இமெயிலால் எத்தனையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வேறு ஒரு நபருக்கு அனுப்பபட்டு விட்டாலோ பிரச்சனைதான்.
இந்த பிரச்ச்னைக்கு எளிமையான தீர்வாக ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை பயன்படுத்தி மெயில் அனுப்பினால் அது தவறான நபரின் இன்பாக்சுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சமோ தேவையில்லை.
அதே போல் அனுப்பபட்ட நபரை தவிர யாராலும் படிக்க முடியாது. காரணம் அந்த மெயில் படிக்கப்பட்டதுமே தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அதன் பிறகு அனுப்பியவரே நினைத்தாலும் அதனை படிக்க முடியாது. தேவைப்பட்டால் ஒரு பாஸ்வேர்டையும் செட் செய்து கொள்ளலாம். அந்த பாஸ்வேரடை சொன்னால மட்டுமே பெறுபவர் அதனை படிக்க முடியும். ]
இமெயில் செய்திகளை பாதுகாப்பாக என்கிரிப்ட் செய்து அனுப்புவதோடு பாஸ்வேர்டையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதி அளிக்கிறது இந்த தளம். ரகசியமாக மெயில் அனுப்ப நினைப்பவகளுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். இந்த செய்தி தானாகவே அழித்துக்கொள்ளும் என்பது தான் தளாத்தின் பெயர்.
கொஞ்சம் நீளமாக இருப்பதால் அத்னை குறைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
0———–
No comments:
Post a Comment