Thursday, April 29, 2010

ரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை

ரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.
 
இப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.
 
இங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.
 
லைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.
 
ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.
 
ரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.
 
இந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.

No comments:

Post a Comment