Friday, April 9, 2010

மீட்டர் வட்டிக்காரர்கள் பிடியில் தேனி மலைக்கிராமங்கள்

தேனி :  மீட்டர் வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ள வருஷநாடு- கடமலைக் குண்டு மலைக்கிராமத்தினர், பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.

கண்டமனூரில் துவங்கி, மயிலாடும் பாறை, கடமலைக்குண்டு, வருஷநாடு பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் கண் ணில் படும் இடங்களில் எல்லாம் கொட்டைமுந்திரி, இலவம் பஞ்சு மரக்காடுகள் தான். இவற்றின் விளைச்சலை நம்பி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராம குடும்பத்தினர் இருக்கின்றனர். இம்மரங்களுக்கு இடை யே ஊடுபயிராக சில காய்கறிகளை பயிரிட்டும், சிறிதளவு வருவாய் பார்க்கின்றனர். பெரும்பாலும் பஞ்சு விளைச்சலை வைத்து தான் குடும் பங்கள் பிழைப்பு நடத்துகின்றனர். ஓராண்டு முழுவதும் குடும்பமே இக்காடுகளில் உழைத் தால், மார்ச் முதல் ஜூன் வரை இம்மரங்களில் இருந்து பயன் கிடைக்கிறது. பஞ்சு அறுவடை செய்தாலும், விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

அடிமாட்டு விலைக்கு இவற்றை வாங்கி கொண்டு, கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இடத்தரகர்கள். பெரும்பாலான விவசாயிகள் இத்தரகர்களின் பிடியில் சிக்கி இருப்பதே இதற்கு காரணம். விவசாயத்திற்கு சில ஆயிரங்களை 'மீட்டர் வட்டிக்கு' வாங்கும் விவசாயிகள், உழைப்பில் கிடைக்கும் பஞ்சு, முந்திரியை குறைந்த தொகைக்கு விற்று விட்டு, வறட்சியில் வாடுவது வாடிக்கையாக இருக்கிறது.'மீட்டர் வட்டி' கொடுமையிலிருந்து மீள முடியாமல், அடிமைகளாக வாழும் விவசாயிகள் சிலர், பெயர்களை கூறவே அச்சப்படுகின்றனர்.

அவர்கள் கூறுகையில், பஞ்சு மரத்திற்கு உழவடை, பூச்சி மருந்து தெளித்தல் போன்றவற்றுக் காக சில ஆயிரம் கடன் வாங்குகிறோம். வட்டிக்கு கூட்டு வட்டி என்ற ரீதியில், பல மடங்கு வசூலித்து விடுகின்றனர். பஞ்சு விற்பனையின் போது, ஒரு மூடைக்கு சாமி பஞ்சு 2 கிலோ இலவசமாக எடுத்துக் கொள் கின்றனர். கிலோ பஞ்சு விலையை, மார்க்கெட் விலையை விட பாதிக்கு பாதியாக நிர்ணயம் செய்து கணக்கிடுகின்றனர். கை நீட்டி கடன் பெற்றுவிட்டதால், விவசாயிகளும், அவர்கள் கூறும் கணக்கை மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலை.

இந்தவகையில் ஆண்டு முழுவதும் உழைத்து கிடைக்கும்பஞ்சை ஒட்டுமொத்தமாக வட்டிக்காரர்களிடம் கொடுத்து விட்டு, பாதி நாட்கள் வறுமையில் வாடும் நிலை இருக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பிழைப்பு தேடி, திருப்பூர், கேரளா மாநிலம் பகுதிக்கு சென்று விட்டனர். பல ஆயிரம் குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு இப்பகுதிக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் முடியவில்லை. பரம்பரை பரம்பரையாக கூலி வேலை செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள் ளோம். மீட்டர் வட்டி கொடுமையிலிருந்து மீட் கப்படுவதுடன், இடைத்தரர்கள் தலையீட்டைஒழித்து, பஞ்சு விலையை அரசு நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுத் தால் மட்டுமே மலைக்கிராமத்தினர் அடிமைத் தனத்திலிருந்து மீள முடியும் என்றனர்.மலை கிராமங்களில் மீட்டர் வட்டிக் கொடுமையால் மக்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுவருகிறது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி, மீட்டர் வட்டிக் கொடுமையிலிருந்து மலைக்கிராமத்தினரை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment