நியூயார்க்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் டாப் -10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ரிலையன்ஸ் பங்குதாரர் அனில் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். பல இந்தியர்கள் கடந்த கால பொருளாதார வீழ்ச்சியினால் பிசினஸ்சில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலக கோடீஸ்வரர்களில் பட்டியலில் இந்தியர்கள் பலர் தங்களது நிலையை இழந்து, ஆசியாவிலேயே இந்தியா நீண்ட காலம் டாப்பில் இருந்து வந்தது மாறி சீனா முன்னுக்கு சென்றுள்ளது என்றும் நியூயார்க் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பணக்காரர்கள் சிலர் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை நிறுவனம் 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு நஷ்டம்: இதில் ஆயில் நிறுவனங்கள் நடத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வரும் முகேஷ் அம்பானி ( 29 பில்லியன் டாலர் ) சொத்து மதிப்பு கொண்ட இவர் 4 வது இடத்தை பிடித்துள்ளார். எஃகு உலகில் கொடிக்கட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் ( 28. 7 பில்லியன் டாலர் ) சொத்து கொண்ட இவர் 5 வது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் கம்னியூகேஷன், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் நடத்திவரும் அனில் அம்பானி கடும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது சொத்தில் 76 சத வீதம் நஷ்டத்தை கண்டுள்ளார். எனவே இவர் இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பபட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கு முதலிடம் : மெக்சிகன் டெலிகாம் கார்லஸ் சிலிம் ஹெலு 53.5 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்சை பின்னுக்கு தள்ளி பலமிக்க மனிதராக உருவெடுத்துள்ளார். பில்கேட்ஸ் தற்போது 2 வது இடத்தையும், வார்ரன் பப்பட் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக கோடீஸ்வரர் பட்டியில் தற்போது பாகிஸ்தானும், பின்லாந்தும் நுழைந்துள்ளது என்பது புதிய தகவல். கடந்த ஆண்டில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட 44 சத வீழ்ச்சியே இந்தியர்களின் நிதி நிலையை ஒரு பதம் பார்த்து விட்டது என்றும் இந்த ஆய்வு விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment