Tuesday, April 20, 2010

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை: லலித் மோடிக்கு லஞ்சமாக ரூ.400 கோடி கொடுக்கப்பட்டது; புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு

ஐ.பி.எல்.  தலைவரான லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. 3 அணிகளில் பங்கு, மேட்ச் பிக்சிங், அன்னிய செலவாணி, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு கோடி கோடியாய் பணம் சம்பாதித்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் தனது பதவியை இழக்கிறார்.
 
இந்த நிலையில் லலித் மோடி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெலிவிசன் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் அவருக்கு ரூ.400 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 
சோனி என்டர்டெய்ன் மெண்ட் - வேல்டு ஸ்போர் டஸ் குரூப் (டபிள்யூ எஸ்.ஜி) நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எப்.) அமைப்பு டெலிவிசன் ஒளிபரப்பு உரிமைக்கான வாய்ப்பை வழங்கியதற்காக ரூ.400 கோடி வழங்கி உள்ளது.
 
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கோ, ஐ.பி.எல். அமைப்புக்கோ, 8 அணிகளுக்கோ எதுவும் தெரியாது. மோடி ஒருவர் மட்டுமே வாய்ப்புக்கான ஒப்பந்தத்தில் இருந்தார்” என்றார்.
 
இதற்காக வழங்கப்பட்ட ரூ.400 கோடிக்கு கணக்கு இல்லை. டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு ரூ.4,222 கோடி முதலில் பெற்றது. 2-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் தான் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment