Thursday, February 25, 2010

* விரைவாக பார்க்க உங்கள் ஐடியாவை சேமித்துவைக்க எளிதான ஒரு இணையதளம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் கூட நமக்கு ஐடியா
திடீரென்று தோன்றி கொண்டே தான் இருக்கும் அந்த வகையில்
நமக்கு தோன்றும் ஐடியாவை உடனடியாக ஆன்லைன் -ல்
சேமித்துவைக்க ஒரு இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

படம் 1
நமக்கு பல ஐடியாக்கள் தோன்றும் அனைத்தயுமே எழுதிவைத்து
திரும்பி பார்க்ககூட நேரம் இருக்காது சரி இமெயில் சேமித்து
வைதுக்கொள்ளலாம் என்றாலும் தினம் தினம் வரும் இமெயிலை
படிக்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது அப்படி இருக்கும் போது
இந்த ஐடியாவை நாம் எப்படி படித்துபார்க்க முடியும் அந்த வகையில்
தான்  இந்த இணையதளம் வந்துள்ளது ஐடியாவை மட்டும் சேமித்து
வைத்துக்கொள்ளலாம் என்று இந்த தளம் வந்துள்ளது.

இணையதளமுகவரி : http://www.ideary.ru
படம் 2
படம் 3
இதில் கணக்கு வைப்பதற்கு பெரிதாக தகவல் ஒன்றும் கொடுக்க
வேண்டாம் ஒரு பயனாளர் பெயர் ,கடவுச்சொல் மற்றும் இமெயில்
முகவரி என்ற மூன்றும் கொடுத்து நொடியில் உருவாக்கிவிடலாம்.
(படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது). கணக்கை உருவாக்கி முடித்ததும்
படம்-2ல் உள்ளது போல் add என்பதை அழுத்தி நம் ஐடியாவை
கொடுத்து சேமித்துக்கொள்ளவும் அவ்வளவு தான் இனி உங்கள்
கணக்கை திறந்ததும் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் ஐடியா
படம்3-ல் உள்ளதுபோல் காட்டப்படும். இந்த தளம் ஐடியாவை
சேமித்து வைத்துக்கொள்ள பயனுள்ளதளமாக இருக்கும்.

No comments:

Post a Comment