Wednesday, April 7, 2010

கழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...

ஒரு நிறுவனம் வளரும் முன் அது எல்லோருடையடைய நம்பக தன்மையையும் சம்பாதிக்க அது என்னவெல்லாம் செய்யும்... அதுவே அந்த நிறுவனம் வளர்ந்து விட்டு நல்ல நிலைக்கு போய் விட்டால்... அவ்வளவுதான்... அவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது... அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம் என்று பெயர் எடுத்த எர்டெல் நிறுவனமும் ஒன்று...

சரி அவர்கள் நெட்ஒர்க் பொறுத்தவரை இதுவரை எந்த தப்பையும் சொல்ல முடியாது... கொஞ்சம் காசு அதிகம்தான்.. ஆனால் எந்த பிரச்சனையும் இதுவரை நான் கண்டதில்லை... ஆரம்ப காலத்தில் ரோமிங்கில் அதாவது தமிழ்நாட்டின் உட் பகுதியில் ஒரு சில இடங்களில் நெட் ஒர்க் பிரச்சனை இருந்தாலும் அது பின்பு சரி செய்யபட்டது....

இப்போது தடையற்ற நெட் ஒர்க் ஏர்டெல் என்று தன்னை பிரகனபடுத்திகொண்டு இருக்கின்றது....சரி அது தடையில்லாமல் எல்லோருக்கும் தனது சேவையை செயல் படுத்துகின்றாதா? என்றால் அது இல்லை என்று சொல்லலாம்....

போன மாதம் புது வீட்டுக்கு போக போவதால் என் ஏரியாவில் நெட் ஒர்க் கனெக்ஷன் இருக்கின்றாதா? என்று கேட்டட போது முதலில் ரிக்வெஸ்ட் கொடுங்கள் கிழித்து விடுகின்றோம் என்று சொன்னார்கள்.... சேன்ஜ்ஆப் அட்ரஸ் ரிக்வெஸ்ட் கொடுத்தேன்....

முதல்ல எல்லா அமவுன்டைடியும் கட்டு.. அப்பதான் சொல்லுவேன் என்று சொன்னார்கள்...சரி என்று கட்டி தொலைத்தேன்....போன மாதம் 17 புதன் அன்று கொடுத்தேன்... அதாவது ஒர்கிங் டேசில் 3 நாளில் எதாவது ஒரு நாளில் கனெக்ஷன் கொடுத்து விடுவோம் என்று சூளுரைத்தார்கள்...அதாவது 20ம் தேதி கொடுக்க வேண்டும்... அப்போதும் கொடுக்கவில்லை.. நடுவில் ஞாயிறு விடுமுறை... திங்கள் கேட்டு கொண்டு இருப்பதாக சொன்னார்கள்...லைன் அவைலபிளிட்டி பார்த்துக்கொண்டு இருப்பதாக சொன்னார்கள்....

ஒவ்வோறு நாளும் தோ வந்து விடுவார்கள் அதோ வந்து விடுவார்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் காத்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்.... ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கொடுக்க முடியுமா? முடியாதா என்று கேட்ட போது பூனைக்குட்டி வெளியே வந்தது... சார் அந்த இடத்தில் லைன் இல்லை என்று எங்கள் டெக்னிக்கல் டீம் இப்போதுததான் சொல்லியது என்று சொன்னார்கள்...

அதாவது ஒரு இடத்தில் லைன் இருக்கின்றது இல்லை என்று சொல்ல அவர்களுக்கு பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்.. இல்லை என்று சொல்ல பத்து நாட்கள் எடுத்துக்கொண்ட டெக்னிக்கல் டீம் ஏர்டெல் டீம்தான் போல் இருக்கின்றது.... சரி இதையாவது விட்டு தொலைவோம்....
நான் சொன்னேன் இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றேன்... நேரம் கிடைக்கும் போது எழுதுவதால் அதன் பயன் எனக்கு ரொம்ப முக்கியம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்....

அதைவிட காமெடி ஆன்தவேயில் எங்கள் டீம் இருக்கின்றது என்று சொன்னார்கள்.... தினமும் லேண்ட் லைன் கஸ்டமர் கேருக்கு என் செல்லில் இருந்து பேசி 30 ரூபாய் வரை தண்டம் அழுதேன்... நான் சொன்னேன் கடந்மத 13ம் தேதி சட்டமன்ற திறப்புக்கு சோனியா, மன்மோகன் வருகையால் சென்னையிர் டிராபிக்... அந்த நாளை தவிர மற்ற எந்த நாளிலும் இதுவரை சென்யில் டிராடிபின் ஜாம் ஏற்படவில்லை... அன்த வேயில் இருந்தால் இந்நேரம்20 முறை என் எரியாவுக்கு வந்து செல்லாம் என்று சொன்னேன்....பதில் இல்லை

எனது மொபைல் ஏர்டெல் என் மனைவியுடையதும் அதுவே...நெட்ஒர்க் என் புது வீட்டில் உள்ளே எடுக்கவில்லை... அந்த ஏரியாவில் எல்லோருடைய வீடுகளி்லும் இதுதான் நிலமை.. எல்லோரும் ஏர்செல் வைத்து இருக்கின்றார்கள்...


நம்பரை அடிகடி எல்லோரையும் போல் மாற்றும் நபர் நான் அல்ல... இந்த நம்பரை இன்கம்மிங்க்கு 50 கொடுத்து பயன்படுத்துவதில் இருந்து வைத்து இருக்கின்றேன்... பல வருடங்கள் கழித்து நம்பர் கேட்கும் நண்பர்கள் கூட அதே எண் எனும் போது ஆச்சர்ய பட்டு போய் இருக்கின்றார்கள்...

நான் தெனவெட்டாக சொல்லி இருக்கின்றேன்... ஏர்டெல் எனும் கம்பெனி இழுத்து மடும் போது இந்த நம்பரும் மாறும் என்று... ஆனால் அந்த அலட்சியத்தின் பலனை அனுவித்துக்கொண்டு இருக்கின்றேன்...


வீட்டில் நெட் ஒர்க் இல்லை வெளியே இருக்கின்றத என்று சொன்ன போது கம்ளெயின்ட் நம்பர் ஒன்று கொடுத்தார்கள் பத்து நாளைக்கு மிகாமல் டைம் கேட்டார்கள்...கிழி்த்து விடுவது போல்.. நானும் பொறுமை காத்தேன்...எல்லாக்காலுக்கும் வெளியே வந்து பேசி நானும் என் மனைவியும் ரன்னிங் ரேஸ் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்....நடுவில் கஸ்டமர் கேருக்கு போன் செய்த போது சார் உங்களுக்கு மார்ச் 30ம் தேதி டைம் கொடுத்து இருக்காங்க... அதுக்குள்ள ஏன் அவசரபடுறிங்க.. என்று சொன்னார்கள்...நானும் பொறுத்க்துகொண்டேன்....

நேற்று போன் செய்தேன்.... எங்கள் டெக்னிக்கல் டீம் நல்லா அலசி ஆராய்ச்சி பண்ணதுல உங்க ஏரியாவுல எந்த நெட் ஒர்க் பிரச்சனையும் இல்லை என்று சொன்னதாக சொல்ல.... அந்த நாதாரி டெக்னிக்கல் டீமை என் வீட்டுக்கு வந்து செக் செய்ய சொல்லு... அப்படி நெட் ஒர்க் இருந்து நான் சொன்னது பொய்யின்னா என்னோட 9000 ரூபாய் மொபைலை கண்ணகி போல் தரையில் அடித்து உடைக்கின்றேன்..என்று கூட சொன்னேன்...

சந்தோஷ்குமார் என்று ஒரு நண்பர் பேசினார் கோடு விழுந்த ரிக்கார்ட் போல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தார்... இவ்வளவு கோபமாக பேசினால் லைனை கட் செய்து விடுவேன் என்று சொன்னார்....ஏன்டா உன்னை என்ன மடியில போட்டு தலே லோ பாடிகிட்டா பேச முடியும்.... அப்புறம் எதுக்கு கஸ்டம்ர் கேருக்கு வேலைக்கு வந்த???

அப்புறம் எதுக்கு கஸ்டமர் கேர்...

ஒரு கஸ்டமர் உங்க நெட் ஒர்க்ல பிராப்ளம்னு சொல்லி இருக்கின்றேன்.. அதுக்கு என்ன தீர்வுன்னு இதுவரை சொல்ல முடியலை... இல்லை என்றால் நாங்கள் நெட் ஒர்க் கொடுக்க முடியவில்லை என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.. அதை விடுத்து இன்னும் அதே பிரச்சனையில் நான் தவித்து கொண்டு இருக்க...எங்கள் டெக்னிக்கல் டீம் நன்றாக இருப்பதாக சொல்கின்றது என்றால்... அப்போது நான் தப்பாக சொல்லிகின்றேனா? எனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா? கஸ்டமர் கேருடன் நான் மாரடிக்க எனக்கு என்ன தலையெழுத்து....

அதை விட கொடுமை சில பேர் பதில் சொல்ல தெரியவில்லை என்றால் அவ்வளவுதான்.. சட்டென லைளை கட் செய்து விட்டு போய் விடுவார்கள்... அப்புறம் தமிழில் தகவலை பெற ஒன்றை அழுத்தி, இரண்டை அழுத்தி நாளை அழுத்தி எட்டை அழுத்தி போதும்டா சாமி என்று இருக்கும்.....

கஸ்டம்ர் கேர் என்று ஒன்று சிறப்பாக செயல்படுவதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.... இந்த பத்து வருடங்களில் கஸ்டமர் கேரால் நாங்கள் பட்ட அவஸ்த்தைகள் கொஞ்சம் நஞ்சமல்ல...


ஏர்டெல்லில் நன்றாக உற்று பாருங்கள்... கடைசி நாளுக்கு உங்க போஸ்ட் பெய்ட் கனக்ஷனுக்கோ லேன்ட் லைனுக்கு பணம் கட்ட போனால் சில சேவைஅ மையத்தில் கம்யூட்டர் ஒர்க் ஆகாது என்று சொல்லுவார்கள்... இதனால் கிரடிட் மற்றும் டெபிட்டில் மறுநாள் பைனோடு பணம் கட்ட நேரிடும்... அதிலும் காசு பார்பதாக பணம் கட்ட வந்த பொது சனம் புலம்பியபடி சென்றது....

சில சேவை மையத்தில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்.... செக் அல்லது கிரடிட் கார்டில்தான் பே செய்ய வேண்டும்...எழை தொழிலாளிக்கு சேவை வழ்கி விட்டு பணமாக வாங்க மாட்டோம் என்று சொல்லும் நிறுவளம் இதுதான் என்று நினைக்கின்றேன்...

நான் மறைமலைநகர், செங்கல்பட்டில் எல்லாம் நெட் ஒர்க் கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை, போரூர் பாய்கடை பஸ்டாப்பில் இருந்து ஒரு கிலோமீட்டரில் தான் ஏன் நெட் ஒர்க் இல்லை என்று கேட்கின்றேன்.. அதை என் சரிபடுத்தவில்லை என்று கேட்கின்றேன்...இனி இந்தியாவின் நம்பர் ஒன் நெட்ஒர்க் என்று விளம்பர படுத்தாமல் இருங்கள்... நானும் என் மனைவியும் புது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பேசுகின்றோம்... நீங்கள் நம்பர் ஒன் நெட் ஒர்க் இல்லை....

அதை விட எக்ஸ்பிரஸ் யுவர்செல்ப் என்று வாசகத்தை படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது...
ஒரு கம்பெனி வளர்பதும் முதலிடத்தில் தக்க வைப்பதும் சாதாரண விஷயம் இல்லை... ஆனால் சம்பளம் வாங்கி கொண்டு மாட்டை மேய்தோமா கோலை போட்டோமா என்ற நிலையில் ஏர்டெல் கஸ்டமர் கேர் இருக்கின்றது....

இதுவரை நான் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்ஒர்க்கில் பயன் பெற்று வந்தேன்.. எந்த பிரச்சனையும் இல்லை....ஆனால் பிரச்சனை எனும் போது.. அதை சரி செய்யவும் காது கொடுத்து கேட்கவும் யாரும் இல்லை.... அவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு சாதாரான விஷயம் ஆனால் என்னை போன்றவர்களுக்கு அது வாழ்க்கை... ஒரு போன் கால் மிஸ் ஆனாலும் எனக்கு என் வாய்ப்பு என்னை விட்டு போய்விடும்... எல்லோருக்கும் இந்த நம்பர்தான்... என்ன செய்வது என்று தெரியவில்லை...

நெட் கனெக்ஷனுக்கு 10 நாட்கள் வெயிட்பண்ணி இல்லை என்றார்கள்... அதை முதலிலேயே சொல்லி தொலைத்தால் என்ன? நாம் அடுத்த வேலை பார்க்க போவோம் இல்லையா?


டிராய் ஒரே நம்பரை எல்லா இணைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு கொடுத்தால்தான் இவங்க கொட்டம் எல்லாம் அடங்கும்...

No comments:

Post a Comment