அடித்து விரட்ட
ஆயுதம் தான் இல்லை
விட்டு விலகவும்
அதற்கு மனமில்லை.
எங்கு போனாலும்
மொத்த சந்தோஷத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடுங்கிக் கொள்ளவே
ஆசைப்படுகிறது.
யாருமே விரும்புவதில்லை
ஆனாலும் அதற்கு
சூடு சொரணை இல்லை.
எவ்வளவு திட்டினாலும்
கை கூப்பி காலில் விழுந்தாலும்
முகம் சிவக்க அழுது புலம்பினாலும்
விட்டுப் போக மறுக்கிறது
என் கூடப்பிறக்காத பிறப்பு
ஆயுதம் தான் இல்லை
விட்டு விலகவும்
அதற்கு மனமில்லை.
எங்கு போனாலும்
மொத்த சந்தோஷத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடுங்கிக் கொள்ளவே
ஆசைப்படுகிறது.
யாருமே விரும்புவதில்லை
ஆனாலும் அதற்கு
சூடு சொரணை இல்லை.
எவ்வளவு திட்டினாலும்
கை கூப்பி காலில் விழுந்தாலும்
முகம் சிவக்க அழுது புலம்பினாலும்
விட்டுப் போக மறுக்கிறது
என் கூடப்பிறக்காத பிறப்பு
No comments:
Post a Comment