Wednesday, March 17, 2010

பணமாலை தும்பிக்கையில் மீண்டும் மாயாவதி : இன்று ரூ.18 லட்சம் மதிப்பு மாலை போட்டனர்

லக்னோ :  பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், கட்சித் தலைவர் மாயாவதிக்கு இன்று மீண்டும் பணமாலை போடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18 லட்சமாம்!. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பண வசூல், உ.பி.,யில் ஆங்காங்கே, தனக்கும், கட்சிச் சின்னமான யானைக்கும் சிலை நிறுவுதல் உட்பட பல புகார்களில் சிக்கித் "திளைத்து' வருகிறார், உ.பி., முதல்வர் மாயாவதி.கடந்த திங்கள் அன்று, கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. காலை முதலே அவருக்கு, "பணமழை' பொழியத் துவங்கி விட்டது. மற்ற பரிசுப் பொருட்களை விட, பணம் மீது தான் மாயாவதிக்கு மோகம் அதிகம் என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டும் அளவுக்கு, பிரம்மாண்டமான பணமாலையை, அவரது ஆதரவாளர்கள், அன்று அவருக்கு அணிவித்தனர். ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன அந்த மாலையின் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, அருகில் இருந்து பார்த்தவர்கள் கூறினர். ஆனால், அதன் மதிப்பு வெறும், ரூ.21 லட்சம் தான் என, கட்சியினர் கூறுகின்றனர். இதனால், மாயாவதிக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், கட்சியின் அவசரக் கூட்டம் இன்று காலை நடந்தது. திங்கள் அன்று போடப்பட்ட பண மாலை குறித்த சர்ச்சையில், எதிர்க்கட்சியினரை எப்படி சமாளிப்பது, அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசியபோது, அவருடைய பேச்சு தடைபடும் வகையில், அவரைச் சுற்றி தேனீக்கள் கூட்டத்தை சுற்ற விட்டது யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்துவது, ஆகிய, "பிரச்னைகள்' குறித்து விசாரிக்கத் தான் இந்தக் கூட்டம் நடந்தது.கூட்டத்தின்போது, மாயாவதிக்கு மீண்டும் ஒரு "இன்ப அதிர்ச்சி' காத்திருந்தது. இன்றும், அவரது கழுத்தில், பணமாலை விழுந்தது. இந்த முறை வசூல், ரூ.18 லட்சம் என கட்சியினர் தெரிவித்தனர். "மாயாவதியை எதிர்க்க முற்படுபவர்கள் அழிந்து போவர்' என்ற கோஷத்துடன் இன்று காலை, கட்சி உறுப்பினர்கள், அவருக்கு மாலை அணிவித்தனர்.இவ்வளவு பணம் எங்கிருந்து கொடுக்கப்படுகிறது என்பது குறித்து வருமான வரித் துறை விசாரணையை முடிக்கி விட்டுள்ளது.மாயாவதி அரசில் அமைச்சராக உள்ள நசீமுதீன் சித்திக்கி என்பவர் கூறியதாவது: கட்சியின் லக்னோ பிரிவினர் கொடுத்த பணம் அது. திங்கள் அன்று அணியப்பட்ட மாலையின் மதிப்பு ரூ.21 லட்சம். மாலையில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து யாராவது எண்ணித் தகவல் கொடுங்களேன். எங்கள் கட்சி ஊர்வலத்தைப் பார்த்து எதிர்க்கட்சியினர் மிரண்டு விட்டனர். அதனால் தான், அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.இவ்வாறு, சித்திக்கி கூறினார். எந்த அச்சுறுத்தலுக்கும் மாயாவதி அடிபணிய மாட்டார் என்பதைக் காட்டவே, இன்று காலையும் அவருக்குப் பண மாலை அணிவித்ததாகக் கட்சியினர் கூறுகின்றனர்.மேலும், இனி எந்தப் பொதுக் கூட்டம் நடத்தினாலும், மாயாவதியை, பணமாலையுடன் மட்டுமே வரவேற்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "தலித் மக்களின் புதல்விக்கும், அவரது கட்சிக்கும், மதிப்பு மிக்க ஆதரவு கிடைப்பதும், அவர் அதிகாரத்தில் இருப்பது கண்டும், எதிர்க்கட்சியினருக்கு பொறுக்கவில்லை' என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment