Monday, March 22, 2010

நாங்கள் உயிருடன் பத்திரமாக இருக்கிறோம்: பிரபாகரன், பொட்டுஅம்மான் தமிழக தலைவருக்கு கடிதம்



நாங்கள் உயிருடன் பத்திரமாக இருக்கிறோம்: பிரபாகரன்
நாங்கள் உயிருடன்
 
 பத்திரமாக இருக்கிறோம்:
 
 பிரபாகரன், பொட்டுஅம்மான்
 
 தமிழக தலைவருக்கு கடிதம்
சென்னை, மார்ச். 22-
 
இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பின்னடைவு ஏற்பட்டது. சிங்கள ராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீசி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
 
மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடலையும் சிங்கள வீரர்கள் முள்ளி வாய்க்காலில் இருந்து எடுத்து வந்து காண்பித்தனர்.
 
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் வேலை செய்த கருணாவும், அந்த உடலை பார்த்து விட்டு, “அது பிரபாகரன் உடல்தான்” என்றார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
 
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடக்கம் முதலே உறுதியாக தெரிய வந்தது. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கலாம் என்று கூறினார்கள். பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் ஒன்றை தற்காலிகமாக தயாரித்துக் கொடுத்த சிங்கள அதிகாரிகளால், பொட்டு அம்மான் விஷயத்தில் அப்படி ஒரு தற்காலிக சான்றிதழைக் கூட கொடுக்க இயலவில்லை.
 
இந்திய உளவு அமைப்பான ராவும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச போலீஸ், பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளது.
 
விடுதலைப்புலி தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு சர்வதேச போலீசின் அறிவிப்பு தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அவர்கள் பொட்டு அம்மான் போரின் கடைசி நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறது.
 
ஆனால் இது சிங்கள உயர் அதிகாரிகள் நடத்தும் நாடகம் என்று உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்களுக்கு புரிந்தது. வழக்கம்போல சிங்கள அதிகாரிகள் தமிழர்கள் மனதை திசை திருப்புவதற்காக நடத்தும் ஒரு உளவியல் யுத்தம் என்பதை புரிந்து கொண்டனர். பொட்டு அம்மான் விஷயத்தில் தாங்கள் பரப்பிய தகவல் எடுபடாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
 
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தளபதிகள் உயிருடன் இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இதற்கிடையே விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்களா? களத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் அதற்கு சாத்தியம் உள்ளதா? சிங்கள பேரினவாதத்தை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்த எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் வல்லமை விடுதலைப்புலிகளிடம் இருப்பதாக சர்வதேச போர் நிபுணர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் சொந்த நாட்டில் எல்லா உரிமையும் பெற்று வாழ கேட்கும் கோரிக்கையை தீவிரவாதம் என்று சிலர் முத்திரை குத்துவதை சாத்வீக முறையில் எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. உலக வரலாற்றில் சொந்த மண்ணில் வாழா விட்டாலும் நாடு கடந்த அரசை உருவாக்கி பல இனம் வெற்றி பெற்றிருப்பது போல, ஒரு முயற்சியை தற்போது விடுதலைப்புலிகள் முன் எடுத்துள்ளனர்.
 
அதாவது நாடு கடந்த ஈழ அரசை விடுதலைப்புலிகள் உருவாக்கி வருகிறார்கள். இதற்கான நடடிவக்கைகளில் விடுதலைப்புலிகளின் சர்வ தேச பிரிவு ஈடுபட்டுள்ளது.
 
நாடு கடந்த ஈழ அரசுக்காக வரும் மே மாதம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, நார்வே, தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், நியூசிலாந்து, சுவீடன், பின்லாந்து, மற்றும் அயர்லாந்து ஆகிய 16 நாடு
களில் இந்த வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
 
வாக்கெடுப்பு முடிந்த பிறகு 115 ஈழ பாராமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுக்க இந்த 115 எம்.பி.க்களும் சேவை செய்வார்கள்.
 
இதன் மூலம் தமிழ் ஈழ அரசு உலக அளவில் ஒரு தன்னாட்சி பெற்ற நாடு போல செயல்படும். மற்ற நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஈழ அரசு அமையும்.

No comments:

Post a Comment