Wednesday, March 31, 2010

வெப்சைட் பி.டி.எப். பைலாக

பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா?

ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது.

இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும்.

அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.

மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1

பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2

மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3

பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4

இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.

உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திடhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

பென் டார்ச் பேட்டரியில் மொபைல்


மொபைல் பயன்படுத்தும் நம்மிடையே இருக்கும் ஒரு பெரிய பிரச்னை, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போய், பயன்படுத்த முடியாமல் இருப்பதுதான்.


இந்தக் குறையை நீக்கும் வகையில், இந்தியாவில் முதன் முதலாக பென் டார்ச் பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆலிவ் ஸிப் புக்ஸ் என்ற பெயரில் 3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வெளியிட்ட ஆலிவ் டெலி கம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனம் இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.


Olive FrvrOn(ஆலிவ் பார் எவர் ஆன் வி–ஜி2300) என்ற பெயரில் வந்துள்ள இந்த போன் விலை ரூ. 1,699 எனக் குறியிடப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியுடன், பென் (சில்) டார்ச் செல்லிலிருந்தும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதனால் நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கலாம். தகவல் தொடர்பு பிரிவில் மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு எளிய தீர்வுகளைக் காண்பதே எங்கள் இலக்கு என்ற இலட்சியத்துடன் இயங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அதற்கேற்பவே இந்த மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த போன் AAA பேட்டரிகளில் இயங்குகிறது.

இந்த போனுடன் தரப்படும் லித்தியம் அயன் பேட்டரி பவர் இல்லை என்று உணரப்படுகையில், கையில் கிடைக்கும் AAA பேட்டரியைச் செருகிவிட்டு ஒருவர் போனைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

இந்த போனின் மற்ற வசதிகள்: 1.5 அங்குல வண்ணத்திரை, பாலிபோனிக் ரிங்டோன், எந்தAAA பேட்டரியையும் பயன்படுத்தும் வசதி,ஸ்டீரியோ ஹேண்ட்செட், எப்.எம். ரேடியோ, ஸ்பீக்கர் போன் ஆகியவை ஆகும்.

இது மிகச்சிறிய போனாக அதிகம் எடையற்ற மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சற்று உயர்ந்த நிலையில் உள்ள ரப்பர் கீகள் டெக்ஸ்ட் அமைப்பதில் உதவுகின்றன. 1.5 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரை பளிச்சென, பார்க்க எரிச்சல் தராமல் காட்சி அளிக்கிறது. சார்ஜ் செய்வதற்கும், ஹேண்ட்ஸ் பிரீ செட் இணைப் பதற்கும் போர்ட் கீழ் அடிப்பாகத்தில் தரப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஒரே மீடியா விஷயம் எப்.எம். ரேடியோ மட்டுமே. ஆனால் பென்டார்ச் பேட்டரியில் பவர் எடுத்து மொபைல் இயங்குகையில் ரேடியோ செயல்படுவது தடுக்கப்படுகிறது. ஆனால் ரேடியோ மிகச் சிறப்பாக அனைத்து அலைவரிசைகளையும் துல்லியமாக பிக் அப் செய்கிறது.அடிப்படையான அலாரம் கிளாக், கால்குலேட்டர், டைம் ஸோன் மற்றும் ஸ்டாப் வாட்ச் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இந்த போனின் பேட்டரிதான் அதிசயத்தக்க ஒன்றாகும். வெறும் 600mAh திறன் உள்ள பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. அதிகபட்சம் இதனைப் பயன்படுத்தி 2 மணி நேரம் மட்டுமே பேச முடியும். இது சரியில்லை.

எனவே தான் இதற்குத் தொடர்ந்து சக்தி அளிக்க பென்சில் பேட்டரி இணைப்பு தரப்பட்டுள்ளது. எந்த ஒரு மூலைக் கடையிலும் இதனை வாங்கி இணைத்துக் கொள்ளலாம். இதன் குறியீட்டு விலை ரூ.1,699 மட்டுமே

Tuesday, March 30, 2010

தற்போதைய செய்தி 'பிக் பாங்' சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?


ஜெனீவா :  பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .

சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

சென்னை:  ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன?
கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்து தோற்றது. இரண்டாம் ஆண்டு அரையிறுதி வரை எட்டி பார்த்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி, இம்முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தோனி பிரச்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ்சை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டக்கார கேப்டன், தொட்டது துலங்கும் என்று வர்ணிக்கப்பட்ட தோனி தான் இப்போது பிரச்னைக்கு காரணமாக தெரிகிறார். சென்னை அணியின் தற்போதைய செயல்பாடு குறித்து அடையாளம் காட்ட விரும்பாத இளம்வீரர் ஒருவர், சொன்னது இதுதான்:
தோனியின் தன்னிச்சையான செயல்பாடும், யாருக்கும் கட்டுப்படாத அவரது நடவடிக்கை பற்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், அணி உரிமையாளர்களிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. முறையாக பயற்சிக்கு வருவதில்லை என புகார்கள் முணுமுணுக்கப்பட்டு வருகின்றன. அணியில் உள்ள தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. ரஞ்சியில் சாதித்த கணபதி சிறந்த ஆல்-ரவுண்டர், அனிருத் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை.
அணியில் உள்ள மூத்த வீரர்களான ஹைடன், முரளிதரன், மார்க்கல் ஆகியோரை சரிவரநடத்துவது இல்லை. டிரசிங் ரூமில் கூட ஆலோசனை செய்வது இல்லை. ஆட்டத்தின் போது, பயிற்சியாளர் பிளம்மிங், 12வது ஆட்டக்காரர் மூலம் சொல்லி அனுப்பும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பதில்லை என குற்றச்சாட்டுகள் தோனியின் மீது அடுக்கப்படுகின்றன.
இந்தாண்டுடன் வீரர்களுக்கான ஏல உரிமை முடிகிறது. அடுத்தாண்டு சீசனுக்கு இப்போதே அவர் மற்றொரு அணிக்கு பேசப்பட்டுவிட்டதால் ஜகா வாங்குவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்னும் இருக்கும் ஏழு ஆட்டங்களில் 6ல் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் சென்னை அணி உள்ளது. மற்ற ஏழு அணியின் உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் புதிது. சென்னை அணியை நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்திற்கு 50 ஆண்டுகள் கிரிக்கெட் நடத்திய அனுபவம் இருந்தும் திணறுவது ஏன் என்று தெரியவில்லை. குறிப்பாக சென்னையில் நடக்கும் ஆட்டங்களிலாவது சென்னை அணி சிறப்பாக விளையாடுவதற்கு அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

லாபம் அமோகம்
ஐ.பி.எல்., அமைப்பில் அங்கம் வகிக்கும் அணி உரிமையாளர்களுக்கு, "டிவி' ஒளிபரப்பு உரிமையின் மூலம் அவர்கள் போட்ட முதலீடுக்கு மேல் லாபம் கிடைத்து விட்டது. மூன்றாண்டுகளில் கிடைத்த வருமானத்தை கணக்கு காட்டி, பங்குச்சந்தையில் பட்டியலிடலாமா என்ற ரீதியில் சென்னை, பஞ்சாப் அணிகள் கணக்குபோடத்துவங்கிவிட்டன. இதனால், அணியில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

வெளிநாடு முன்னுரிமைஐ.பி.எல்., போட்டி பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, கிரிக்கெட் போர்டில் உள்ள பிரகஸ்பதிகள், "இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரத்தான்' என்று குரல் எழுப்பினர். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியிலும் சேர்த்தால் தான் கூட்டத்தை கொண்டுவர முடியும் என்ற நிலை உருவானது.

தொழில்நுட்பப் பதிவர்களே உங்களால் முடியுமா?

◊ கணினியில் அழித்த பதிவை ரிசைக்கிள்பின்னில் எடுக்கிறோம். சிப்ட் அழுத்தி அழித்த பதிவை ரெக்கவரி மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்.

◊ பென்டிரைவில் அழித்த பதிவைக் கூட மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்..

◊ நெட்வொர்க்கில் அழிந்த பதிவை இப்படி மீட்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா?

◊ “நண்பர் ஒருவர் மிகவும் தேவையான கோப்புகள் அடங்கிய பெரிய கோப்பை (போல்டரை) நெட்வொர்க்கில் வைத்து அழித்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற அவரின் துன்பம் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது“ இதில் சிக்கல் என்னவென்றால் கோப்பு அழிந்த கணினி “லினெக்சு“ இயங்குதளத்தில் இயங்குவதாகும். எதிர்பாராத நிலையில் தானே அந்தக் கோப்பை அழித்திருக்கிறார்.

◊ நெட்வொர்க்கில் அழிந்த கோப்பை மீட்க வழி உண்டா?
என கணினி வல்லுநர்களிடம் கேட்டால்..


◊ சிலர் சொல்கிறார்கள்…
ம் இருக்கிறது சில மென்பொருள்கள் இருக்கின்றன…. தேடிப்பார்க்கவேண்டும் என்று.

◊ சிலர் சொல்கிறார்கள் நெட்வொர்க்கில் அழிந்த மென்பொருளை மீட்பது என்பது இயலாதவொன்று. சக்தி வாய்ந்த ரெக்கவரி மென்பொருள்கொண்டு முயற்சித்தால் ஒருவேளை கணினியில் வன்வட்டில் (ஹார்டிஸ்கில்) இருந்தால் மீட்கலாம் என்று சொல்கிறார்கள்.

◊ ஒருபொருளை கீழே போட்டால் உடைந்துபோனாலும் புவியீர்ப்பு காரணமாக கீழே தான் கிடக்கும். ( கணினியில் ஒரு கோப்பை அழித்துவிட்டால் ரிசைக்கிள் பின்னில் தான் இருக்கும். அங்கும் இல்லையென்றால் வன்வட்டில் இருக்கும்.)

◊ ஒருபொருளைக் கடலில் போட்டால் கூடத் தேடிக்கண்டுபிடித்துவிடலாம். ( பென்டிரைவில் தொலைத்த கோப்புகளை மீட்பதற்குக் கூட மென்பொருள்கள் வழக்கில் உள்ளன.)

◊ அண்டவெளியில் ஒருபொருளைத் தூக்கி எறிந்தால், அப்பொருள் எங்காவது எப்போதாவது போய் விழும். இல்லாவிட்டால் ஈர்ப்புவிசை இல்லாததால் உயரத்திலேயே மிதந்து கொண்டிருக்கும். (நெட்வொர்க்கில் அழித்த, அழிந்த கோப்பும் அப்படித்தானே. அந்தத் தரவுமட்டும் எங்கு சென்றுவிடும். அதனை ஏன் மீட்க முடியாது? )


◊ தமிழ்த்துறை சார்ந்த நான் அழிந்த வேர்டு, பவர்பாய்ண்ட், எக்சல், மற்றும் ஒலி, ஒளிக் கோப்புகளை ரெக்கவரி மென்பொருள்கள் கொண்டு மீட்டிருக்கிறேன்.

◊ திறக்கமறுத்துப் பழுதுபட்டுப்போன வேர்டு போன்ற கோப்புகளை மென்பொருள் துணைகொண்டு பழைய நிலைக்குக் கொண்ட வந்திருக்கிறேன்..

இப்படி கணிதுறையல்லாத எனக்கே இவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றன..

தொழில்நுட்பப் பதிவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..

◊ நெட்வொர்க்கில் தொலைத்த கோப்புகளை மீட்கும் வழி என்ன?
மீட்க மென்பொருள்கள் இருக்கின்றனவா? (முகவரி?)

◊ உங்கள் கணினியில்,
பென்டிரைவில்
நெட்வொர்க்கில் கோப்புகள் அழிந்தபோது என்ன மென்பொருளை, வழிமுறையைப் பின்பற்றினீர்கள்?

இளவரசி டயானா கொல்லப்பட்டார்: இங்கிலாந்து வக்கீல் தகவல்


லண்டன், மார்ச். 30-
இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் டயானாவும், டோனியும் உயிரிழந்தனர்.



கடந்த 1997-ம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. டயானா இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மரணம் குறித்த சர்ச்சை ஓயவில்லை. அவ்வப்போது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன

தற்போது, இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித் துள்ளார்.
டயானா- டோனி அல்பயத் ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய விபத்தின் மூலம் அவர்கள் இருவரையும் பிரிக்க சதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் வக்கீல் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Monday, March 29, 2010

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்



திண்டுக்கல் : நகைத் தொழிலாளியை திருமணம் செய்த பெண், கணவரின் தூண்டுதலால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'டெபுடி கலெக்டராக' பயிற்சி பெற்று வருகிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி முத்துசாமியின் மகள் துர்காதேவி. ஏழ்மை நிலையிலும் பி.எஸ்சி., படித்த இவருக்கும், அரவக்குறிச்சியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த நகைத் தொழிலாளி திருமூர்த்திக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத துர்காதேவி ஆசைப்பட்ட போது, கணவர் திருமூர்த்தி, மனைவிக்கு ஊக்கம் அளித்தார். குழந்தை பிறந்ததால் உடனடியாக படிப்பை துவங்க முடியவில்லை. குழந்தை சிறிது வளர்ந்த நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் படிக்க ஆரம்பித்தார். மனைவிக்கு எந்த பிரச்னையும் வராத அளவு, குழந்தையை வளர்ப்பது உட்பட அத்தனை பொறுப்புகளையும் திருமூர்த்தி ஏற்றுக் கொண்டார். மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியடைந்த துர்காதேவி, 2006-07ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் டெபுடி கலெக்டராக பயிற்சி பெற்று வருகிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது:நான் படித்து டெபுடி கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன். அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார். தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும் விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம் எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன். வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு துர்காதேவி கூறினார்.

வீட்டு மின்சார அளவுகள்

வீட்டு மின்சார அளவுகள்

  • 1000watts என்பது 1kwatts ஆகும்(1000watts=1unit).

  • ஒரு மணி நேரத்திற்கு நாம் 1kwh(1000watts) பயன்படுத்தினோம் என்றால் அது 1unit ஆகும்.


1kwtts*1hours=1unit


1wh=1watt*1hour


1wh=1watt*3600sec


1wh=3600watt-sec iceJ


AND


1kwh=1000wh


1kwh=1*10^3*3600J


1kwh=3.6*10^6J

  • பொதுவாகவே electrical energy - யை  அளப்பதற்கு watts-sec என்ற unit small ஆக இருப்பதால் அதனை பெரிதாக அளக்க watt-hour மற்றும் kilowatt-hour என்ற யூனிட்டை பயன்படுத்தலாம்.
------------------------------------------------------------------------------

  • கேள்வி: 40 வாட்சை எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ?
விடை:


1kwatt*1hours=1unit


40watt*25hour=1unit


OR


1000/25=40watts

  • 40 வாட்சை 25 மணி நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ஆகும்.


இதேபோல்:


80 வாட்ச்சுக்கு 12 .5 மணி நேரம் ஆகும்.
(80watts*12.5hour=1unit)


60 வாட்ச்சுக்கு 16 .7 மணி நேரம் ஆகும்.
(60watts*16.7hour=1unit)
-----------------------------------------------------------------------

  • ஒரு வீட்டில் 40watts,60watts,80watts,600watts பயன்படுத்தினால்


முன்சொன்னதைபோல்


40 -க்கு 25 மணி நேரம் =1unit (1000watts)(1 k watts )


60 -க்கு 16.7 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)


80 -க்கு 12..5 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)


600 -க்கு 1.67 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)


மொத்த நேரம் = 55.87


மொத்த வாட்ஸ் = 4000 வாட்ஸ் (4 unit)


ஒரு நாள் = 24 மணி நேரம்


55.87/24=2.3 நாள்


4000 வாட்சை நாம் 2. 3 நாள் பயன்படுத்துகிறோம்

  • 2 மாதத்திற்கு சேர்த்து (64 நாள்) 256000 watts பயன்படுத்துகிறோம்
(ஒரு நாளைக்கு 4000watts பயன்படுத்துகிறோம் என்றால் 64 நாட்களுக்கு 256000 watts பயன்படுகின்றது )


256000 வாட்ஸ் என்பது =256 unit ஆகும்.
-----------------------------------------------------------------------------

  • பொதுவாக ஒரு யூனிட்டுக்கு 80 பைசா என்று வைத்தால் 256 யூனிட்டுக்கு 204.8 ரூபாய் ஆகும்.

  • இதுபடி நாம் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை 204.8 ரூபாய்  E.B -யில் கட்டுகிறோம்.

  • இதுபோல் நாம் வீடுகளில் பயன்படுத்தும் வாட்ச்களை பொறுத்து எவ்வளவு ரூபாய்


வரும் என்பதை நாமே கண்டுபிக்கலாம்.

  • இதை அறிந்து செயல்படுவதன் மூலம் மின்சாரத்தை நம்மால் முடிந்தவரை சேமிக்கலாம்.

Software Engineer



திங்கள் காலை
எட்டுமணிக்கு தொடங்கும்
கணிப்பொறியுடனான
எனது யுத்தம்..


மதியம் உணவு
இடைவேளை
வருவதற்குள் Error, Bug
என்று எதிரிகள்
பலரை வீழ்த்தவேண்டியது
என் பணியாக இருக்கும்..


உணவை முடித்து விட்டு
திரும்பினால்,
சொல்லாமல் வந்துவிடுகிற
விருந்தாளியாய் PM- ன்
இமெயில் கண்சிமிட்டும்,
அடுத்த யுத்தத்திற்கு என்னை
தயாராக சொல்லி..


இடையில் அவ்வப்போது
காதலியின் துப்பட்டாவாக
மனதை வருடிப்போகும் சில
fwd இமெயில்கள்..


மாலை நான்கு மணிக்கு
Discussion முடிந்து
என் இடம் வரும்போது
மனம் ஏங்கும்
வெள்ளிக்கிழமைக்காக..
கோவில் செல்ல அல்ல,
வாரத்தின் கடைசி
வேலைநாள் என்பதால்..


உயிர் வலிக்க
‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware Engineer

Thursday, March 25, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள் 'கேஷ் பேக்' (Cash back)

'கேஷ் பேக்' (Cash back) கிரடிட் கார்ட் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் 5 ரூபாய் நமக்கு திருப்பி கொடுப்பார்கள். அதனால் பெரும்பாலும் 'கேஷ் பேக்' வாங்க விரும்புவார்கள். இன்னும் விழாக்காலங்களில் ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் கிரடிட் கார்ட் பயன்படுத்த பல சலுகைகள் எல்லாம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதில் எத்தனையோ நிபந்தனைகள் எல்லாம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் பொருளை வாங்குவார்கள். எந்த லாபமும் இல்லாமல் வங்கிகள் 30% cash back என்று விளம்பரம் செய்யாது. அந்த விளம்பரத்தை கவனித்தால் அதில் கூட Condition Apply என்று இருக்கும்.



இதிலும் கன்டிஷனா...? ஆமாம். அப்படி என்ன கன்டிஷன் ? அதை மிக சின்ன எழுத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பரும்பாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு அந்த விளம்பரத்தில் 30,000 ரூபாய் மேல் வாங்கினால் தான் 30% தள்ளுபடி கொடுப்போம் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்....?

'கேஷ் பேக்' கிரடிட் கார்ட் நடக்கும் நம் கண்ணுக்கு தெரியாத சில நிபந்தனைகள் இப்படி தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் வங்கிகள் அதிகபட்சம் தன் லாபத்தில் இருந்து 5% சதவீதம் 'கேஷ் பேக்'காக கொடுக்கலாம். 30%,50%.... இன்னும் சில கிரடிட் கார்ட் 100% (cash back) என்று சொன்னால் நிச்சயமாக சில நிபந்தனைகள் இருக்கும். கவனமாக பார்க்கவும்.

'கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஆயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஆயிலை ICICI அல்லது HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், டெக்கான் எர்வேஸ்யில் வாங்கினால் அந்த சலுகை கிடைக்காது. பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது 'கேஷ் பேக்' அல்லது 'தள்ளுபடி' தான். Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.


அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.


இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை

கதை சொல்லியின் கதையை இன்னும் ஆயிரம் முறை சொன்னாலும் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான நினைவுப் படிமங்கள் மேலெழுந்து வருகிறது.

மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்.அப்போதிலிருந்தே நாங்கள் தயாராகிவிடுவோம் கதைகேட்க.ஆமாம் எங்களுக்கான கதை

பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும்   பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக்   கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து  கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்.இருந்தாலும் வார்த்தைகளே சித்திரமாய்,காட்சியாய் விவரிக்கிற லாவகம் வழி வழியாய் ஒரே மாதிரி இருக்கும்.அதன்பிறகு இன்றுவரை சுண்டி இழுக்கும் கதை சொல்லிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது.நடு இரவில் கயா நகரத்து புகை வண்டி நிலையத்தில் இறங்கும்போது படுத்துக்கிடந்த நெல்லறுக்கும் ஆயிரக்கணக்கான கூலிக்கார பீகாரிகளைப் பார்த்தோம். அந்தக்குளிரிரவை கண்ணீர் உஷ்ணமாக்கியதை என் தோழன் மாதுவிடம் கூட மறைத்து விட்டேன்.காட்சியாகப் பதிவு செய்யமுடியாத அந்த அமானுஷ்ய இரவுச் சித்திரம் நினைவுகளின் மூலைக்குள் கிடந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறது. நடு இரவு வரை நீளும் கதைகளுக்கு காதைக் கொடுத்தபடி எங்களோடு வானத்திலிருக்கும் நட்சத்திரங்களும் முழித்துக்கிடக்கும். ஊங்கொட்டுகிற கடைசி ஆளாய் பலசமயம் நானிருப்பேன்.அந்தக் கதைகளை எல்லாம்  எப்படியும் ஊருக்குச்

சொல்லாமல் போவதில்லை.அதற்கான முயற்சியோடு அவற்றை பாதாளக்கரண்டி போட்டுத் துழாவிக்கொண்டே இருக்கிறேன்.தட்டுப்படுகிறவை தேடுதல் வேட்டையில் குறிவைக்காத வேறு வேறு கதைகளாகி எனது எழுத்தாகிறது.இன்னும் முழுக்கதையும் கிடைக்கவில்லை செல்லரித்த பழய்ய கருப்புவெள்ளை நிழற்படம்போல திட்டுத் திட்டாய் மட்டுமே கைக்குக் கிடைக்கிறது.

அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள் என்று தங்களை உடனுக்குடன் உருவம் மாற்றிக்கொள்ளும் கதைமாந்தர்களாய் பாட்டிமார்களின் வார்த்தையிலிருந்து கிளம்புவார்கள். நல்லதங்காள் கதை சொல்லும்போது எல்லாக் கதை சொல்லிகளும் நிச்சயமாய் அழுதுவிடுவார்கள். அதற்கான காரணம் கவசகுண்டலமாக அவர்களோடு ஒட்டிப்பிறந்த வறுமையும்,சகோதர பாசமும் என்பதை ஒரு கால் நூற்றாண்டு கழித்துத் தான் தெரிய நேர்ந்தது.கதை சொல்லிகள் அழுத பின்னாள் கதைகேட்பவர்கள் கதி என்னாகும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாக விட்டுவிடு நான் மட்டும் பிழைத்துக்கொள்கிறேன் அம்மா என்று மனசு கிடந்து கதறும்.


வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்

திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்.

காத்திருந்த ஊர்ச்சனம் 'கதையக்கெடுத்த குடிகாரப்பாவி' என்று திட்டவும் ரோசப்பட்டுப்போய் சம்மணம்போட்டு உட்கார்ந்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார். "அண்ணம் மாரே தம்பி மாரே அருமையுள்ள அக்கா மாரே மன்ன மணிக்குறவன் மாண்ட கதையச் சொல்லி  வாரன்  மக்களப்போல நினச்சு மண்ணிக்க வேணும் பிழ பொறுத்து" பத்துக்கட்டையில் பாடும் சுதிக்குத் துணையாக ராசாச்சித்தப்பா மாட்டுச்சவ்வு கட்டிய பானைத் தாளத்தைக்கொண்டு வந்துவிடுவார் அன்று உடனடி சிவராத்திரிதான்.விடிய விடிய நடக்கிற ஜுகல் பந்தியில் பார்வையாளரும் பாடகராவார்கள்.கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ என்று பாடிக்கொண்டே கல்லுடைக்கும் பகாரி மாமன் அழுதுவிடுவார். இத்தனைக்கும் சாகுமட்டும் அவர் கடல் பார்த்ததில்லை.அந்த இறுக்கம் தீர பாம்பாட்டிக்காளியப்பன் 'காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானே ஊமத்தொற' என்று பாடுவார்.ஏய் மணிக்குரவங் கதையில ஊமத்தொறைக்கு என்ன சோலி,குடிச்ச போதை கொறயலயா  என்று கஞ்சிரா அடிக்கும் மாடசாமிச்சித்தப்பா கேட்டதும். 'வாய்யா வாத்தியாரு', மூனு மணி நேரமா தொண்ட கிழியக்கத்துறனே வெல்லக்கட்டி,காபிந்தூளு இல்லாமலா போச்சி இந்த சூரங்குடியில" என்று கேட்கவும் ஆவிபறக்க சுக்குக்காப்பி கூட்டத்துக்குள் வரும்.


நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு

கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு. 

காப்பித்தண்ணி குடித்துவிட்டு பீடி பத்தவைத்து  "எலே சுந்தரப்பா கொனத்துலயு தங்கக்கொனம் அல்லிலே லேலோ ன்னு  படிக்கம்போது கூட்டத்தப் பாத்து பயந்து பயந்து படிக்கியே எதுக்கப்பா" இப்படிச் சொல்லவும் கூட்டம் கெக்கெக்கே என்று ஒரே சுதியில் சிரிக்கும்." ஏ மாமா ஓங்கதைய எங்காகிட்டக் கேக்கனும் நீ வந்து ஊர்க்கத பேசுறயா" என்று கூட்டத்துக் குள்ளிருந்து பதில் வரும்.இப்படிச் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிச் சிரித்து கதைகளுக்கு இடைவேளை விடுவார்கள்.

Wednesday, March 24, 2010

சென்னையில் தண்ணீர் பாக்கெட்டுக்கு விரைவில் தடை மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மார்ச். 23-
 
சென்னையில் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. சென்னைக்கு தினமும் சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் தாகம் தணிப்பதற்காக கடைகளில் விற்கப் படும் தண்ணீர் பாக்கெட்டுகளையே வாங்குகிறார்கள். தினமும் சுமார் 5 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. இப்போது கோடை காலம் வந்து விட்டதால் தண்ணீர் பாக்கெட் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.
 
இதனால் தண்ணீர் பாக்கெட் தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். குடிசை தொழில்போல் வீடுகளிலேயே பலர் தயாரித்து வருகிறார்கள்.
 
போலியாக ஐ எஸ் ஐ முத்திரை பதித்த பாக்கெட்டுகளை தயாரித்து அதில் தண்ணீர் அடைத்து விற்கிறார்கள். கிணறுகளில் உள்ள தண்ணீரை பிடித்து சுத்திகரிக்காமலேயே மினரல் வாட்டர் போல் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று வருகிறார்கள்.
 
100 பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை தண்ணீரின் மொத்த விலை ரூ.35 முதல் 40 வரை விற்கப்படுகிறது. அதை சில்லறை கடைகாரர்கள் ரூ.150-க்கு விற்கிறார்கள்.
 
இவ்வளவு குறைந்த விலைக்கு சுத்தமான குடிநீர் தயாரித்து வழங்க முடியாது. கவர் பிரிண்டிங், தண்ணீரை பாக்கெட்டில் அடைப்பது, கடைகளுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை கணக்கீட்டால் ஒரு மூட்டை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.40-க்கு விற்க முடியாது என்பது தெரியவரும்.
 
சுகாதார மற்ற தண்ணீர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. எனவே தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார். பல பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.
 
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாக்கெட் தண்ணீர் சுகாதாரமில்லாமல் தயாரிப்பது தெரிய வந்தது. 13 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
 
சிறிய எந்திரங்களை வைத்தே தயாரிப்பதால் அதிகாரிகள் சீல் வைத்தாலும் வேறு வீடுகளில் வைத்து மீண்டும் தொழிலை தொடங்கி விடுகிறார்கள்.
 
கடந்த 3 மாதங்களில் மட்டும் சுகாதாரமற்ற 1 லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
 
தினமும் லட்சக்கணக்கில் குடிநீர் பாக்கெட்டுகள் கழிவுகளாக சேருவதால் சாக்கடை ஓடைகளில் ஏற்படும் அடைப்புக்கும் தண்ணீர் பாக்கெட் முக்கியமாக இருக்கிறது.
 
உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதோடு கழிவு நீர் வெளியேறவும் இடையூறாக உள்ளது. எனவே குடிநீர் பாக்கெட் விற்பனையை தடை செய்வது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உணவு பொருள் விநியோகித்தல் ஆகிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்று தெரிகிறது.
 
இது தொடர்பாக மேயர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது கூறியதாவது:-
 
தண்ணீர் பாக்கெட்டுகள் சுகாதாரமில்லாமல் விநியோகிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 23, 2010

ஐ.பி.எல்., மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடி!

மும்பை: ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியாக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் நிறுவன மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்சின் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 220 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு கடந்த 2008ல் துவங்கப்பட்டது. இதன் நிறுவன மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஆண்டை காட்டிலும் ஐ.பி.எல்., அமைப்பின் மதிப்பு இரு மடங்காக உயர்ந்து, 18 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை முதலிடம்:  சென்ன சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நிறுவன மதிப்பீட்டு பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த அணியின் மதிப்பு அதிகபட்சமாக 220 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடம்(ரூ. 210 கோடி) பெறுகிறது. நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்தை(ரூ. 205 கோடி) பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்(ரூ. 190 கோடி), ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ்(ரூ. 185 கோடி), டில்லி டேர்டெவில்ஸ் (ரூ. 184 கோடி), நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ. 164 கோடி), டெக்கான் சார்ஜர்ஸ்(ரூ. 156 கோடி) அணிகள் உள்ளன.

எகிறும் வருமானம்: சமீபத்திய ஏலத்தில் கொச்சி(ரூ. 1,533 கோடி), புனே(ரூ. 1,702 கோடி) ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. இதனால் ஐ.பி.எல்., அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஒவ்வொரு போட்டிக்கும் விளம்பரங்கள் அதிகம் வருவதால், இந்திய விளம்பர உலகிற்கு மட்டும் ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் சோனி "டிவி'க்கு இந்த ஆண்டு விளம்பரம் மூலம் 700 கோடி ரூபாய் கிடைக உள்ளது. இப்படி, எங்கு பார்த்தாலும் "கோடிகள்' புரள்வதால், ஐ.பி.எல்., மற்றும் அதன் அணிகளின் நிறுவன மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு வர்த்தகத்தில் பாரம்பரியமிக்க இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அமைப்பின் நிறுவன மதிப்பு ரூ. 60 ஆயிரம் கோடியாக உள்ளது. ஐ.பி.எல்., அமைப்பு துவங்கிய மூன்று ஆண்டுகளில் 18 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கும் விஷயமே.
---------
பி.டி.உஷா ஆதங்கம்
வர்த்தக நோக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் நட்சத்திரங்கள் எச்சரித்துள்ளனர். "தங்க மங்கை' பி.டி.உஷா கூறுகையில்,""ஐ.பி.எல்., அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டுள்ளனர். இதனால் விளையாட்டு மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது. தடகளத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
முன்னாள் நீச்சல் சாம்பியன் வில்சன் செரியன் கூறுகையில்,""ஐ.பி.எல்., என்பது விளையாட்டல்ல; வெறும் வியாபாரம். இதனால் சந்தோஷ் கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்,''என்றார்.

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

மதுரை : படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு நேற்று முன் தினம் மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம். இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர்.

30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், நேற்று முன் தினம் மாலை மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.

வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

காஞ்சிபுரம் :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. காஞ்சிபுரம் மற்றும் நெல்லையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்தப் பள்ளியின் ஒரு அறையில் சிந்தாரிவாக்கம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 10 பேரும் , எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 10 பேரும் தேர்வு எழுதினர். தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு மேற்பார்வையாளர் மாணவர்களுக்கு வினாத் தாளை மாற்றி கொடுத்துள்ளார். தமிழ் தேர்வு என்பதால் மாணவர்களும் வினாத்தாள் மாறியது தெரியாமலேயே தேர்வை எழுதி முடித்துள்ளனர். பின்பு வெளியில் வந்த போது வினாத்தாள் மாறிய விவகாரம் தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் நெல்லை மாவட்ட பள்ளியிலும் 10ம் வகுப்பு வினாத்தாள் மாற்றத்தால் குழப்பம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாரா டக்கர் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. பள்ளியில் ஒரு அறையில் இருந்த மாணவிகளில் 10 பேர் மெட்ரிக் மாணவிகள், 10 பேர் ஸ்டேட் போர்டு மாணவிகள். இவர்களுக்கான வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிந்து மாணவிகள் வெளியில் வந்து சக மாணவிகளுடன் பேசிய போது தான் குளறுபடி நடந்தது தெரிந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்வின் முதல் நாளிலேயே இம்மாதிரியான குழப்பம் ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் தவிப்புக்குள்ளாகினர்.

10ம் வகுப்பு தேர்வை, 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 2,791 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 'ரெகுலர்' மாணவர்கள் இல்லாமல், தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., - ஓரியண்டல் தேர்வுகள், ஏப்ரல் 7ம் தேதி வரையிலும், மற்ற இரண்டு போர்டு தேர்வுகள், ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கின்றன.

நித்யானந்தா, பிரேமானந்தா பரபரப்பு சந்திப்பு இடம் : திருச்சி மத்திய சிறை

(பிரேமானந்தா கண்களை மூடி தியானத்தில் இருக்க நித்யா உள்ளே நுழைகிறார்)
நித்யா: ஓம் சங்கராச்சார்ய நமஹ! சுவாமி! சுவாமி!
பிரேமா: அட! நித்யா! வா குழந்தாய்! மங்களம் உண்டாகட்டும்
நித்யா: அடப்போங்க சாமி! அதுக்கெல்லாம் இனி வாய்ப்பேயில்ல!. அதுக்குள்ள தான் என் மேல கேஸ போட்டுட்டானுங்களே! இனி மங்களமும் உண்டாகாது, மகேஸ்வரியும் உண்டாகாது.
பிரேமா: அடச்சீ! என்னேரமும் அதே நெனப்பு தானா? நான் சொன்னது வேற அர்த்தத்தில தம்பி.
நித்யா: சாமி! நான் வரும்போது தாங்கள் நித்ய சிஸ்டையில் இருந்தது போலத் தெரிந்ததே?
பிரேமா: அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது மகனே! நைட்டெல்லாம் என் ரூம்மெட்கள் விடும் குறட்டையால் இரவில் தூக்கமே வருவது கிடையாது.பகலில் தூங்கினால் ஜெயிலர்கள் பட்டையைக் கிளப்பிவிடுவார்கள். அதனால் தான் தியானம் செய்கிற சாக்கிலே தினமும் சற்று அசந்து விடுவேன். அதெல்லாம் விடு தம்பி! தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? என்ன திடீரென்று திருச்சி விஜயம்? அதுவும் ஏன் இந்த‌ திடீர் சந்திப்பு?
நித்யா: ஊருக்கு ஊரு சந்தி சிரிச்சி போனதால தான் இந்த சந்திப்பு சுவாமி. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ள என்ன அரெஸ்ட் பண்ணப் போறதா என் சீடர்கள் செய்தி கொண்டு வந்துவிட்டார்கள்.சரி ஒரு முன்னோட்டமா ஜெயில் எப்படி இருக்கும்னு பாத்துட்டு போகலாமுன்னு ஒவ்வொரு ஊரா போயி விசாரிக்கிறேன். இங்க தான் சுவாமி இருக்கீங்கல்ல! அதான் ஜெயில் வாழ்க்கையைப் பற்றி கேட்டுத்தெரிஞ்சிக்கிட்டு போகலாமுன்னு வந்தேன்.
பிரேமா: ஓஹோ! மெயின் பிக்சர் வர்றதுக்கு முந்தி டிரைலர் மாதிரியா? அதெல்லாம் சரி தம்பி, கண்ண மூடிக்கிட்டு பாப்பேன்னு மேடைக்கு மேடை உதார் உடுற உன்னால, உன் ரூமுக்குள்ள‌இருந்த கேமிராவ‌ ஏன் பார்க்க முடியாம போச்சி????
நித்யா: அதில்ல சாமி! அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் என் ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா இருந்திச்சி. அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தேன். அந்த நேரம் பாத்து எவனோ ஆட்டயக் கலச்சிட்டான்.
பிரேமா: (மனசுக்குள்: அடப்பாவி எங்கிட்டயேவா?) என்னய்யா இது செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற! தம்பி நானும் உன்ன மாதிரி தொழில்காரன் தான். எங்கிட்டயே ஞானதிருஷ்டி பூன திருஷ்டின்னு பிலிம சுத்தாதே! அதவிடு உன் பிறந்த நாள்,வருசம் என்னன்னு சொல்லு. உன் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு கணிச்சிப் பார்ப்போம்.
நித்யா: அதுவந்து சாமி! நான் பொறந்த பத்தாவது நாளு,இமயமலையில உள்ள சித்தர், ரஜினிகாந்த்து குருநாதரு, பாபா வச்ச பேரு.....
பிரேமா: ஏய்!ஏய்! நிப்பாட்டுய்யா! நானும் உன்ன மாதிரி பெரிய ரவுடி தான். கேட்டதுக்கு பதில சொல்லுன்னா ஊருக்கு சொல்ற கதைய என்கிட்டயும் அளந்துவிடுற?
நித்யா: சாரி சாமி! பொதுக்கூட்டமுன்னு நெனச்சிட்டேன்.01/01/1978 ல பொறந்தேன். நான் பொறந்த பத்தாவது நாளு ஒரு பெரிய ஜோசியர்..
பிரேமா: இது என்னடா இம்சையா போச்சி! ஏய் நிப்பாட்டுய்யா.. நானும் உன்னமாதிரி தொழில்காரந்தான்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன்,மறுபடி மறுபடி அதே ரிக்கார்ட ஓட்டுற‌!என்னப் பத்தி ஒனக்குத் தெரியாது, கடுப்பானா கமெண்டலத்த தூக்கி அடிச்சிப்புடுவேன். ஒழுங்கா சொல்லு.
நித்யா: 1/1/1978 ல பொறந்தேன் சுவாமி. 1990 லிருந்து 1993 வரை ஒரு கல்லூரியிலே மெக்கானிக்கல் இன்சினியரிங் முடிச்சேன். அதுக்கப்பறம் 10 வருசம் என் ஞானத்தேடல் காரணமா 1/1/2000த்தில் இமயமலையில இருக்குற பாபாஜி மூலம் என் பெயரை நித்யானந்தா என மாத்திக்கிட்டேன்.
(இதைக் கேட்டவுடன் பிரேம்ஜி தரையில் படுத்து புரண்டு புரண்டு சிரிக்கிறார்)
நித்யா: என்ன சாமி! நான் என்ன ஜோக்கா சொல்லிக்கிட்டு இருக்கேன்! இப்படி சிரிக்கிறீங்களே!
பிரேமா: இல்ல தம்பி! 1978 ல பிறந்த ஒருவன் 1990ல ஏழாவது தான் படிக்க முடியும். எப்படி பாலிடெக்னிக் இன்சினியரிங் படிக்க முடியும்? 1993 லிருந்து 2000 வரைக்கும் இடைப்பட்ட காலம் 7வருசம் தான். ஆனா நீ 10 வருஷம்னு உன் வெப்சைட்ல போட்டு இருந்த. இப்படி ஆரம்பமே பெரிய புளுகு மூட்டையா இருக்கே! உன்னய போயி எப்படி சாமின்னு ஏத்துக்கிட்டாய்ங்கே!
நித்யா: சுவாமி! எனக்கு பில்டிங்க் ஸ்டிராங்கு, பேஸ்மட்டம் ஃபுல் வீக்குங்கிறத இப்ப நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இனிமே உசாராயிடுறேன்.நீங்க என் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு பாருங்க!
பிரேமா: குருமேடு..சுக்கிரமேடு..புதன்மேடு... உன் ஜாதகப்பிரகாரம் நீ எப்பவோ.....
நித்யா: ராஜகுருவா ஆயிருக்கனுமா?
பிரேமா: இல்ல மகனே! எப்பவோ உள்ள வந்திருக்கனும்! என்ன செய்றது பெரிய பெரிய தலைங்கலையெல்லாம் மடக்கிப் போட்டுட்ட. அதுவும் அந்த சரக்கு மாநிலத்து சி.எம் உன் ஆஸ்தான சீடராமே!
நித்யா: ஆமா சுவாமி! ஆனா இப்ப யாரு சிபாரிசும் கதைக்குஆவாது. என் மேல 6 கேஸ புக் பண்ணிடுச்சி காவல்துறை. எல்லாமே சினிமாவில வர்ற மாதிரி நடக்குது.
பிரேமா: சினிமான்னதும் ஞாபகம் வருது! நீ ஏதோ சினிமா படம் எடுக்கப்போறதா ஒரு நியூஸ் கசியுதே?
நித்யா: இந்தச் செய்தி உங்க வரைக்கும் வந்திடுச்சா! உண்மைதான் சாமி! "நான் அவன் இல்லை 3" அப்டின்னு ஒரு படம் எடுக்கலாம்னு நெனச்சி அறிவிப்பு உட்டேன். அடுத்த நிமிசம் பாருங்க, நம்ம ஷகிலா, ஷர்மிலி, ரேஷ்மா, மரியா,சிந்துக்கிட்டேயிருந்து வரிசையா போனு. சுவாமி நிச்சயமா அதுல எங்களுக்கு ஒரு சீன் வைக்கனும்னும், தேவைன்னா இப்பவே சாம்பிள் சீன் ரிகர்சல் பார்க்க நாங்க ரெடின்னும் போன் மேல போன் பண்றாங்க. சாம்பிள் பாத்து வாங்க நான் என்ன ஸ்வீட்டா ஆர்டர் பண்ணப் போறேன்!!!??. நான் எவ்வளவு தான் தாங்குவேன் சாமி?
பிரேமா: அடப்போய்யா! நம்மள மாதிரி சாமியாருங்க வாயிலேந்து லிங்கம் எடுத்து வச்சமா, 4 பெண்கள‌ வாந்தி எடுக்க வச்சமான்னு இல்லாம நீ என்னய்யா புதுசா சினிமா படம் எடுக்குறேங்கிற , நான் சென்ஸ்.!
நித்யா: அட நீங்க வேற சாமி! உங்க லிங்கம் எடுக்குற மேட்டற நீங்கதான் மெச்சிக்கனும்., அதான் கருப்புச் சட்டைக்காரன் ஊருக்கு ஊரு மேடையைப் போட்டு உங்கள விட பெரிய பெரிய லிங்கமா எடுத்துக்காட்டி நம்மள மாதிரி ஆளுகள கிழிகிழின்னு கிழிக்கிறானே!!
பிரேமா: அவனுக்கு லிங்கந்தான்யா எடுக்க முடியும்,வெள்ளக்காரிய வாந்தி எடுக்க வைக்க முடியுமா?
நித்யா: என்னமோ வாந்தி எடுக்க வக்கிற மேட்டர வாரனாசி யுனிவர்சிட்டியில‌ வாங்குன பட்டம் மாதிரி பேசுறீங்க. இதெல்லாம் கேட்டு சனங்க உசாரானா சங்கு தான். அதெல்லாம் பரவாயில்ல சாமி! என் மேட்டர வச்சி எல்லாரும் தன்னோட ரேட்டிங்க ஏத்திக்கிறாங்க. இவன பாருங்க, எதிரொலியில என்னயப் பத்தி இது 3வது பதிவு.
பிரேமா: ஏம்பா! பெரிய பெரிய மீடியாக்களெல்லாம் உன் வீடியோவ கண்டினிவா காட்டி ரேட்டிங்க் ஏத்தும் போது, ஆப்ட்ரால் இவன் பிளாக்குல‌ தானய்யா எழுதுறான். விடுய்யா போயிட்டு போறான்.
நித்யா: இதுகூட பெரிய விசயமில்லை சாமி! என் வீடியோவில எல்லாரும் அவங்க கம்பெனி லோகோவைப் போட்டு அதுக்கு காப்பிரைட்டும் போட்டு சம்பாதிக்கிறாங்க. திருட்டு விசிடிக்கு போராடுற திரையுலகம் இந்த மேட்டர்ல வாய்பொத்தி இருக்கு. இதுவும் ஒருவகையில திருட்டி விசிடி தானே சுவாமி.
பிரேமா: உன் ஆதங்கம் புரியுது நித்யா! அதுக்கெல்லாம் ஒரே வழி தான் இருக்கு. மொதல்ல நாம "தென்னிந்திய சாமியார்கள் சங்கம்" அப்டிங்கிற பேர்ல ஒரு சங்கத்த பதிவு செஞ்சி இனிமே இது மாதிரி திருட்டு விசிடி வெளியிட்டா அத எதிர்த்து போராடுனும். அதுமட்டுமல்லாம நமக்கு ஒரு வினியோகஸ்தர்கள் சங்கமும் ஆரம்பிச்சி நம்மகிட்ட இருக்கிற வீடியோவெல்லாம் அவங்க மூலமாத்தான் வெளியிடனும்னு ஒரு தீர்மானம் போட்டாத்தான் இவனுங்க திருந்துவானுங்க!.,
நித்யா: நல்ல யோசனை சுவாமி! முயற்சி பண்ணலாம்!
பிரேமா: அதுசரி நித்யா! நீ ஞானபீடம்கிற பேர்ல ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க இருந்ததா ஒரு தகவல் கசிந்ததே!
நித்யா: ஆமாம் சுவாமி! எல்லா வேலையும் முடிஞ்சி ரெண்டு மூனு என்.ஆர்.ஐய மடக்கி வச்சிருந்தேன். எங்க? அதுக்குள்ள தான் என்னய மடக்கிப் போட்டுட்டாங்களே!
பிரேமா: ச்சே! டிவி சேனல் மட்டும் ஆரம்பிச்சிருந்தா இந்த வீடியோவ நாம காட்டி வெளம்பரங்கள அள்ளியிருக்கலாம்.
நித்யா: அட ஏன் சாமி வெந்த புண்ணுல வெடிய வெக்கிறீங்க! நீங்களும் என்ன புரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தானா? நான் சட்டப்பூர்வமா எந்த தப்பும் செய்யல சாமி! நான் ஒரு பாலியல் ஆராச்சியாளன்.
பிரேமா: ஓஹோ! ஆராய்ச்சி தியேரி முடிஞ்சி பிராக்டிகல் பண்ணும் போது தான் படம் புடிச்சிட்டானுங்களா?
நித்யா: கரெக்ட் சுவாமி! ஒரு சுவாமி மனசு ஒரு சுவாமிக்குத் தான் தெரியும்.
பிரேமா: ஆமா நமக்கு மட்டும் தானே தெரியும் நம்ம சீக்ரெட் ஆப் எனெர்ஜி. என் காதுலயே இந்த மாதிரி பூவச்சுத்துற நீ மத்தவன் காதுலயெல்லாம் பெரிய மாலையை சுத்துவேன்னு எனக்கு இப்பதானே புரியுது! சும்மா மொக்கயப் போடாம அடுத்த கேள்விய கேளப்பா!
நித்யா: நம்மள மாதிரி இவ்வளவு ஆளுங்க வரிசையா மாட்டியும் இந்த சனங்க எதைப்பத்தியும் கண்டுக்காம மறுபடியும் நம்மகிட்டயே வர்றத நெனச்சா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அந்த தப்ப நான் தான் செஞ்சேன்னு நானேஒத்துக்கிட்டாலும் , இவங்க அத ஒத்துக்க மாட்டாங்க. அதுசரி சாமி! நாம மட்டும் தான் இப்படியா? அல்லது எல்லா சாமியார்களும் இப்படித்தானா?
பிரேமா: உண்மையான சாமியார்களுக்கு சொத்து சுகம் எதுக்கு?பிச்சையெடுத்துக்கிட்டு கோயிலே கதின்னு கெடக்குற அந்த சாமியார்கள ஒப்பிடும் போது நாம சுழியந்தான். இந்த மாதிரி சாதுக்களுக்கு நம்ம மக்கள் ஒருவேள சோறுகூடப் போடாம வெரட்டி அடிக்குவாங்க. ஆனா நம்மள மாதிரி தாழ்தள சொகுசு சாமியார்களுக்கு கோடிகோடியா கொண்டு வந்து கொட்டுவாங்க. தாழ்தள, சொகுசு, தங்கரத சாமியார்கள் எல்லாரும் நம்மள மாதிரி தான். என்ன‌, இன்னும் மாட்டாதவனெல்லாம் வெளிய இருக்கான். நாம மாட்டிக்கிட்டோம் உள்ள இருக்கோம்.
நித்யா: சுவாமி! நாமன்னு ஏன் என்னையும் சேத்து சொல்றீங்க,நான் இன்னும் வெளிய தானே இருக்கேன்.
பிரேமா: சீக்கிரமே குட் ஜெயிலி பிராப்பிரஸ்து...
நித்யா: ரொம்ப முக்கியம் இந்த ஆசிர்வாதம். அவனவனுக்கு இங்க புளிய கரைக்கிது. அதெல்லாம் விடுங்க சாமி ஜெயில் வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க.
பிரேமா: காத்தால 5 மணிக்கு எந்திரிச்சி கதவேயில்லாத கழிவறையில உக்காந்து , தண்ணியே இல்லாத கிணத்துல,அடிப்பாகமே இல்லாத வாளியாள தண்ணி எறச்சி, கையே படாம....
நித்யா: சுவாமி...!
பிரேமா: உண்மையதான்யா சொல்றேன். இங்க ஷவரெல்லாம் கிடையாது, வெஸ்டர்ன் டாய்லெட்டெல்லாம் கிடையாது. காலைல பல்லுவெளக்க சமயக்கட்டுப் பக்கம் போனா அங்க அடுப்புச்சாம்பல் கிடைக்கும், ஆனா அதுக்கு ரொம்ப ரிமாண்டு. அத எடுக்க நம்ம ரேசன் கட கியூ மாதிரி காத்தால 4 மணிக்கே கூட்டம் ஆரம்பிச்சிடும். அது கிடைக்காட்டி கக்கூசுக்கு பின் சுவத்துல காரை பேர்ந்த செங்கல், அதுவும் கிடைக்காட்டி கடைசியா வேப்பங்குச்சி தான். இந்த வேப்பங்குச்சியோட மருத்துவகுணம் இருக்கே!
நித்யா: போதும் நிப்பாட்டுங்க சாமி! முடியல! சிக்னல் பேஸ்ட்டால பல்லு வெளக்கிய எனக்கு வேப்பங்குச்சியும், செங்கற்பொடியுமா?எல்லாம் என் நேரம்!
பிரேமா: அதான் இப்ப உன் சிக்னல் வீக் ஆயி கெடக்குல! அப்பறம் என்ன பகுமானம்? அது மட்டுமில்ல தம்பி, ஆஸ்ரமம் மாதிரி இங்க உதவிக்கு ஆளெல்லாம் கிடையாது. எல்லாமே செல்ஃப் சர்வீஸ்தான்.
நித்யா: எல்லாமேன்னா?
பிரேமா: எல்லாமேன்னா நீ நெனக்கிற மாதிரி இல்ல. சாப்பாடு வரிசையில் நின்னு நாமே வாங்கனும்னு சொன்னேன்.
நித்யா: அப்பறம்?
பிரேமா: வேகாதா சோறு, பருப்பேயில்லாத சாம்பாரு,புளியேயில்லாத ரசம்
நித்யா: வாரா வாரம் சிக்கன் போடுறதா கேள்விப்பட்டேனே!
பிரேமா: சிக்கன் போடறதா வெளிய பேசிக்கிறாங்க. ஆனா எனக்கென்னமோ இங்க போடறது 5 ரூவா பிரியாணி அயிட்டம் மாதிரியே தோனுது.
நித்யா: ஓ மை காட்!!! காக்காவா??
பிரேமா: காவி துறந்து கம்பிக்குள்ளே வந்த பிறகு காக்காவைப் போட்டால் என்ன, கழுகைப் போட்டால் என்ன மகனே! ஒரு கை பார்த்து விட வேண்டியது தானே!
நித்யா: சுவாமி இப்படி பச்சையா அசைவத்துக்கு அப்பீட் ஆயிட்டீங்களே! என்ன கொடும சாமி இது?
பிரேமா: ஏன்கிட்டயேவா? இன்னும் கேளு, பாலே இல்லாத காபி,ரெக்கையே இல்லாத ஃபேனு, காத்தே வராத ஜன்னல்
நித்யா: போதும் சுவாமி போதும்! இப்பவே எனக்கு குமட்டிக்கொண்டு வருது. இங்க ஜெயிலர்கள் எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு சொல்லுங்க சாமி!
பிரேமா: அத ஏன் கேக்குற நித்தி! ஒரு தடவை எங்க‌ ஜெயிலர், சக கைதிய கூப்பிட்டு அவருக்கு கால் அமுக்கிவிடச் சொன்னாரு. அவன் சரியா அமுக்கலைன்னு அடுத்த நாளு அவன பொன்மலைப்பட்டி பக்கமா கூட்டிக்கிட்டு போயி என்கவுண்டர்ல போட்டுட்டாங்க.
நித்யா: சாமி! என்ன சொல்றீங்க! கால ஒழுங்கா அமுக்கலைன்னதுக்கா என்கவுண்டர். என்ன சாமி பீதிய கெளப்புறீங்க?
பிரேமா: உண்மைதான் நித்யா! அன்னிலேந்து அந்த ஆபிஸர் என்னய கால் அமுக்க கூப்பிட்டா 3 நாளா இருந்தாலும் கண் முழுச்சி அமுக்கிவிடுவேன்.
நித்யா: இதுவேறயா? அதுசரி..,போதும் சுவாமி போதும்! பொழுது போக்குகள் பற்றி சொல்லுங்க.
பிரேமா: பொழுது போக்கு ஸ்னோ பௌலிங்கும், கோல்ஃபும் தான்.
நித்யா: சுவாமி கிண்டல் பண்ணாதீங்க!
பிரேமா: வேற என்னய்ய கடுப்பக்கிளப்பிக்கிட்டு. இங்க கரிக்கட்டயும், கல்லும் தான் கெடக்கு. அதவச்சி வச்சி ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி, கில்லிதாண்டு, கிளித்தட்டு, கோகோ மாதிரி ஆட்டங்கள் எல்லாமே ஆடுவோம்.
நித்யா: என்ன சுவாமி எல்லாமே லேடீஸ் அயிட்டமா இருக்கே!
பிரேமா: ஹிஹி! கேமில் கூட எனக்கு லேடீஸ் கேம்தான் புடிக்கும். அதவிடு நித்யா ஆடுபுலி ஆட்டம் கேம்ல நான் தான் சாம்பியன். மாநில அளவில ஜெயில்கள்ல நடந்த போட்டிகல்ல முதல் பரிசு வாங்கியிருக்கேன். வேனுமுன்னா சர்டிபிகேட்ட காட்டாவா?
நித்யா: சுவாமி! என்னய கடுப்பேத்தாதீங்க‌, வேற மேட்டர் இருந்தா சொல்லுங்க.
பிரேமா: வாராவாரம் தூர்தர்ஷன்ல ஒரு படம். போன வாரம் கூட ஒரு படம் போட்டான் பாரு..,ஆஹா!
நித்யா: யோவ்! நீ சொன்னதிலயே பெரிய தண்டனை இதான்யா! நான் எங்க எப்படி இருந்த ஆளு தெரியுமா? வீடியோவ வாங்கி பாருய்யா! ஒரு கையில ரஞ்சிதா, இன்னொரு கையில டிவி ரிமோட் தான்யா இருக்கும். மொத்தம் 300 சேனல மாத்தி மாத்தி பாத்த எனக்கு வாரம் ஒரு படமா? அய்யோ..
பிரேமா: தம்பி! இங்க வந்திட்டா இப்படித்தான். போகப்போக உனக்கு நல்லா பழகிரும் பாரு. வேனுமினா இப்ப வாரியா, உனக்கு ஆடுபுலி ஆட்டம் ஆடுறதுக்கு டிரைனிங்க் தாரேன்!
நித்யா: யோவ்! நிப்பாட்டுய்யா! நான் வெறும் பொம்பள கேஸூல மட்டும் தான் உள்ள வரலாமுன்னு இருக்கேன், என்ன கொலை கேஸ் கைதியா மாத்திராத. என்ன தூக்குல போட்டாலும் பரவாயில்லய்யா! ஆனா நீ இருக்குற இந்த ஜெயிலுக்கு மட்டும் வரமாட்டேன்யா! நான் கெளம்பறேன்..
பிரேமா: தம்பி! ஒரு நிமிசம். உன் மொமைல அந்த வீடியோ இருந்தா புலுடூத் வழியா எனக்கு கொஞ்சம் ஏத்தி விடேன்?
நித்யா: ஹேய்ய்ய்ய்!!! உனக்கு புலுடூத் கேக்குதா? மொதல்ல உன் டூத்த இல்லாம ஆக்குறேன் பாரு
(கத்தியபடியே கீழே கிடந்த செங்கல்லை தூக்கிக் கொண்டு பிரேமாவை நோக்கி பாய டரியலான பிரேமா ஜெயிலரை நோக்கி கத்திக்கொண்டே ஓடுகிறார்)