Monday, February 22, 2010

கொ‌ள்ளை

நீதிபதி : இந்த கொள்ளையை நீ மட்டும் தனியாகவா நடத்தின?

குற்றவாளி : பின்ன என்ன எஜமான் ஊர் பூரா தம்பட்டம் போட்டு கூட்டு சேர்ந்து செய்ற காரியமா இது.
பி‌ச்சைக்கார‌ன்

என்னங்க பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் போடறீங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?
சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.



இ.‌‌சி.‌‌‌‌ஜி

டாக்டர் என்னோட இ.சி.ஜிய வச்சுகிட்டு என்ன பண்றீங்க?



சரியான நேரத்துல சொன்னீங்க, இது என்னடான்னு குழம்பிப் போயிட்டேன்.
மு‌ட்டையா கோ‌ழியா

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!



நாய‌க் காணோ‌ம்

சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
முடியாது



நெப்பொலியன் : முடியாதுங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.


சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
சச்சினுக்கு தெரிஞ்சது "லேட் கட்"
சேவாகுக்கு தெரிஞ்சது "ஸ்கொயர் கட்"
நம்ம தலைவருக்கு தெரிஞ்சது "கரண்ட் கட்"


கிராமம் ஒன்றில்...

என்ன பெரியவரே கரண்ட் எப்ப போச்சு?

போன மாசம்னு நினைக்கிறேன் தம்பி, கடைசியா கரண்ட் எப்ப இருந்துச்சுன்னு சரியா ஞாபகம் இல்ல தம்பி!

No comments:

Post a Comment