கராச்சி, மார்ச். 2-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக தோற்றது. இந்த தோல்விக்கு சூதாட்டம் தான் காரணம் என்று கூறப்பட்டது.
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கமரன் அக்மல், வேகப்பந்து வீரர் ரானா ஆகியோருக்கு மேட்ச் பிக்சிங்கில் (சூதாட்டம்) தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.
இதன் காரணமாத்தான் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கமரன் அக்மல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டு எல்லாமே ஆதார மற்றது. முழுக்க தவறானது. புகழை கெடுக்கும் வகையில் எனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
எனது கிரிக்கெட் வாழ்க்கை தூய்மையானது. எப்போதுமே நான் நேர்மையாகத்தான் விளையாடி வருகிறேன்.
இவ்வாறு அக்மல் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 32 ரன்னில் தோற்றது. இந்த ஆட்டத்தில் அக்மல் 3 கேட்ச்களையும் ஒரு ஸ்டம்பிங்கையும் தவற விட்டார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியா தொடரில் மோசமாக ஆடியது மற்றும் நடந்து கொண்ட விதத்திற்காக அக்மல், அப்ரிடி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 பேர் கொண்ட குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரை செய்து உள்ளது.
No comments:
Post a Comment