Wednesday, April 14, 2010

30000 பேருக்கு வேலை தரும் இன்போஸிஸ்

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் இந்த ஆண்டு மட்டும் 30,000 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க உள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான 4வது காலாண்டு, ஏப்ரல் 09 முதல் மார்ச் 2010 வரையான முழு ஆண்டு நிதி முடிவுகளை இன்போசிஸ் வெளியிட்டது. அதில் கடந்த நிதி ஆண்டின் கடைசி 3 மாதங்களில் ரூ.1,613 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது.  

2010-11ம் நிதி ஆண்டில் 30,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்க இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 17 சதவீத சம்பள உயர்வும் அறிவித்துள்ளது.

அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த நிதி ஆண்டில் 18,000 பேருக்கு வேலை அளிக்க இலக்கு நிர்ணயித்து, 27,000 பேரை தேர்வு செய்தோம். இந்த நிதி ஆண்டில் 30,000 பேரை சேர்க்க திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment