Monday, April 5, 2010

ஆன்லைன் வங்கிக் கணக்கா? உஷார் ??????


வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டன.


இவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும். இதன் மூலம் நம் கணக்கினைக் கண்காணிக்கலாம்; நிதியை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றலாம்.


பில்களைச் செலுத்தலாம். டிக்கட் எடுக்கலாம், என வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நம் பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருட்டுத்தனமாகப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.

இவை பிரபலமான வங்கிகளின் இணைய தளம் போலவே தளங்களைத் தயார் செய்து, நம்மை ஏமாற்றி அதில் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் என்டர் செய்திட வழி தந்து அவற்றைப் பெற்றுவிடுகின்றனர்.

பின் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எளிதாகத் திருடுகின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குகளில் இந்த திருட்டு அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

1. முதலாவதாக இந்த வங்கிகளிலிருந்து உங்கள் இமெயிலுக்கு ஏதேனும் இமெயில் மெசேஜ் வந்தால் அவற்றைத் திறக்கவோ, அல்லது திறந்த பின்னர் அதில் காணப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்திடவோ வேண்டாம். இது போன்ற மெயில்களை இந்த பேங்குகள் அனுப்புவதில்லை.

2. இந்த வங்கிகளின் தளங்களை அணுகிய உடனேயே அதன் முகவரியைப் பார்க்கவும். அதில்https என்ற எழுத்துக்களில் முதல் முகவரி சொல் இருக்க வேண்டும். இதில் s என்பது செக்யூரிட்டி என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிப், பாதுகாப்பான தளம் என்பதைக் குறிக்கிறது. இந்த s இல்லை என்றால் அது போலி. எனவே உடனே வெளியேறவும்.

3. பூட்டு மாட்டும் பேட்லாக் சிறிய படம் ஒன்று இந்த தளத்தின் அதே முகப்புப் பக்கத்தில் எங்கேணும் இருக்கும். இது பெரும்பாலும் அட்ரஸ் பாரின் ஓரத்தில் அல்லது கீழாக ஒரு இடத்தில் இருக்கும். இதன் மீது கிளிக் செய்தால், இந்த தளம் குறித்த பாதுகாப்பு சர்டிபிகேட் கிடைக்கும். இந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சி இதுவாகும்.

4. அட்ரஸ் பாரின் முகவரிக்கு முன்னால் உள்ள பாகம் பச்சை நிறமாக இருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும். இதுவும் இந்த தளம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.

5. மேலும் இந்த தளங்களில் லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் தரப்பட்டிருக்கும். ஏதேனும் பாப் அப் விண்டோ கொடுத்து, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் தர வேண்டாம். தளத்தைவிட்டு வெளியேறவும்.

இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும்.

ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது.

சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்.

No comments:

Post a Comment