Monday, March 8, 2010

மத்திய அரசில் உளவு அதிகாரி மற்றும் மேலாளர் பணி வாய்ப்பு - 08-03-2010

 
 

மத்திய அரசு ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மத்திய அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் ஜூனியர் ஒர்க்ஸ் மேனேஜர் மற்றும் துணை உளவு அதிகாரி பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

தகுதிகள்
ஜூனியர் ஒர்க்ஸ் மேனேஜர் பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 30 வயதுக்குள் இருப்பதும் அவசியம்.

துணை உளவுப் பிரிவு அதிகாரி பணிக்கு பி.இ., அல்லது பி.டெக்., தகுதியை எலக்ட்ரானிக்ஸ், இ.இ.இ., எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், ஏரோநாடிக்ஸ், கெமிக்கல், மெக் கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இவற்றில் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.சி.ஏ., அல்லது வேதியியல்/பயோடெக்னாலஜி/ஸ்பேஸ் இன்ஜினியரிங்/ராக்கெட்ரி இவற்றில் ஒன்றில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், ஒயர்லெஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆப்டிக்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ் இவற்றில் ஒன்றில் எம்.எஸ்சி., முடித்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

யு.பி.எஸ்.சி., இணைய தளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கொள்ளலாம். கட்டணம் ரூ.50. இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீ ஸ்டாம்பாக தபால் அலுவலகத்தில் பெற்று அதே அலுவலகத்தில் கேன்சலிங் என்னும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு விளம்பர எண் 50/2010ன் படி விண்ணப்பிப்பதை தவறாமல் விண்ணப்பம் அனுப்பும் உறையின் இடது மேற்புறம் குறிப்பிட வேண்டும். முழு விபரங்களை www.upsc.gov.in தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.

நிரப்பிய விண்ணப்பங்களை அனுப்பும் முகவரிThe Secretary, U.P.S.C.,
Dholpur House, Shajahan Road,
NEW DELHI 110 069.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் மார்ச் 18, 2010.

No comments:

Post a Comment