Friday, February 26, 2010

சிகரெட் பிடிப்பவர்களுக்கு அறிவு திறன் குறையும் ஆய்வில் தகவல்




லண்டன், பிப் 26-
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பதுஅனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
 
இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.
 
அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இந்த பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment