லண்டன், மார்ச். 30-
இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் டயானாவும், டோனியும் உயிரிழந்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. டயானா இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மரணம் குறித்த சர்ச்சை ஓயவில்லை. அவ்வப்போது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன
தற்போது, இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித் துள்ளார்.
டயானா- டோனி அல்பயத் ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய விபத்தின் மூலம் அவர்கள் இருவரையும் பிரிக்க சதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் வக்கீல் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment