Wednesday, March 10, 2010

நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவேன்: தெண்டுல்கர் பேட்டி


மும்பை, மார்ச். 10-
 
விளையாட்டு தொடர்பான பத்திரிக்கை ஒன்று நாட்டில் விளையாட்டு துறையில் செல்வாக்கு பெற்ற 50 பேரை தேர்வு செய்து விருது வழங்கியது. இதில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்தார். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. விடுமுறை பெற்றுக் கொண்ட தெண்டுல்கர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-
 
நான் நீண்ட கனவுகளோடு கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இரண்டு, மூன்று தலைமுறை வீரர்களோடு விளையாடி விட்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முழு இதய உணர்வோடு நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். அணியில் சிறப்பு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது நடந்து கொண்டு இருக்கிறது.
 
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்காக எனக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. இன்னும் கூட வாழ்த்துக்கள் வந்து குவிந்தபடி இருக்கிறது. இது எனக்கு உணர்ச்சிபூர்வமான மகிழ்ச்சியை தருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment