பெங்களூர் : ‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை... பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார்.
ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன.

No comments:
Post a Comment