Showing posts with label INFORMATION TECHNOLOGY. Show all posts
Showing posts with label INFORMATION TECHNOLOGY. Show all posts
Tuesday, April 27, 2010
Saturday, April 24, 2010
HOW ACTIVATE UNBOOTED SYSTEMS?
எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.
ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.
இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.
கோப்பு இங்கே
http://www.4shared.com/file/63478381/f7e02341/PortableWinXPUSB.html
WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்.
Thursday, April 22, 2010
அதிகம் தெரியாத ஆண்டி(ANTI-VIRUSES) வைரஸ்கள்
வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.
ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே.
ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பிட் டிபன்டர் (BitDefender)
பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
இந்த இலவச புரோகிராமினைhttp://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/products/index.php என்ற தளத்திற்குச் செல்லவும்.
3. கிளாம் ஏவி (Clam AV):
இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
4.அவாஸ்ட் (Avast): :
மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:http://www.avast.com/
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :
இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது.
மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb. com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது.
டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.
8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):
இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன.
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)
பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும்.
பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://www.microsoft.com/security_essentials/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.
10. ஸோன் அலார்ம் (Zone Alarm):
மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது.
அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm. com/ என்ற தளம் செல்லவும்.
Monday, April 19, 2010
வருங்காலத் தொழில்நுட்பம் : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!
வருங்காலத் தொழில்நுட்பம் - 39 : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!
ஆன்லைனில் வீடியோ பார்க்கத் தேவையான Flash வேலை செய்வது இல்லை என்ற குறையை விரைவில் வெளிவரப்போகும் HTML 5 சமன் செய்துவிடும் என்பதால், ஐ-பேடை அச்சம் இல்லாமல் வாங்குங்கள் என்கிறார்கள் ஆப்பிள் மோகிகள்.
ஒரு வலைப்பதிவர் ஐ-பேடின் உள் இயங்கும் மென்பொருளைத் துண்டுதுண்டாகப் பிரித்து அலசி, கேமராவுக்கான பகுதியைக் கண்டுபிடித்து பதிவு ஒன்றை வெளியிட, அடுத்த ஜெனரேஷன் சாதனத்தில் கேமரா கண்டிப்பாக இருக்கும் என்று ஊகங்கள், அதையட்டிய கொண்டாட்டங்கள். பிரபலமான Wall Street Journal நாளிதழில் ஐ.டி. தொழில்நுட்பங்களை அலசி எழுதும் வால்டர் மோஸ்பேர்க், 'ஐ-பேட் லேப்-டாப்புக்குச் சவால்விடுகிறது' என்று பாசிட்டிவ் ஆக எழுதியிருக்கும் பதிவு, பெரிய நிறுவனங்களும் ஐ-பேடைப் பயன்படுத்தத் தூண்டும். (http://ptech.allthingsd.com/20100331/apple-ipad-review/).
இணையத்தின் பிரபலத்தால் நாள்தோறும் நசிந்து வரும் பத்திரிகை நிறுவனங்கள், ஐ-பேடை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. கிட்டத்தட்ட விகடன் பிரின்ட் எடிஷன் அளவில் இருக்கும் ஐ-பேட், பத்திரிகைகளை அப்படியே பேப்பர் வடிவில் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒன்று மட்டும் தெளிவு, ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல்; படுபாடுபட்டுத் திணறி வரும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கே ஐ-பேட் மிகப் பெரிய வரமாக இருக்கப்போகிறது!
கிடுகிடுவென வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியும் இணைய நுகர்வும் பிரபல இன்டர்நெட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் கடை விரிக்க அதிக ஆர்வத்தை அளிக்கின்றன. ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு நன்கு அறிமுகமான Farmville விவசாய விளையாட்டுத் தயாரிப்பு நிறுவனமான Zynga இந்தியாவில் அலுவலகம் ஒன்றைச் சென்ற மாதம் தொடங்கி இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களது கிளையை இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்தியாவை மலிவான விலையில் ஆள் பிடிக்கும் அவுட்சோர்ஸிங் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு இருந்த நிலை தாண்டி, இந்தியாவைச் சந்தையாகப் பார்ப்பது ஆரோக்கியமான உலகமயமாதலே. திரைகடல் ஓடி திரவியம் தேடி வரும் இந்த நிறுவனங்களால், இந்தியாவின் ஐ.டி. இண்டஸ்ட்ரிக்கு வேலைவாய்ப்புகள் உட்பட பல நன்மைகள். ஏதாவது தீமை உண்டா என்பதைப் பார்க்க சற்றே பொறுத்து இருக்கலாம்.
இது அனைத்தையும்விட மிக முக்கியச் செய்தி: அமெரிக்க அரசின் பரிசீலனைக்கு வந்திருக்கும் தொழில் முனைவோர் விசா. அமெரிக்காவின் வேலை விசாவான பி1, வேலை கொடுப்பவர்களுக்கே சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அந்த விசாவில் இருக்கும்போது தொழில் முனைவது சாத்தியம் இல்லை என்பதால், சிறந்த ஐடியாக்களும் கடின உழைப்பும் செய்யத் தயாராக உள்ளவர்களும் பல வருடங்கள் காத்திருந்து, க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தரக் குடி உரிமை பெற்று, அதற்குப் பின்னரே தொழில் முனைய முடியும் என்றிருந்த நிலை இந்த விசாவினால் மாறும். இந்த விசா வாங்குவதற்குக் கீழ்க்கண்டவை தேவை:
சிறந்த பிசினஸ் ஐடியா. இது இன்டர்நெட் துறையில்தான் இருக்க வேண்டும் என்பது தேவை இல்லை. (ஆனால், இணையத்தில்தான் அதிகமான ஐடியாக்கள் உருவாக்கப்படும் என்பதைச்சொல்லத் தேவை இல்லை).
இந்த ஐடியாவை அங்கீகரித்து தொழில் முதலீட்டாளர் எவராவது 2,50,000 டாலர்களைக் கொடுக்க வேண்டும்.
இது கிடைத்தவுடன் நீங்கள் அமெரிக்காவுக்கு வந்து உங்களது நிறுவனத்தைத் தொடங்கி விடலாம்.
தொடங்கிய 2 வருடங்களுக்குள் 5 பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். அதோடு, ஒரு மில்லியன் டாலருக்கு தொழில் முதலீடோ அல்லது உங்கள் நிறுவனம் வருவாயோ (லாபம் அல்ல) உண்டாக்கியிருக்க வேண்டும்.
இதைச் செய்ய முடிந்தால், உங்களுக்கு உடனடியாக க்ரீன் கார்டு வழங்கப்படும்.
திறமைசாலிகளை நாட்டுக்குள் கொண்டுவருவது வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்பதால், இந்த மாதம் அமெரிக்க செனட்டில் விவாதிக் கப்படும் இந்த பில் சட்டமாகிவிடும் என்றே தோன்றுகிறது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் ஏப்ரல் 1-ம் தேதி அன்று இணைய உலகத்தை ஒரு க்விக் ரவுண்ட் அடித்தால், முட்டாள்கள் தினத்தைப் பயன்படுத்தி, பல கோணங்கித்தனங்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பது தெரியவருகிறது.
கூகுள் தங்களது ஊருக்கு இலவச இன்டர்நெட் இணைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையோடு அமெரிக்க ஒரேகான் மாநில ஊரான டொபெகா தனது பேரை கூகுள் என்று மாற்றிக்கொண்டதுபற்றி சில வாரங்களுக்கு முன் இந்தத் தொடரில் எழுதினேன். இதற்கு எட்டாம் போட்டியாகத் கூகுள் தங்களது நிறுவனத்தின் பெயரை டொபெகா என மாற்றிக்கொண்டுவிட்டதாக அறிவித்திருப்பது செம லொள்ளு.
பை தி வே, கூகுளுக்கு வருடா வருடம் ஏப்ரல் 1 தினத்தில் இப்படி ஏதாவது செய்வது கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறது. இந்த உரலியில் சென்ற வருடங்களின் அட்டகாசங்கள்:
http://www.businessinsider.com/a-history-of-googles-april-fools-pranks-2010-3#2000-mentalplex-google-search-for-your-brainwaves-1
பிரபல டெக்னாலஜி வலைதளமான TechCrunch பதிவு ஒன்றில் எப்படி ஒரு லேப்-டாப்பை ஐ-பேட் போல எளிதாக மாற்ற முடியும் என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறது. சீரியஸாகத் தோன்றும் இந்தப் பதிவின் வீடியோவைப் பாதிக்கும் மேல் பார்த்த பின்னரே, மைக்கேல் ஆரிங்க்டன் ஒரு வாளைக்கொண்டு லேப்டாப்பைக் கரகரவென அறுக்கும்போதுதான், நம் தலையில் சுற்றப்படும் பூவின் வாசம் தெரிகிறது
Friday, April 16, 2010
உங்கள் கணினி பணிநிறுத்தம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா ?
உங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேரங்களில் வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதன் பின்புலத்தில் பல செயல்கள் (Background processes) நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் கணினியின் இயக்கம் நிற்கும்.
ஒரு சில செயல்கள் தானாக நிற்பதில்லை. பணி நிறுத்தம் (Shut down) செய்யும்போது இந்த செயல்களை உடனடியாக நிறுத்துவதன் மூலம், கணினியின் இயக்கத்தை வேகமாக நிறுத்தலாம்.
உடனடியாக எப்படி நிறுத்துவதென்று பார்ப்போம்.
Start ---> Run சென்று regedit என தட்டச்சுங்கள்.
பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில்,
HKEY_CURRENT USER\Control Panel\Desktop
என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இருசொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.
OK கொடுத்து வெளியேறுங்கள்.
இனி, உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுக்காது.
Tuesday, April 13, 2010
இந்தியாவிற்கு இலவசமாக பேச.....................
இந்தப்
பதிவில் இலவசமாக இந்தியாவிற்கு தொலைபேச ஒரு வழி கற்றுத் தருகிறேன்.
பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு இது. அதனால,
தெரிஞ்சவங்க 'அதான் எனக்கு தெரியுமே' என்கிறா 'முத்துலட்சுமி' டைப்
வஜனத்தை பேசாமல் ஜகா வாங்கிக் கொள்ளவும். VoIPன்னா
என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியலைன்னாலும் பரவாயில்லை.
இப்போ இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச தேவையான பொருட்கள்.
* 2-port or 4-port Modem builtin ADSL Adapter (DLINK is the cheapest & good quality one)
* LINKSYS PAP2T Voice Adapter (VoIP Adapter)
* Normal telephone * Hispeed internet connection in India
(DLink
Router சுமார் 40 US$. LinkSys VOIP Adapter சுமார் 60 US$.)
சரி..எல்லாத்தையும் ரெடி பண்ணிக்கிட்டீங்களா? நூற்று இருபத்தைந்து
ரூபாயிலிருந்து இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் இணைப்புகள் கிடைக்கின்றன.
அதுவே போதும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க தொலைபேச்சு நன்றாக இருக்கும்.
ஆரம்பத்தில் செட்-அப் செய்வதற்கு மட்டுமே கம்ப்யூட்டர் தேவை, அதன் பிறகு இந்தியாவில் உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் தேவையில்லை.
இப்போது
www.tpad.com இணைய தளத்திற்கு சென்று புதிதாக கணக்கு துவங்கிக்
கொள்ளுங்கள். குறைந்த பட்சம் 1 டாலருக்காவது அங்கே உங்கள் கணக்கில் காசு
இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளவும். (பயப்பட வேண்டாம்... நம்பத் தகுந்த
இணைய தளம் தான். கிரெடிட் கார்டு, PAYPAL கணக்குகள் மூலம் தைரியமாக
வாங்கலாம்)
உங்களுக்கு
ஆறு இலக்க கணக்கு எண் இங்கே வழங்கப்படும். இப்போது இணைய தள தொடர்பில் உள்ள
ரவுட்டரி(Dlink)ன் பின் புறம் உள்ள போர்ட்டிலிருந்து LinkSys VOIP
Adapterக்கு தொடர்பு ஏற்படுத்தவும். அப்படியே ஒரு சாதாரண தொலைபேசியை
LinkSys உடன் இணைக்கவும். இப்போது LinkSysல் இரண்டு விளக்குகள் பச்சையில்
ஒளிரும். தொலைபேசியை எடுத்து ****110# என்று அழுத்தவும். 192.168.*.*
என்று ஒரு எண் சொல்லும். அதை குறித்துக் கொள்ளவும். இப்போது Internet
Explorer (அல்லது வேறு எதாவது ஒன்றை) திறந்து அங்கே http://192.168.*.*
என்று டைப் செய்யவும் (* என்ற இடத்தில் தொலைபேசியில் கேட்ட எண்ணை நிரப்ப
வேண்டும்)
இப்போது LinkSys Admin menu திறக்கும். வலது புறம் Admin Login என்று இருக்கும். அதை க்ளிக்கவும்.
ளினெ 1 என்பதை க்ளிக்கவும். கீழ் கண்ட செட்டிங்கை அதில் டைப்பவும்.
Line Enable : Yes
SIP Port : 5060
Proxy : sip.tpad.com
Register : Yes
Register Expires : 3060
Display Name : your name
User ID : your 6 digits tpad account number
password : your tpad password
Use Auth ID : No
Auth ID : your 6 digits tpad account number
மத்தவற்றை அப்படியே விட்டு விட்டு ஆகக் கீழே வரவும்.
Preferred Codec : G711u
Now
SAVE SETTINGS
ஓரிரு
விநாடிகளில் LinkSys-ல் மூன்றாவது விளக்கும் எரியும். இப்போது LinkSys-ல்
இணைக்கப்பட்டுள்ள தொலைபேசியை எடுத்தால் அதில் டயல் டோன் கேட்கும்.
00-Country
code-City Code-Phone number # என்ற format-ல் இதில் உலகின் எந்த
எண்ணுக்கும் ஜப்தி ரேட்டில் தொலைபேசலாம். எந்த எந்த ஊருக்கு என்ன காசு
என்று இங்கே பார்க்கவும்.
http://www.tpad.com/Tpad-Ultra-Cheap-Worldwide-Calling-Rates.php
வெயிட்.. வெயிட்... ஏதோ இலவசம்ன்னு சொன்னியே.. இப்போ காசு போவும்ன்னு
சொல்றியேன்னு கேட்குறீங்களா? இதோ வந்திட்டேன் அந்த மேட்டருக்கு... இப்போ
என்ன செய்யுறீங்க.. இந்த Dlink Router, LinkSys VoIP adapter
எல்லாத்தையும் ஊரிலே உங்க வீட்டிலே வாங்கி வெச்சிட்டு Hi Speed Internet
Connection கொடுத்திட்டு வந்திடுங்க.
இந்த பக்கத்திலே நீங்க எங்க இருக்கீங்கன்னு பாருங்க...
http://www.tpad.com/Tpad-Country-Local-Break-In-Numbers.php
உதாரணத்துக்கு லாஸ் ஏஞ்சலீசிலே இருக்கீங்கன்னா.. இந்த பக்கத்திலே இருக்கிற (323) 879 7002 நம்பரை உங்க கைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசில இருந்து கூப்பிடுங்க.
உள்ளூர்
நம்பர் கூப்பிடும் செலவு உங்க கைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசி
நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த நம்பருக்கு டயல் பண்ணின உடனே சாதாரண
தொலைபேசி நம்பரை கூப்பிடனுமா இல்லைன்னா Tpad நம்பரை கூப்பிடனுமான்னு
கேட்கும். 1-ம் நம்பரை அழுத்தினா Tpad நம்பர் அப்படீங்கும். 1-ம் நம்பரை
அடிங்க. Tpad நம்பரை அடிங்கன்னு சொல்லும். உங்களோட 6-டிஜிட் Tpad நம்பரை
அடிங்க.. ஊரிலே உங்க வீட்டிலே LinkSysல கனெக்ட் ஆகியிருக்கிற போன்
டிரிங்கும். அவங்க எடுத்து பேசலாம். இது இலவசம். ட்ரை பண்ணிட்டு எப்படி
இருக்குதுன்னு சொல்லுங்க. மாதக் கட்டணம் எல்லாம் எதுவும் கிடையாது.
சூப்பர் இல்ல?!
Monday, April 12, 2010
ஒரே நொடியில் uppercaseல் அடித்ததை lowercaseக்கு மாற்ற
நாம் ஏதாவது ஈமெயிலோ அல்லது WORDல் ஏதாவது டாகுமென்ட் உருவாக்கும் போது நாம் பெரிய எழுதுக்களில்(UPPER CASE) அடிக்க வேண்டியதை எல்லாம் சிறிய எழுத்துக்களில்(lower case) மறந்து டைப் செய்து விடுவோம். அப்படி சிறிது வரிகளை அடித்தால் அதை திரும்பவும் அழித்து மறுபடியும் டைப் செய்து விடுவோம். ஆனால் அலுவலகங்களிலோ அல்லது நிறைய பக்கங்களை அடித்துவிட்டால் என்ன செய்வது. நாம் அனைத்தையும் அடித்து திரும்பவும் அடிப்பதற்குள் நம்ம பாஸ் கிட்ட இருந்து போன் வரும். அவர்கிட்ட இந்த விஷயத்த சொன்னால் அவ்வளவு தான் நம்பளை கடித்து குதறிவிடுவார் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த தளம் நமக்கு உதவுகிறது. http://www.textconvert.com/ இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
இதில் நீங்கள் தவறாக டைப் செய்த மொத்த எழுத்துக்களையும் செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு இந்த தளம் வந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்
இதில் நீங்கள் தவறாக டைப் செய்த மொத்த எழுத்துக்களையும் செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு இந்த தளம் வந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்
நீங்கள் மேலே உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து விட்டு எந்த வடிவில் மாற்ற வேண்டுமோ (upper case OR lower case) அதற்கு ஏற்றார் போல செலக்ட் செய்து Convert Text என்ற பட்டனை அழுத்தியவுடன் நாம் கொடுத்த எழுத்துக்கள் மாறி இருக்கும். அவ்வளவு தான் திரும்பவும் இதனை காப்பி செய்து நம்முடைய டாகுமெண்டில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
இனிமேல் நாம் எந்த எழுத்துக்களில் வேண்டுமென்றாலும் டைப் செய்து நம்முடைய விருப்பதிருக்கு ஏற்றார் போல நாம் மாற்றி கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)
