திருநெல்வேலி:
ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் சோதனை வெற்றிகரமாக முடிந்து விட்டால் வெளிநாடுகளில் கையேந்தும் நிலை மாறி விடும். மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை ) மாலையில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி மலைப்பகுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் "திரவ திட்ட இயக்க மையம்' உள்ளது.
ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனை தளமாக மகேந்திரகிரி மையம் செயல்படுகிறது. இதுவரையிலும் ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது. கல்வி-மருத்துவத்திற்கு கார்ட்டோ சாட்டிலைட் 2பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரலில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள் பெங்களூருவில் உள்ள செயற்கை கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே இவை தொடர்பான சோதனைகள் நடத்த கே.ராதாகிருஷ்ணன் இன்று காலையிலேயே மகேந்திரி ஐ.எஸ்.ஆர்.ஓ.,மையம் வந்துள்ளார். அவருடன் பெங்களூரு மற்றும் மற்ற மைய அதிகாரிகளும் வந்துள்ளனர்.
இன்று ( வெள்ளிக்கிழமை ) மாலையில் நடத்தப்படும் எல்110 எனப்படும் டெபலப்மென்ட் சோதனையில் 200 வினாடிகளுக்கான சோதனை நடத்தப்பட உள்ளது. தற்போது நாம் ரஷ்யாவிடம் வாங்கி வருகிறோம். இந்த சோதனை கூடிய அளவிற்கு இன்று வெற்றியாக அமைந்து விடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் கையேந்த வேண்டியிருக்காது என்கின்றனர்.
No comments:
Post a Comment