Wednesday, February 24, 2010

American Education

அமெரிக்கா

உலக மக்கள் பலரின் கனவாகத் திகழும் அமெரிக்கா 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாடு. கடந்த 5 நூற்றாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடு இது. இன்று உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி பயணிப்பவர்கள் பலர். அமெரிக்கர்களின் வளைந்து கொடுக்கும் தன்மை, ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் அதன் உயரிய நடைமுறைகள், தொழில் மயம், பொருளாதார வளர்ச்சி, தொழில் நுட்பப் புரட்சி, கவர்ச்சிகரமான சம்பளம், உலகத் தரம் வாய்ந்த கல்வி என பல்வேறு காரணங்களால் அமெரிக்கா பல வியப்பூட்டும் அம்சங்களை கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகின் ஒரே சூப்பர் பவர் அமெரிக்கா என்றாகிவிட்டது. அதைப் பற்றிய பல அம்சங்கள் பிரம்மாண்டமானதாகவே இருக்கின்றன. இந்தியா போன்ற நாட்டில் தனி மனிதனின் வருமானம் சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. அமெரிக்காவில் தனி மனித வருமானம் சராசரியாக 10 லட்சமாக இருக்கிறது. இதிலிருந்தே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நிலையை நாம் அறிய முடியும்.
கல்வியிலும் அமெரிக்கா முதன்மை பெற்று திகழ்கிறது. இதன் பல கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உலகெங்கும் அவற்றின் தரத்திற்காக அறியப்படுகின்றன. அதன் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பாராட்டாத ஆசிரியர்களும் மாணவர்களும் எங்கும் கிடையாது.
அமெரிக்கக் கல்வியின் சிறப்பு:
அமெரிக்காவின் உயர் படிப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு கூடுதல் மதிப்பைப் பெற்றுத் தருபவை.
 
அமெரிக்கப் படிப்பு பணி முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருப்பதோடு தலைமை பண்புகளையும் மாண்புகளையும் வளர்க்கிறது.
 
மனித அறிவு எல்லைகளை விரிவுபடுத்துவதோடு நவீன தொழில்நுட்பம், கலைத்தன்மையுடன் கூடிய ஆய்வு மற்றும் சிறப்பான பயிற்சி அம்சங்களையும் அமெரிக்கக் கல்வி வழங்குகிறது.
 
அமெரிக்காவில் பெறும் கல்வி ஒருவரின் வாழ்வில் முத்திரையாக விளங்குவதோடு அவரது வாழ்க்கை முழுவதும் அவரை சிறந்த பாதையில் இட்டுச் செல்கிறது.
 
பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிப்பதால் உலகளாவிய பல தொடர்புகளை இது மாணவருக்கு வழங்குகிறது.
 
படிக்க விரும்பும் பிரிவு, கல்லூரி போன்றவற்றில் அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளதால் கல்வித் தரமும் மிக சிறப்பாகவே இருக்கிறது.
இந்த சிறப்பம்சங்களைத் தாண்டி அமெரிக்கக் கல்வியானது அதிக செலவைக் கொண்டதாகவே இருக்கிறது. எனினும் உதவித் தொகை, ஸ்பான்சர்ஷிப் போன்ற பல உதவிகள் கிடைப்பதாலும் மாணவரின் கவுரவத்தையும், தரத்தையும் உறுதியாக மேம்படுத்துவதால் அமெரிக்கக் கல்வியானது பெரிதும் விரும்பப்படுகிறது.
அமெரிக்க கல்விக்கு திட்டமிடல் சில கட்டங்கள் செப்டம்பர்: கல்லூரிகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது தான் முதல் நடவடிக்கையாக அமைய வேண் டும். மாணவர் தகவல் மையங்கள்/நூலகங்கள்/இன்டர்நெட் மூலமாக கல்லூரிகளை அறியலாம். ஏற்கனவே பயின்ற நண்பர்கள்/உறவினர்கள் மூலமாக அறிவதும் நல்லது. 10 முதல் 15 கல்லூரிகளைத் தேர்வு செய்து பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின் பின் வரும் கட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.   அக்டோபர்நவம்பர் : டோபல், ஜி.ஆர்.., ஜிமேட் போன்ற அடிப்படைத் தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சியை தொடங்க வேண்டும்டிசம்பர்மே: இது போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது ஜனவரி: படிக்க விரும்பும் பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைப் பெறுவது மற்றும் விண்ணப் பிப்பதுமார்ச்ஜூன்: நவம்பருக்கு முன்பாகவே டோபல் போன்ற தேர்வை எழுதுவது. ஒருவேளை தேவையான மதிப்பெண் பெறாத போது அக்டோபரில் மீண்டும் தேர்வு எழுதி தகுதி பெறுவதுமே: எந்த ஆசிரியரிடமிருந்து பரிந்துரை கடிதத்தைப் பெறுவது என முடிவு செய்வதுஜூலை: பள்ளி/கல்லூரி விண்ணப்பங் களை நன்றாகப் படித்து பரிசீலித்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிப்பது.

ஆகஸ்ட் : விண்ணப்பத்துடன் அனுப்பப்பட வேண்டிய கட்டுரை/படிப்பின் நோக்கம் பற்றிய அறிக்கையை எழுதி நண்பர்கள்/ஆசிரியர்களிடம் காட்டி மேம்படுத்துவது.

செப்டம்பர்: டோபல் போன்றவற்றில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் எழுதுவது பெறப்பட்ட பரிந்துரை கடிதங்களை அனுப்புவது.

அக்டோபர் : கட்டுரைகள்/விண்ணப்பங்களை இறுதி செய்து பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்புவது.

நவம்பர்: இவை அனுப்பப்பட்டதை உறுதி செய்து கொள்வதுடிசம்பர்: கூடுதல் விபரங்கள் கேட்கப்பட்டால் உடனடியாக பதில் அளிப்பது ஏப்ரல் மே: பள்ளி/கல்லூரிகளிலிருந்து சேர்க்கை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கும் காலம் இது. அழைப்பு அனுப்பப்பட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடிவு பண்ண வேண்டும். விடுதியில் படிக்க விரும்புவோர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத பட்சத்தில் உடனடியாக விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

ஜூன்: விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வது. படிப்பு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அமெரிக்காவில் சென்று சேர திட்டமிட வேண்டும்.   ஜூலை ஆகஸ்ட்: பயணம் மேற்கொள்வது. அமெரிக்கக் கல்வியின் சிறப்பு, அதற்கு திட்டமிடும் முறை மற்றும் விண்ணப்பம் பெறுவது ஆகியவற்றைப் பார்த்தோம். அமெரிக்கக் கல்விக்கு ஆசைப்பட்டு விண்ணப்பிப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் சில இதோ...
 
இந்தியாவில் நாம் படித்திருக்கும் கல்வியின் சான்றுகள் அனைத்தையும் நாம் படித்த கல்லூரி அல்லது பள்ளி நேரடியாக நாம் அமெரிக்காவில் சேரவிருக்கும் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். நாம் அவற்றை அனுப்பக் கூடாது.
 
சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒரிஜினல்களை அனுப்பினால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது. நகல்களில் நாம் பயின்ற கல்வி நிறுவனம் தான் அட்டெஸ்ட் செய்ய வேண்டும். அப்படிப் பெற முடியாத போது நோட்டரி பப்ளிக் ஒருவரிடமிருந்து அட்டெஸ்ட் பெறலாம்.
 
அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களில் நமது கல்வி குறித்த மற்றும் பொதுவான கேள்விகள் இடம் பெறும். நமது பொழுது போக்கு, இதர திறமைகள், கல்வி மற்றும் பணி குறித்த திட்டங்கள் போன்றவற்றிற்கு கட்டாயம் நாம் பதிலளிக்க வேண்டும். இதன் மூலம் மாணவரின் ஆங்கிலத் திறன் பரிசோதிக்கப்படுகிறது.
 
நாம் எழுதவிருக்கும் கட்டுரைகளில் ஒன்று நமது கல்வித் திட்டம் குறித்ததாக இருக்கும். இதை நன்றாக உயோகித்து நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விரிவாக எடுத்துரைக்கலாம். இநத் கட்டுரைகள் நல்ல முறையில் திட்டமிடப்பட்டு ஒருமித்த கருத்துடன் எழுதப்பட வேண்டும்.
 
விண்ணப்பங்களை உரிய கால அவகாசத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிப்பது நல்லது.
 
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு கடிதம் மற்றும் இணைப்புகளை தவறாமல் நகல்களாக்கி உங்கள் உபயோகத்திற்கென பத்திரப்படுத்த மறக்க வேண்டாம்.
 
உங்களைப் பற்றிய பரிந்துரைக் கடிதத்தைத் தரவிருக்கும் ஆசிரியரை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யுங்கள். அவரிடம் சிறந்த முறையில் பரிந்துரைக் கடிதத்தைக் கோருங்கள்.
 
பரிந்துரைக் கடிதம் வெறும் புகழாரமாக அமையாமல் உங்களைப் பற்றிய உண்மையான விபரங்களைத் தருவதாக எழுதப்பட வேண்டும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அதே நேரம் அவை உங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டியவற்றைக் குறிப்பிடுவதாகவும் எழுதப்படலாம்.
 
உங்களைப் பற்றி நீண்ட காலம் அறிந்த ஆசிரியர் இதைத் தருவது தான் சிறந்தது.
 
அவர்கள் இந்த பரிந்துரை கடிதத்தை நேரடியாக அமெரிக்கக் கல்வி நிறுவனத்திற்கு அனுப்ப விரும்பலாம். எனவே போதிய ஏர்மெயில் கவர்களையும் தேவையான ஸ்டாம்புகளையும் தருவது உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் மதிப்பை உயர்த்துவதோடு உங்கள் ஆசிரியருக்கும் நல்ல அறிக்கை எழுதிட உதவி செய்யும்.
 
தகுதி அடிப்படையில் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவருக்கு நிதியுதவியைத் தருகின்றன. நிதி உதவி தேவைப்படுவோர் தேவையை மறக்காமல் விண்ணப்பிக்கும் போதே குறிப்பிட வேண்டும்.
 
பொதுவாக விண்ணப்பித்த பின் பல நாட்களுக்கு நாம் காத்திருக்க வேண்டும். கூடுதலாக வேறு தகவல் தேவைப்பட்டால் அமெரிக்கக் கல்வி நிறுவனமானது நம்மை கட்டாயம் தொடர்பு கொள்ளும்.
 
நமது திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து நமக்கு வாய்ப்புகள் தரப்படலாம். அப்படிக் கிடைத்தால் அந்த நிறுவனத்திற்கு அதன் படிப்பு வாய்ப்பை ஏற்றுக் கொண்ட சம்மதக் கடிதத்தை மறக்காமல் அனுப்ப வேண்டும். உடனடியாக பல நூறு அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்திட தயாராக இருக்க வேண்டும். இதைப் பெற்ற பின், அந்த நிறுவனம் மாணவர் விசாவுக்கான படிவத்தை நமக்கு அனுப்பும். அது போக கூடுதலாக தெரிவிக்கப்படும் பிற படிவங்களையும் உடனடியாக நாம் அனுப்பி வைக்கப்படும்.
 
குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டாலும் வாய்ப்பளித்த பிற நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம். உங்களைப் போலவே காத்திருக்கும் மற்றொரு மாணவருக்கு இதன் மூலமாக உதவுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
 
வெளிநாட்டு மாணவருக்கான நிதி உதவி: உலகிலேயே கல்விக்கு அதிக செலவாகும் நாடு அமெரிக்கா தான். பள்ளிக் கல்வியில் கட்டணம், விடுதிக் கட்டணம், இதர கட்டணங்கள் என ஆண்டுக்கு 5.25 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பட்டப்படிப்புக்கு இதை விட அதிகமாக செலவாகும். வெளிநாட்டு மாணவருக்கான நிதியதவியும் பெரிய அளவில் கிடைப்பதில்லை. அமெரிக்காவில் கல்வி பயில பொதுவாக நல்ல வசதி படைத்தவருக்குத் தான் சாத்தியமாகிறது என்பது உண்மை தான். அமெரிக்காவில் உதவித் தொகை எனப்படும் ஸ்காலர்ஷிப்கள் நிரந்தரமாகக் குடியேறிய வெளிநாட்டவருக்கும் அமெரிக்கருக்கும் தான் அதிகமாகக் கிடைக்கிறது.
 
வெளிநாட்டு மாணவருக்கான உதவித் தொகையை ஒரு சில பல்கலைக்கழகங்கள் தான் தருகின்றன.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக உலக நாடுகளில் பிரபலமாக இருப்பது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தான். முதலில் காலேஜ் ஆப் நியூஜெர்சி என அழைக்கப்பட்டது இந்த பல்கலைக்கழகம். இப்போது ஆயிரத்து 140 ஆசிரியர்களும் 6 ஆயிரத்து 700 மாணவர்களும் இருக்கின்றனர். மாணவர்:ஆசிரியர் விகிதம் 5.6:1 என இருக்கிறது. இதன் கல்வித் தரமானது மிகச் சிறப்பாக இருக்கிறது. இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இங்கு ஆசிரியர்களுடன் ஆரோக்கியமான நெருங்கிய தொடர்பு ஏற்படுவதுடன் இயற்பியல், மொழியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற வல்லுனர்களுடன் கூட நேரடியாக தொடர்பு கொள்ளும் படி அரிய வாய்ப்பு கிடைக்கிறது.
ஆராய்ச்சித் துறைப் படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம் பிளாஸ்மா பிசிக்ஸ் ஆய்வகங்களுக்காக பெயர் பெற்றது. ஆனால் இங்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் சட்டப்படிப்புகள் நடத்தப்படுவதில்லை.
பிரின்ஸ்டனின் துறைப் பிரிவுகள்:
கிராஜூவேட் ஸ்கூல்
ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்
ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் அப்ளைட் சயின்ஸ்
உட்ரோ வில்சன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அண்ட் இன்டர்னல் அபெர்ஸ்
ஸ்டடி ஆப் ஆர்ட்ஸ
இங்கு படிக்க ஆண்டுக்கு ரூ.12.3 லட்சம் செலவாகிறது. இங்கு இடம் கிடைத்தால் நிதியுதவி கட்டாயம் கிடைக்கும். கடந்த 200506ம் ஆண்டில் இந்த நிதியதவியை மொத்த மாணவர்களில் 54.6 சதவீதம் பேர் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லியனாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி:
சிகாகோவில் 1980ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிலையம் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தனியார் கல்வி நிறுவனமான இதில் இன்ஜினியரிங், அறிவியல், ஆர்க்கிடெக்சர், சைக்காலஜி, தொழில் நிர்வாகம் போன்ற 23 பிரிவுகளில் படிப்புகள் தரப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகம் பல துறைகளிலும் ஆய்வுப் படிப்புகளிலும் சிறந்து விளங்குகிறது.
தரப்படும் படிப்புகள்:இரண்டிரண்டாக தரப்படும் படிப்புகளை இணைத்து ஒருவர் இளநிலை பட்டப்படிப்பாகப் படிக்க முடியும்.
 
பி.எஸ்.,/எம்.டி., (மெடிக்கல் ஹானர்ஸ்)
பி.எஸ்.,/ஜே.டி., (லா ஹானர்ஸ்)
பி.எஸ்.,/எம்.பி.., (பிசினஸ்)
பி.ஆர்க்.,/எம்.பி.., (ஆர்க்கிடெக்சர் மற்றும் பிசினஸ்)
பி.ஆர்க்.,/எம்.சி.., (ஆர்க்கிடெக்சர் மற்றும் சிவில் இன்ஜினியரிங்)
இங்கு படிக்க ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இது தவிர புத்தகங்கள்/மருத்துவ இன்சூரன்ஸ்/சொந்த செலவுகள் தனி.தங்கிடவும் உணவுக்கும் நிதி உதவி பெற முடியும். இளநிலைப் படிப்பில் சேர டோபல் மற்றும் சாட் 1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு பயில ஜி.ஆர்.., மற்றும் டோபல் தேர்ச்சி தேவை.
இதன் ஆசிரியர்களில் 4ல் ஒருவர் பி.எச்டி., படித்தவர் என்பது சிறப்பம்சமாகும்.
விபரங்கள் பெற இன்டர்நெட் தள முகவரி: www.iit.edu; admission@iit.edu
அமெரிக்க விசா வகைகள்
எந்த ஒரு நாட்டிற்குள்ளும் நுழைந்திட தரப்படுவது விசா. அமெரிக்காவைப் பொறுத்த வரை வெளிநாட்டு மாணவருக்கு 3 விதமான விசாக்கள் தரப்படுகின்றன.
எப்1 விசா: அமெரிக்காவில் முழு நேரப் படிப்பைத் தொடரும் மாணவருக்கு இது வழங்கப்படும். படிப்புக் காலம் முடிந்த பின் அதிக பட்சம் 60 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்க இது வகை செய்கிறது.

ஜே1 விசா: நடைமுறைப் பயிற்சி தேவைப்படும் படிப்புகளை பிற நாட்டில் படித்த மாணவர்களுக்காக இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் படித்தபின் அமெரிக்காவில் குடியுரிமை கோர விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது அவர்கள் சொந்த நாட்டிற்குச் சென்று வர வேண்டும் என்பது இந்த விசாவின் அடிப்படைத் தன்மையாகும்.

எம்1 விசா: இது ஒகேஷனல் படிப்பைப் பயில விரும்பும் மரபு சாரா படிப்புகளைப் படிப்பவருக்கான விசாவாகும். இதன் கால அளவு ஒரு ஆண்டு மட்டுமே. இதை எப்1 ஆக மாற்ற முடியாது.

பொதுவாக அமெரிக்கக் கல்வியை விரும்பும் வெளிநாட்டு மாணவருக்கு எப்1 மற்றும் ஜே1 விசாக்கள் பிரபலமாக இருக்கின்றன.
 
நுழைவுத் தேர்வுகள் அமெரிக்காவில் கல்வி பயில ஆங்கில அறிவு அடிப்படையான தேவையாகும். அடிப்படைப் படிப்பில் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் நல்ல ஆங்கில அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தத் திறனை அறிய டோபல் தேர்வில் கட்டாயம் தகுதி பெற வேண்டும். இதைத் தவிர அந்தந்த கல்வி நிறுவனங்களும் சாட்/ஆக்ட் போன்ற தேர்வுகளில் தகுதி பெறுபவருக்கே கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இவற்றை எழுதிய பின் ஒரு மாதம் கழித்து நாம் தேர்வு செய்துள்ள கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களுக்கு பெற்ற மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். இது பற்றிய தகவலைப் பெற்றவுடனேயே விண்ணப்பிப்பது தொடங்கப்படவேண்டும்.

இந்தத் தேர்வுகள் பற்றிய தகவல்களை நமது நாளிதழின் கல்வி மலர் பகுதியில் அவ்வப்போது தந்து வருகிறோம். பார்த்து வரவும். இவற்றை www.geebeeeducation.com தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment