Tuesday, March 9, 2010

ஐ.பி.எல். போட்டியில் சிறிய வகை பேட்டில் ஹைடன் ஆடுகிறார்



சென்னை, மார்ச். 9- 


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன். முன்னாள் தொடக்க வீரரான இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

3-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக அவர் சென்னை வந்துள்ளார். நேற்று தொடங்கிய பயிற்சி முகாமில் பங்கேற்றார். பயிற்சியின் போது அவர் சிறிய வகை பேட்டை பயன்படுத்தினார். ஐ.பி.எல். போட்டியில் ஹைடன் சிறிய வகை பேட்டில் (மட்டை) தான் ஆடுகிறார்.

இந்த பேட்டின் கைப்பிடி நீளமானது. ஆனால் மட்டையின் அளவு சிறிதானது. இந்த வகை பேட் மாங்கூஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பேட்டை தயாரித்த கம்பெனி தனது பெயரை வைத்துள்ளது. மட்டையின் அளவு 33 சதவீதம் கொண்டது. கைப்பிடி 43 சதவீதம் நீளம் கொண்டது.

20 ஓவர் போட்டிக்கான இந்த வகை பேட் தயாரிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த வகை மட்டைக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

விதிப்படி மட்டையின் சராசரி அளவு 38 அங்குலம் (கைப்பிடி சேர்த்து) கொண்டதாக இருக்க வேண்டும். அகலம் 4.25 அங்குலத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலும் அதிக எடை கொண்ட மட்டையைதான் பயன்படுத்தி வருகிறார். முன்னாள் கேப்டன் அசாருதீன் எடை குறைவான பேட்டைதான் பயன்படுத்தி இருக்கிறார். இந்த சிறிய வகை பேட்டை கடந்த 2 மாதமாக ஹைடன் பயன்படுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment