Thursday, April 8, 2010

மாரடைப்பால் ஆபத்தான நிலையில் இருந்தாலும் காப்பாற்றி விடலாம்- ஐரோப்பிய மருத்துவர் குழு ஆய்வு முடிவுகள்

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் உடல் குளிர்ந்து பிறகு அவர்களின் இதயத் துடிப்பு அடங்கி உயிரிழப்பு ஏற்படும்.இப்போது அம்மாதிரிச் சூழ்நிலைகளில் நின்று போன இதயத்தை மீண்டும் இயங்க வைத்து பாதிக்கப் பட்டவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என ஐரோப்பிய மருத்துவர் பேராசிரியர் மார்ட்கேஸ்டிரன்  தலைமையிலான ஒரு குழு ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த இந்த மருத்துவக் குழுவினர் ஐரோப்பாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பால் பாதிக்கப் பட்ட 200௦௦ நபர்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது .200 பேரில் 182 பேர் இந்த முறையில் உயிர் பிழைத்தனர்.உயிர் பிழைத்தவர்களில் ௮௩ பேர் 66 முதல் 71 வயது நிரம்பியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களின் கண்டுபிடிப்பின்படி மாரடைப்பால் பாதிக்கப் பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்` (பேட்டரியால் இயங்கும் ஒரு வகைப் பொருள்) என்ற கருவியின் மூலம் மூளையில் சிறிதளவு குளிர்ச்சியை ஏற்படுத்து நின்று போன இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்  எனக்
கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment