Monday, March 15, 2010

துபாய் ஓட்டலில் முத்தமிட்ட ஜோடிக்கு 1 மாதம் ஜெயில்

துபாய், மார்ச்.15-
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காதல்ஜோடி அய்மன் நஜாபி (வயது 24), ஜார்லோட் (25). இவர்களில் அய்மன்நஜாபி துபாயில் வியாபார ஆலோசகராக வேலை பார்த்து வந்தார். ஜார்லோட் லண்டனில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
 
காதலரை பார்க்க ஜார்லோட் துபாய் வந்திருந்தார். இருவரும் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். இதை பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். போலீசிலும் புகார் கொடுத்தார்.
 
அந்த நாட்டு சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வது குற்றமாகும். எனவே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
இதுதொடர்பாக வழக்கு நடந்தது. இருவருக்கும் 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள். இதை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment