Monday, March 15, 2010

500 சதுர அடி குறைவான இடத்தில் சிறு தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டணம் மாற்றம்: அனைத்து கட்டிடங்களுக்கும் சொத்து வரி மதிப்பீடு

சென்னை, மார்ச். 15-
 
மாநாகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-
 
சொத்து வரி வசூலை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளை விட நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வசூல் ரூ. 375 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
2010-2011-ம் நிதியாண்டில் ரூ. 380 கோடியாக சொத்து வரி வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்டிடங்களையும் சொத்து வரி மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 500 சதுர அடிக்கு குறைவான இடங்களில் சிறுதொழில் செய்வோருக்கு லைசென்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். கூடுதலாக 10 இடங்களில் சொத்து வரி செலுத்தும் மையங்கள் அமைக்கப்படும்.
 
சொத்து வரியினை முறையாக செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், வரி செலுத்த தவறுவோருக்கு அபராதம் விதிக்கவும் சட்ட திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முழு அளவில் சொத்து வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு ரூ. 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment