Thursday, February 18, 2010

பிரசார வாகனங்களுக்கு'புது டெக்னாலஜி'

பள்ளிக் குழந்தைகள் எடுத்துச் செல்லும் "சிலேட்' பலகையில், எவ் வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எழுத இடமில்லை என்றால் அழித்து விட்டு, மீண்டும் எழுதலாம். அப்படி ஒரு "டெக்னாலஜி', தேர்தல் பிரசார வாகனத்திற்கும் வாய்த்துள்ளது.

ஜப்பான் நாட்டின் இந்த புது டெக்னாலஜி தற் போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்; வரையலாம். குறிப் பிட்ட காலத்தில் வாகனத்தின் உண்மை நிறம் மாறாமல் அழித்து விடலாம்.இந்த தொழில்நுட்பம், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்தின் மூலம் இயங்கி வருகிறது. அந்த இயந்திரம், வாகனத்தை "ஆட்டோ ஸ்கேன்' முறையில், நீள, அகலங் களை அளந்து கொள்ளும். பின், விரும்பும் "டிசைன்' மற்றும் எழுத்துக்களை வாகனத்தின் மீது ஒட்டி விடும்.ஒரு சதுர அடிக்கு எழுத, வரைய 200ல் இருந்து 250 ரூபாய் வரை செலவாகிறது. தேவை முடிந்ததும் அதை அவர்களே இலவசமாக அழித்து தருகின்றனர். இதைத் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.தேர்தல் கமிஷன் கெடுபிடியில் இருந்து தப்பிக்கவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் இதைப் பயன்படுத்துவதில் அரசியல் கட்சியினர் அதிக ஆர் வம் காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment