Wednesday, March 10, 2010

வெள்ளிக்கிழமை ஐ.பி.எல். போட்டி கோலாகல தொடக்க விழா; தீபிகா படுகோனே நடனம், பாப் இசை நிகழ்ச்சி நடக்கிறது


மும்பை, மார்ச். 10-
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது.
 
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் லெவன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
போட்டிகள் மும்பை, மொகாலி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, கட்டாக், நாக்பூர், ஜெய்ப்பூர் தர்ம சாலா ஆகிய இடங்களில் நடக்கிறது.
 
போட்டி தொடக்க விழா வெள்ளிக்கிழமை மும்பை மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மும்பை பிரபல சினிமா நட்சத்திரங்கள், பிரபல நபர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
 
நடிகை தீபிகாபடுகோனே வின் நடனம், லியோனல் ரிக்கி, அப்பா ரெவிவல் யூ.பி.40 இசைக்குழு ஆகியவற்றின் பாப் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
 
வானவேடிக்கை, வண்ண லேசர் ஒளிக்காட்சி போன் றவையும் இதில் இடம் பெறுகின்றன.
 
தொடக்க விழா மிக கோலாகலமாக கண்ணை கவரும் வகையில் நடைபெறும் என்று ஐ.பி.எல். போட்டி சேர்மன் லலித்மோடி கூறினார்.
 
தொடக்க விழா முடிந்ததும் ஐ.பி.எல். முதல் போட்டி நடைபெறும். இதில் டெக்கான் சார்ஜர்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். மறுநாளில் இருந்து 2 போட்டிகள் நடக்கும்.

No comments:

Post a Comment