Monday, March 22, 2010

கொண்டாடலாம் வாங்க


1993 ம் ஆண்டு தொடங்கி இந்த நாளை உலக தண்ணீர் தினமாக கொண்டாடிவருகிறோம். இந்த ஆண்டு வாசகமாக  "சுத்தமான நீர் சுகாதார வாழ்வு" என அறிவித்துள்ளது. அவரவர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள் என்பது அறிந்த ஒன்றே! அனால் அதையும் மீறி செய்யவேண்டியது நீரை மாசுபடாமல் காப்பது. ஆங்காங்கே நடக்கும் விழிப்புணர்வுகள் எதோ ஒரு நிகழ்ச்சியாக நினைக்க வேண்டாம் உண்மையில் இது ஒரு கொண்டாட்டமே. வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுவைத்துப்போகும் ஒரு சொத்திற்கு நாம் கட்டாயம் கொண்டாடவேண்டும். 

சில கொண்டாட்ட வழிகளை பார்ப்போம்.


உங்கள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பயன்பாட்டை ஒரு வாரத்திற்கு நன்கொடையாக கொடுக்கலாம். உங்கள் கணக்கிற்கு எந்த ஆபத்தும் வராது, இதன் மூலம் ஒரு வாரத்திற்கு தானாக டிவிட்டுகள் உங்கள் பக்கத்தில் தோன்றும். உங்கள் நண்பர்கள் அவர்களின் மூலம் பலர் என ஒரு இணைய சமுகத்தை அந்த விழிப்புணர்வு டிவிட்டுகள் போய் சேரும். .
http://oneweekforwater.org/countdown/
இந்த ஒரு வாரம் மார்ச் 22 முதல் 26 வரை 2010.
எந்த நேரத்திலும் நீங்கள் அதைவிட்டு ரிவோக் பட்டன் மூலம் வெளிவரமுடியும்
அதிகமாக பிரியப்படுபவர்கள் இங்கும் செல்லலாம் http://rt.water.org/  ஒரு மாத நன்கொடைகளும் கொடுக்கலாம்.




இணையத்தில அடுத்து உள்ள முக்கியமான சேவை தளம் பெட்டிஷன்ஆன்லைன். இந்த தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை காப்போம் எனற ஒரு பெட்டிஷனை வடிவமைத்துள்ளனர். 
http://www.thepetitionsite.com/takeaction/997220151
இந்த பெட்டிஷனில் நாமும் பதிவு செய்து நாமும் ஒரு உறுதிமொழி எடுப்போம். இதுவரை பலர் கையெழுத்திட தொடங்கிவிட்டனர். 


தண்ணீர் பற்றி பல தகவல் தளங்களை ஐ.நா. திரட்டியுள்ளது அதன் தொகுப்பு இங்குள்ளது.
http://www.unesco.org/water/water_links/


உங்கள் பகுதியில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள் மற்றவருக்கும் சொல்லுங்கள். சார்வதேச அளவில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு இந்தாண்டின் தண்ணீர் தின அதிகாரத் தளத்தில் வெளியிட்டுள்ளனர் http://www.unwater.org/worldwaterday/events.html
இங்கும் கொஞ்சம் உலவினால் உங்களுக்கு புண்ணியம் கிட்டும். கட்டாயம் படிக்கவேண்டிய பக்கம் http://www.unwater.org/worldwaterday/faqs.html




தண்ணீர் தொடர்பாக ஏதேனும் பொருள் உதவி செய்யவிளைவோர் இங்கு செல்லலாம் 
http://www.waterconserve.org/shared/donate/
http://waterforlifeintl.org/water_for_life_international_donate.htm
http://www.globalgiving.org/projects/help-save-drinking-water-in-morocco/
கிழக்காப்பிரிக்க பகுதி சேவையமைப்பு http://watercan.com/whatyoucando/index.htm தண்ணீர் பிரச்சனைக்காக உதவும் அமைப்பு


சரி எங்கெல்லாமோ சுற்றிவிட்டோம்  நமது தமிழ் பதிவர்கள் எடுத்தமுயற்சியையும் ஒரு முறைகண்டு விடுங்கள். நண்பர் வின்சென்ட் அழைத்த அழைப்பின் கீழும் அபார ஆதரவினாலும் நம்மவர்களும் எழுதியுள்ளனர். தண்ணீர் தினம் தொடர்பாக உள்ள தமிழ் இடுகைகளை கூகிள் பிளாக் தேடல் செய்தியோடை வழியாக திரட்டப்பட்டுள்ள அந்த இடுகைகள் இங்கே உள்ளன 
http://www.google.com/reader/shared/neechalkaran இங்கும் உலவுங்கள்.

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment