சென்னை, மார்ச். 9-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து தயாரிப்பாளர் ஹென்ஜி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் கூறி இருப்பதாவது:-
ஐ.பி.எல். போட்டி தொழில் ரீதியானது. இதில் இந்திய வீரர்கள் விளையாடும் போது காயம் ஏற்பட்டு அணியில் இடம் பெற முடியாமல் போகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு நடக்கும் நேரத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஐ.பி.எல். போட்டிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. அவர் ஏற்கனவே ஒரு முறை இதே மாதிரியான மனுவை தாக்கல் செய்து இருந்தார். கிரிக்கெட் வாரியத்திடம் முறையீடுமாறு கூறி அந்த மனு தள்ளுபடி ஆனது. இது தொடர்பாக ஐ.பி.எல். அமைப்பிடம் மனு கொடுத்தும் விளக்கம் இல்லாததால் ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.

No comments:
Post a Comment