வெலிங்டன், மார்ச். 9-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒரு நாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது.
நேப்பியரில் நடந்த முதல் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கும், நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜான்சன் நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக அவர் தடையில் இருந்து தப்பினார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை முட்டாள்கள் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஜான்ரீட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொதுவாக ஆஸ்திரேலிய அணியை பார்க்கும் போது நல்லவர்களாக தெரியும். ஆனால் அந்த அணியில் உள்ள வீரர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் முட்டாள்தனமாக இருக்கும். அவர்களுக்கு கடிவாளம் தேவை. அவர்கள் தங்கள் பேட்டால், பந்து வீச்சாலும் தான் பதில் அளிக்க வேண்டும். வாயால் இல்லை.
வீரர்களை உசுப்பேற்றி மோசமாக கிண்டல் (சிலெட்ஜிங்) செய்வது ஆஸ்திரேலிய அணிக்கு வாடிக்கையானது. நான் ஆடிய காலத்தில் மெக்ராத் அப்படி நடந்து கொண்டார். இவ்வாறு ஜான்ரீட் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment