நீங்கள் எந்த நிறுவனம் தொடங்கினாலும் உங்களுக்கென்று ஒரு logo இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களை ஒரு நிறுவனமாகவே ஏற்ருகொள்ளது இந்த உலகம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நண்பன் என்னிடம் வந்து "மாப்ள ஒரு கம்பெனி க்கு Logo ஒன்று டிசைன் பண்ணி தரனும் முடியுமா" என்று கேட்டான். நானும் " என்ன கம்பெனி என்று சொல்லு மாப்ள" என்றேன் .
" எங்க வடை கடைக்கு "என்றான்
கோபமும் , ஆச்சர்யமுமாக " என்ன நக்கலா ? " என்று கேட்க , அவன் விளக்கம் கொடுத்தான்.
" மாப்ள ஒரு கார்ப்பரேட் கம்பெனி கான்டீன் வைக்கமுடியுமானு கேட்ருக்காங்க அதுக்கு தான் "என்றான்
இப்படி நீங்கள் ஒரு விசிடிங் கார்டு அடிப்பதாக இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு logo வேண்டும். நீங்கள் விரும்பும் டிசைன் உங்களுக்கு அமைவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் . இந்த சிக்கலில் இருந்து ஒரு இணையதளம் உங்களை காப்பற்றுகிறது. Browsing பண்ணும் அளவுக்கு computer அறிவு இருந்தால் போதும், உங்கள் logo வை நீங்களே design செய்துவிடலாம் .
இணையத்தின் பெயரை போலவே டிசைன் செய்வது மிக எளிது. முற்றிலும் இலவசம்.
இங்கே http://www.logoease.com/
No comments:
Post a Comment