நீங்கள் தூங்கும் போது எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்பதை ஒரு முறை மனதில் ஆழமாக நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு படுக்கச் செல்லுங்கள். அலாரம் அடித்தது போல் உங்கள் மூளை உங்களை சரியான நேரத்தில் எழுப்புவதை நீங்கள் அறிவீர்கள்.
இது ஒருபுறமாக இருக்கட்டும், உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்த பிறகு எழுப்பிவிடும்படியான அலாரத்தை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கைக் கடிகாரத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்லீப்டிராக்கர் எனப்படும் கருவியை தூங்குவதற்கு முன்பு கையில் கட்டிக் கொண்டால் போதும்.
நாம் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கமல் போதுமான ஓய்வு கிடைத்த பிறகு நம்மை எழுப்பிவிடுமாம். மூளையானது மெலட்டானின் என்னும் ரசாயனம் சுரப்பதை நிறுத்தத் துவங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும். அதைக் கண்காணித்து இந்தக் கருவி இயக்கப்படுகிறதாம். அம்மாடியோவ்.
No comments:
Post a Comment