Showing posts with label Kavidhai. Show all posts
Showing posts with label Kavidhai. Show all posts

Monday, March 29, 2010

Software Engineer



திங்கள் காலை
எட்டுமணிக்கு தொடங்கும்
கணிப்பொறியுடனான
எனது யுத்தம்..


மதியம் உணவு
இடைவேளை
வருவதற்குள் Error, Bug
என்று எதிரிகள்
பலரை வீழ்த்தவேண்டியது
என் பணியாக இருக்கும்..


உணவை முடித்து விட்டு
திரும்பினால்,
சொல்லாமல் வந்துவிடுகிற
விருந்தாளியாய் PM- ன்
இமெயில் கண்சிமிட்டும்,
அடுத்த யுத்தத்திற்கு என்னை
தயாராக சொல்லி..


இடையில் அவ்வப்போது
காதலியின் துப்பட்டாவாக
மனதை வருடிப்போகும் சில
fwd இமெயில்கள்..


மாலை நான்கு மணிக்கு
Discussion முடிந்து
என் இடம் வரும்போது
மனம் ஏங்கும்
வெள்ளிக்கிழமைக்காக..
கோவில் செல்ல அல்ல,
வாரத்தின் கடைசி
வேலைநாள் என்பதால்..


உயிர் வலிக்க
‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware Engineer

Thursday, March 18, 2010

படிக்காத அம்மாவின் கையெழுத்து.

படிக்காத அம்மாவின் கையெழுத்து.


படிக்காத அம்மாவின் கையெழுத்து..
“கோலம்“

--- ----- ------
தன்னம்பிக்கை



--- -------- ---------

வறுமை.


நான் வறுமையில் வாழ்கிறேன்!
வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!!

Wednesday, March 10, 2010

காதல் ஓவியம்!


பேப்பரில் கிறுக்குவதென்றால் ஆனந்துக்கு அலாதிப் பிரியம். ஆனால், அவன் ஓவியம் வரைவதைப் பார்த்தால் பத்ரகாளியாகி விடுவாள் வனிதா. ஸ்கூல்ல "குட்' சொல்றாங்க, அம்மாவுக்கு ஏன் கோபம் வருது என்று ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் ஆனந்துக்குப் புரியாது.அவன் அண்ணன் அரவிந்த்தை மட்டும், வனிதா கொஞ்சித் தீர்க்கிறாள். காரணம், அவன் படிப்பில் சுட்டி. வீட்டிலே எப்போதுமே இறுக்கம் இருக்கிறது. "அப்பா எப்பம்மா வருவாரு' என்று இருவர் கேட்டாலும், அம்மா அமைதியாகி விடுகிறார். அவளின் மவுனத்துக்கு விடை தெரிய, சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.


***


ரவிக்குமார் பயங்கர சோம்பேறி; கடைசி பெஞ்ச் மாணவன். அப்பா, வாத்தியார் இரண்டு பேரும் மாறி மாறி அடித்தாலும், திருந்தாத ஜென்மம். பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர, எல்லாப்பாடத்திலும் பெயில். இனிமேல் படிப்பு வராது என்று ஒர்க்ஷாப்பில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அப்பா.அங்கேயும் வாரத்துக்கு ஒரு முறைதான் வேலைக்குப் போனான். அந்த ஒர்க்ஷாப் பரபரப்போடு கொஞ்சமும் ஒட்டாத ரவிக்குமாரை, ஒர்க்ஷாப் ஓனர் அன்வரும் அடித்துப் பார்த்து விட்டார். எந்த பிரயோஜனமும் இல்லை. ராத்திரி ஆனதும், சரக்கு அடித்து விட்டு அட்வைஸ் பண்ணுவார் அன்வர்.திருந்துவதாய்த் தெரியவில்லை. ஒரு நாள் அன்வரே கடுப்பாகி, விரட்டி விட்டார். ரெண்டு நாளாக ஆளையே காணோம் என்று தேடினார்கள். மூன்றாம் நாள்தான், பக்கத்திலேயே ஒரு இடத்தில் கொலைப்பட்டினியாய் அவன் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.மனசு கேட்காத அன்வர், வயிறு நிறைய அவனுக்கு சாப்பாடு போட்டு, படத்துக்குப் போய் வர காசும் கொடுத்தார். படம் பார்த்து விட்டு, அவன் திரும்ப வந்தபோது, அன்வர் முழுசாக மட்டையாகித் தூங்கி விட்டார். கதவைத் தட்டித் தட்டி கை ஓய்ந்து விட்டது.


வெளியே உலகம் தூங்கிக் கொண்டிருக்க, முழு நிலவு விழித்துக் கிடந்தது. தெருக்கோடியில் ஒரு சோடியம் விளக்கு...ஜில்லென்ற காற்று உடலை வருடியது. தன்னையறியாது குஷியான ரவிக்குமார் அங்கிருந்த கறிக்கட்டையை எடுத்து சுவரில் கிறுக்க துவங்கினான்.ஒர்க்ஷாப்பில் பைக்குகளை ஓனர் பழுது பார்ப்பது போன்று அழகாக படம் வரைந்து விட்டு, அங்கேயே தூங்கி விட்டான். காலையில் பொழுதோடு சேர்த்து, ரவிக்குமாரின் வாழ்க்கையும் விடிந்தது.வெளியே வந்து பார்த்த அன்வர் அசந்து விட்டார். அச்சு அசலாய் அவரை வரைந்திருந்தான் ரவி. அன்று வரை அவனை யாருமே புகழ்ந்து பேசியது இல்லை.""டேய்...சூப்பரா படம் வரைந்திருக்கே... உனக்கு படம் வரைய தெரியுமா...' என்று கேட்டார் அன்வர். வாய் திறந்து பேசினான் ரவிக்குமார்.""சின்ன வயசுல இருந்தே படம் வரையுறதுன்னா எனக்கு உசிருங்க, எங்க அப்பாதான், படம் வரையக்கூடாதுன்னு அடிச்சு, விரட்டி விட்டுட்டாரு, அதுல இருந்து படம் வரையுறதை நிறுத்திட்டேன்,'' என்றான்.


""உனக்கு படிப்பும் வரலை, வேலை கத்துக்கிற இன்ட்ரஸ்ட்டும் இல்லை, எனக்குத் தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட் கிட்ட சேத்து விடுறேன்,''என்று சொன்ன அன்வர், அன்றே அவனை அங்குள்ள ஓர் ஆர்ட்டிஸ்ட்டிடம் வேலைக்குச் சேர்த்து விட்டான். வாழ்க்கையில் முதன் முதலாய் உற்சாகம் ஆனான் ரவிக்குமார். அது நீடிக்கவில்லை.பெயிண்ட் கலக்குவது, பிரஷ் கிளீன் பண்ணுவது என காலம் ஓடியது. ஒரு முறை ஓவியருக்கு உடம்பு சரியில்லாதபோது, படம் வரைய அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது.முதன் முதலாகக் கிடைத்த வாய்ப்பில், அவனது கற்பனைத்திறனையும் சேர்த்து அழகிய ஓவியம் வடிக்க, பாராட்டுக்குப் பதிலாக "சொன்னதை செய்யாம இஷ்டத்துக்கு வரையக்கூடாது' என்று அட்வைஸ் தான் கிடைத்தது.ஒருநாள், ஆர்ட்டிஸ்ட் வெளியூரில் இருந்தார். அவர் வழக்கமாக ஓவியம் வரையும் கல்லூரியிலிருந்து "கருத்தரங்குக்கு அவசரமா ஒரு படம் வரையணும், உடனே வரணும்' என்று அழைப்பு வந்தது.


ரவிக்குமாரைப் போகச் சொன்னார் ஆர்ட்டிஸ்ட். அவர்கள் சில வார்த்தைகளில் சொன்னதை வைத்து அமர்க்களமாய் ஓர் ஓவியத்தை வரைந்து முடிக்க, கல்லூரி நிர்வாகம் அசந்து போனது. பாராட்டு, பரிசுடன் அங்கேயே வேலையும் கிடைத்தது.ஐந்து ஆண்டுகள் கல்லூரிக்காக ஏராளமான படங்களை வரைந்து கொடுத்ததால் ரவிக்குமாரின் திறமை எல்லா இடத்துக்கும் பரவியது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் நிபந்தனைகள், ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. வேலையை உதறி, வெளியேறினான்.அதற்கும் முன்னாலேயே, அவனுக்கும் வனிதாவுக்கும் காதல் ஆரம்பமாகி விட்டது. அவன் வேலை பார்த்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாள் வனிதா. ஓவியத்தால் ஏற்பட்ட ஈர்ப்பு, ஓவியனை காதலிக்க வைத்தது. கல்லூரி வேலையை விட்டாலும், காதலை விடவில்லை ரவி.வனிதாவின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.


""வேலை வெட்டிக்குப் போகாம, படம் வரையுறவனை கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணப்போற,''வனிதாவின் அப்பா கொந்தளித்தார். காதல் கண்களை மறைத்தது. தோழிகள், நண்பர்களின் ஆதரவில் பதிவுத் திருமணம் நடந்தது. ஒரே ஆண்டிற்குள் இரட்டைக் குழந்தைக்குத் தாயானாள் வனிதா. தனியாருக்கு வேலை செய்து, கொஞ்சம் சம்பாதித்தான் ரவி.ஆனால், குடும்பம் நடத்த வருமானம் போதவில்லை. வேறு வேலைக்குப் போக அவன் தயாராயில்லை. வழக்கம்போல், இரவும், பகலுமாய் ஓவியங்களை வரைந்து கொண்டேயிருந்தான் ரவி. இரண்டு ஆண் குழந்தைளையும் வளர்க்க வனிதா படாதபாடு பட்டாள்.ஓவியத்தால் கவரப்பட்ட வனிதா, அதே ஓவியங்களை வெறுத்தாள். பெற்றோர் வீட்டிலும் ஆதரவு கிடைக்காததால் சாப்பாட்டிற்கே கஷ்டமானது. மகன்களின் சிரிப்பு மட்டுமே ஆறுதல் தந்தது. நண்பர்களிடம் பேசி, ரவிக்குமாருக்கு வேறு வேலைக்கு ஏற்பாடு செய்தாள்.


வேலை முடிந்து வந்து, ஓவியம் வரைந்து கொள்ளுங்கள் என்றாள். எனக்கு ஓவியத்தைத் தவிர, ஒரு வேலையும் தெரியாது என்று ஒற்றை வார்த்தையில் அவன் மவுனமானான். குழந்தைகளுக்கு இரண்டு வயதானதும், அவளே வேலைக்குப் போக முடிவெடுத்தாள். அதற்கும் அவன் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டுமே அவன் வீட்டுக்கு வருவதால், குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டாள்.  கடைசியாய் வெறுத்துப்போய், விவாகரத்து கோரினாள் வனிதா.காதல் மனைவியே உதறி தள்ளியதால் நொந்து போன ரவிக்குமார், ஒரு கையில் சிகரெட்டும், மறு கையில் தூரிகையுமாக உருக்குலைந்தான். குடும்ப நல கோர்ட்டில், "ஓவியம் வரையும் போது குடும்பம் பற்றி சிந்திக்க முடியாது, நான் இப்படித்தான். விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன்' என்றான்.


வனிதா கேட்டபடி விவாகரத்தும் கிடைத்தது, ஆனால் அவளின் சந்தோஷம் தொலைந்தது. விவாகரத்து வழங்கிய கோர்ட் வாசலில் வைத்து, "ஓவியத்தை விட்டு விட்டு என்னோடு வந்து விடு, நான் வேலைக்குப் போய் உங்களைக் காப்பாத்துறேன்' என்று காலில் விழுந்து கதறினாள் வனிதா.அவனோ, "என் மனசு, நீ சொன்னதை எப்போ ஏத்துக்குதோ அப்போ நான் உன்னைத் தேடி வர்றேன். நம்ம புள்ளங்களை என்னைய மாதிரி வளர விடாதே,' என்ற வேண்டுகோளுடன் விடை பெற்றான்.....ஆனந்த் ஓவியம் வரைவதை அவள் தடுப்பதும், ரவியின் வார்த்தைகளை நினைவில் வைத்துதான். அவளுக்குள் காதலை ஏற்படுத்திய ஓவியமே, இப்போது வெறுப்பின் சின்னமாய் மாறி விட்டது. தன் காதல் அவனை மீண்டும் அழைத்து வரும் என்ற நம்பிக்கையோடு, இன்றும் காத்திருக்கிறாள் வனிதா.

Friday, February 26, 2010

மனதார மனம்கொடு.

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,

வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,

வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?

முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?

கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.

கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....

Monday, February 22, 2010

Kathal kavithai

பெருங்கோடையடித்து
மரங்களெல்லாம் செத்துதிர்ந்து
ஒற்றையடிப்பாதைகளும்
தடங்களேதுமின்றி மறைந்து
வெடித்திட்ட நிலத்திலனைப்போல
வாழ்விலெக் கோடை அடித்தாலும்
சித்தம் பிசகி நான்
எந்தப் பிணியில் காய்ந்தாலும்
உன்னை மட்டுமே
காதலித்துக் கொண்டிருப்பேன்
உலகிலேயே அதிகமாக
ஓருயிரின் மேல் காதலை
கொண்டிருக்கும் நபரினை
மின்னலுஷ்ணத் தீயில் வாட்டி
வதைகள் செய்யும்
தண்டனை கொடுப்போமென
சட்டங்களியற்றிடுவரெனில்
எனக்கே முதல்தண்டனையென
எழுதப்பட்டுமிருக்குமதில்
அப்பொழுதுமுன்னையே
காதலித்துக் கொண்டேயிறப்பேன்

Kathal kavithai

நாளின் இறுதி வெளிச்சங்களை
கீற்றுகளாக வழியவிட்ட
சூரியனுக்கு உன்
நீள்கூந்தலை
அலைய விட்டுக் காட்டுகிறாய்
சிவப்பு, செம்மஞ்சளென
எழில் வண்ணம் காட்டி
காற்றிலசையும்
ஒவ்வொரு முடியையும் கண்டு
விட்டுப் போகும் மனமற்று
தேங்கி நின்ற சூரியனை
பொறாமையில் சிவந்து
கடலுக்குள் தள்ளிவிடுகிறது
அந்திவானம்

உன்னிடம் காட்டவென
அலைகள் தள்ளிவிட்டுப்போன
ஏதோவொன்றைக் குனிந்துபார்த்து
கூடியிருந்த குழந்தைகளை அழைத்து
குதூகலமாகக் காட்டுகிறாய்
நானும் குழந்தையென அடம்பிடித்து
உன்னிடமே ஓடிவருகிறது என் மனது
தூக்கி வைத்துக்கொண்டால்தான் என்ன?

கவிதை

உன்னோடு காடொன்றுக்குள்
வழிதவறி அலைந்த கனவை
இப்பொழுதும் நான் கண்டேன்
அடிக்காலில் கூச்சங்கள் காட்டியபடி
நம்மை ஏதேதோ பூச்சிகள் விரட்டித் துரத்தின
நடந்துவந்த சிங்கமொன்று நம்மை
சீட்டு விளையாட வாவென அழைத்தது
உயிர் தேயும் அச்சம் கலைந்த நாம்
வனராசாவின் தாடி பின்னி
சீட்டுகளால் அலங்கரித்து
செல்லமாக விளையாடினோம்
சட்டெனக் காடு
கடலாகிற்று

நாம் மூழ்கிடாவண்ணம்
ஒட்டகச் சிவிங்கிகளிரண்டு நம்மை
தம் நீள் கழுத்திலேற்றிக் கொண்டன
அழுத சிங்கத்தைத் தேற்றி
உலக எல்லை வரை கடலுக்குள்ளால்
சிவிங்கிகளின் கழுத்துக்களைப் பற்றியபடி
நாம் போகத் துவங்கினோம்
கடல் கன்னி நீயென
ஏதோ ஒரு நீரினம் உன்னைச் சொன்னது
என்னைக் குறித்து
என்ன சொன்னதென நினைவில்லை
நாளைய கனவில்
கேட்டுச் சொல்கிறேன்
இப்பொழுது நீ உறங்கு

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

**************


காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

*************



நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

**********************

படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

**************


அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

******************************




ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

******************

டே(ய்) கவிதை

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

********

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

*********


காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

******************************




இஸிகோல்ட்டு கவிதை


கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!


*****************************



? கவிதை

உன் தந்தை பிநவாதியா?
நீ அவர் எழுதிய புனைவா?
உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?

************************


'இப்ப இன்னாங்கற நீ' கவிதைகள்

நீ வரும்போதெல்லம்
உன்னைப் பார்த்து
ஏன் சிரிக்கிறேன் என்கிறாய்
'இடுக்கண் வருங்கால் நகுக'
மறந்துவிட்டாயா கண்ணே!

**

நீ வாங்கிய தங்க வளையல்
நன்றாக இருக்கிறதா
என்கிறாய்
என் கிரெடிட் கார்டில் இப்படி
வரைமுறையின்றி தீட்டுவது
நன்றாகவா இருக்கிறது?

**

பாண்டியன் எக்ஸ்பிரஸில்
டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறாய்
போன மாதமே
ரிசர்வேஷன் செய்யாதது
உன் தவறென்று
எப்படி சொல்வேன் பெண்ணே?

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்

உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது

சந்தானம்

Saturday, February 20, 2010

Kathal kavithai

காதல் கவிதைகள்!!!

பரீட்சை
என்னப் பேசுவதென்று பல முறை
சொல்லிப் பார்த்து விட்டுதானே
வந்தேன், உன்னைப் பார்த்ததும்
அனைத்துமே மறந்து போனது,
காதலெனும் தேர்வில்
வினாவாய் நீ, விடை தேடும்
மாணவனாய் நான் !!!

இயற்பெயர்
இயற்பெயர்கள் அதிகமாய் மாறிப்
போவது காதலில் தானாம் ஒரு
கணக்கெடுப்பு சொல்கிறது,
அம்முவாய் நீ, தங்கமாய் நான்!
நான்கெழுத்து கவிதை
மூன்றெழுத்து கவிதை சொல்
பார்க்கலாம் என்றேன்,
"சீ போடா" என்றாய்
பரவாயில்லையே உனக்கும் கவிதை
வருகிறதே என்றேன்,
மெல்ல ரௌத்ரம் பழகினாய்
சட்டென்று இதழ் பிரதேசத்தை
நான்கெழுத்து கவிதை பாடி நாடு
கடத்தினாய், முடிந்து விட்டது
இனி கவிதையும் இல்லை, கட்டுரையும் இல்லை!!!
வேடங்கள்
கடனட்டை வினியோகஸ்தனாய்
வீட்டு எரிபொருள் விற்பனையாளனாய்
எனக்கு தான் எத்தனை வேடங்கள்,
உன் வீட்டாரை ஏமாற்றவும்
உன்னை சமாதானப்படுத்தவும்!

கடவுளின் கோபம்
கடவுள் என் மீது ஏகக் கோபத்தில்
இருக்கிறார்,
எப்பொழுது என் கோவிலுக்கு வந்தாலும்
என்னை நீ கவனிப்பதே இல்லை என்று,
அதே கோவிலுக்குதான் என் தேவதையும்
வருகிறாள்,
தேவதையா கடவுளா போட்டியில்
எப்போதுமே என் தேவதை தான் ஜெயிக்கிறாள்!