Monday, March 1, 2010

இந்தியாவின் வெற்றிநடை தொடருமா?: இன்று ஆஸி.,யுடன் மோதல்



புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரின், முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராக உள்ளது. முதல் ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி இன்று, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
உலககோப்பை ஹாக்கித் தொடரில் இன்று "பி' பிரிவில் ஆட்டங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பரம எதிரி பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில், வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
முன்னணி வீரர்கள் சந்தீப் சிங், தனஞ்செய் மகாதிக், திவாகர் ராம் ஆகியோர் முதல் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராஜ்பால் சிங், பிரப்ஜோத் சிங், சிவேந்திரா சிங் ஆகியோர் களத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். நடுகள ஆட்டக்காரர் சர்தார் சிங்கும் ஜொலித்தார். இவர்களின் அசத்தலான ஆட்டம், இன்றும் இது தொடரும் என நம்பலாம்.
போராட வேண்டும்:
ஆனால் கடந்த இரண்டு <உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. இங்கிலாந்திடம் எதிர்பாராமல் அடைந்த தோல்வியால் அதிர்ச்சியில் உள்ளது. இருப்பினும் விரைவில் இந்த அணி மீண்டு விடும். உலக கோப்பை தொடரில் 72 போட்டிகளில் 51ல் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் <<உள்ளது. பலமான இந்த அணியை வீழ்த்தி, இந்திய அணி இன்று இந்தியா போராட வேண்டும். இன்று இந்தியா வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம்.
நம்பிக்கையுடன் ஸ்பெயின்:
இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 10 உலக கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 7, ஸ்பெயின் 2 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி "டிரா' ஆனது. இதனால் இன்று பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிரிவில் நடக்கும் மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
ஆஸி., ஆதிக்கம்:
* இரு அணிகளும் கடைசியாக சந்தித்த 6 உலக கோப்பை போட்டிகளில் 4ல் ஆஸ்திரேலியாவும், 1ல் இந்தியாவும் வென்றுள்ளது. ஒரு போட்டி "டிரா' ஆனது.
*கடந்த 1978ல் பியூனஸ் அயர்சில் நடந்த <உலக கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2-0 என வீழ்த்தியுள்ளது.
*இந்திய அணிக்கு எதிராக 6-0 என (1996, லண்டன்) அதிக கோல் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
குவியும் பரிசு மழை:
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, சகாரா இந்தியா நிறுவனம் பயிற்சியாளர், அணியின் வீரர்கள் மற்றும் சக உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி பாராட்டு:
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வெற்றி கண்டது. இதற்கு இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்ட அறிக்கையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றி பெற்ற இந்திய அணியை பாராட்டுகிறேன். நமது அணியின் வெற்றி நடை, இந்த தொடர் முழுவதும் தொடரும் என நம்புகிறேன்,'' என்றார்.
ஹர்பஜன் கொண்டாட்டம்:
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" முதல் போட்டியில் நமது அணி பாகிஸ்தானை வென்றது, ஹாக்கி உலக கோப்பையை கைப்பற்றியது போல இருந்தது. எனது வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி, இந்த வெற்றியை கொண்டாடினேன்,'' என்றார்.

No comments:

Post a Comment