Friday, February 19, 2010

DESKTOPPIL- பல்பு எரிய வைக்க

திரைப்படத்தி்ல் ஒரு வசனம் வரும்...பல்ப் எரியுது பார் என்று...கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் இந்த வசனம் பிரபலம்.    நாம் நமது கம்யூட்டரிலும் பல்ப் எரிய வைத்தால் எப்படி இருக்கும். நாம் கடைகளில் - வீடுகளில் ஏதாவது விஷேஷம் என்றால் சீரியல் பல்ப்களை தொங்கவிட்டு எரிய விடுவோம். அதுபோல் நமது கம்யூட்டரிலும் சீரியல் பல்ப்களை எரியவிடலாம். அதை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படும். ( 2 எம.பி.அளவுதான்) இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் முடித்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமரந்துவிடும்.இதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில் ஜெனரல் டெப் இருக்கும் . இதில் நாம் பல்ப்களை எந்த சமயங்களில் எரியவிட வேண்டும் என்கின்ற ஆப்ஸன்கள் உள்ளன. தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
செலக்ட் ஐ-கானில் உங்களுக்கு எத்தனை பல்ப்கள் - நிறங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பாடல்கள் செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பல்ப்களின் வகைகள் கீழே உள்ளன.                                                                                         
இரண்டாவது டேபில் பல்ப்கள் இருக்கின்றது. உஙகளுக்கு டிசைன்போட்ட பல்ப் வேண்டுமா - விலங்கினங்கள் பல்ப்பா - பூக்கள் டிசைனா - அல்லது சாதாரண குண்டு பல்ப்பா நமக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
 தவிர அது ஒடும் வேகத்தை யும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். தவிர நமது விண்டோவின் மேல்புறம் மட்டுமா - அல்லது திரையின் நான்கு புறமுமா என விரும்புவதை தேர்வு செய்துகொள்ளலாம்.
மூன்றாவது டேபில் இசையை சேர்த்துள்ளார்கள். அவர்களே 10 பாடல்கள் தொகுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து பிளே செய்து பார்க்கலாம். அல்லது நமக்குவிருப்பமான இசையையும் தேர்வுசெய்துகொள்ளலாம். கீழே உள்ள் விண்டோவினை பாருங்கள்.
இதில் ஸ்கிரீன் சேவரும் - வால்பேப்பரும் உள்ளன.தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
காலண்டர்வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் அதையும்நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள்.

No comments:

Post a Comment