Thursday, April 15, 2010

விஸ்டன் விருது வென்றார் சேவக்

புதுடில்லி:  ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் "விஸ்டன்' விருதை, தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் சேவக் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் "விஸ்டன்' இதழ் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவ்விருதை, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஷேன் வார்ன், இங்கிலாந்து "ஆல் ரவுண்டர்' பிளின்டாப் ஆகியோர் பெற்றுள்ளனர். கடந்தமுறை இது, இந்திய வீரர் சேவக்கிற்கு கிடைத்தது.
இதனிடையே இந்த ஆண்டு சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கான இறுதிப்பட்டியலில் சேவக்குடன், இங்கிலாந்தின் ஸ்டிராஸ் மற்றும் இலங்கையின் தில்ஷன் ஆகியோர் இருந்தனர். இதில் டெஸ்டில் சராசரி 70, ஸ்ட்ரைக் ரேட் 108.9 மற்றும் ஒருநாள் போட்டியில் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 136.5 என வைத்துள்ள சேவக், சிறந்த வீரருக்கான விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தட்டிச் சென்றார்.
சேவக் தவிர, இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாட் பிரையர், சுழற் பந்து வீச்சாளர் சுவான், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோரும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு, விஸ்டன் இதழ் தேர்வு செய்துள்ளது.

No comments:

Post a Comment