ஊர்ச்சனம் 'கதையக்கெடுத்த குடிகாரப்பாவி' என்று திட்டவும் ரோசப்பட்டுப்போய் சம்மணம்போட்டு உட்கார்ந்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார். "அண்ணம் மாரே தம்பி மாரே அருமையுள்ள அக்கா மாரே மன்ன மணிக்குறவன் மாண்ட கதையச் சொல்லி  வாரன்  மக்களப்போல நினச்சு மண்ணிக்க வேணும் பிழ பொறுத்து" பத்துக்கட்டையில் பாடும் சுதிக்குத் துணையாக ராசாச்சித்தப்பா மாட்டுச்சவ்வு கட்டிய பானைத் தாளத்தைக்கொண்டு வந்துவிடுவார் அன்று உடனடி சிவராத்திரிதான்.விடிய விடிய நடக்கிற ஜுகல் பந்தியில் பார்வையாளரும் பாடகராவார்கள்.கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ என்று பாடிக்கொண்டே கல்லுடைக்கும் பகாரி மாமன் அழுதுவிடுவார். இத்தனைக்கும் சாகுமட்டும் அவர் கடல் பார்த்ததில்லை.அந்த இறுக்கம் தீர பாம்பாட்டிக்காளியப்பன் 'காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானே ஊமத்தொற' என்று பாடுவார்.ஏய் மணிக்குரவங் கதையில ஊமத்தொறைக்கு என்ன சோலி,குடிச்ச போதை கொறயலயா  என்று கஞ்சிரா அடிக்கும் மாடசாமிச்சித்தப்பா கேட்டதும். 'வாய்யா வாத்தியாரு', மூனு மணி நேரமா தொண்ட கிழியக்கத்துறனே வெல்லக்கட்டி,காபிந்தூளு இல்லாமலா போச்சி இந்த சூரங்குடியில" என்று கேட்கவும் ஆவிபறக்க சுக்குக்காப்பி கூட்டத்துக்குள் வரும்.


நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு

கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு. 

காப்பித்தண்ணி குடித்துவிட்டு பீடி பத்தவைத்து  "எலே சுந்தரப்பா கொனத்துலயு தங்கக்கொனம் அல்லிலே லேலோ ன்னு  படிக்கம்போது கூட்டத்தப் பாத்து பயந்து பயந்து படிக்கியே எதுக்கப்பா" இப்படிச் சொல்லவும் கூட்டம் கெக்கெக்கே என்று ஒரே சுதியில் சிரிக்கும்." ஏ மாமா ஓங்கதைய எங்காகிட்டக் கேக்கனும் நீ வந்து ஊர்க்கத பேசுறயா" என்று கூட்டத்துக் குள்ளிருந்து பதில் வரும்.இப்படிச் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிச் சிரித்து கதைகளுக்கு இடைவேளை விடுவார்கள்.